'தமிழ்நாட்டின் மகுடங்களில் ஐஐடி மெட்ராசும் ஒன்று' - டி.ஆர்.பி. ராஜா பாராட்டு!
தமிழ்நாட்டின் மகுட நகைகளில் ஒன்றாக ஐஐடி மெட்ராஸ் விளங்குவதாக, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சி.எஸ்.ஆர் மற்றும் தொழில்நுட்பம் நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
தமிழ்நாட்டின் மகுட நகைகளில் ஒன்றாக ஐஐடி மெட்ராஸ் விளங்குவதாக, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சி.எஸ்.ஆர் மற்றும் தொழில்நுட்பம் நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
ஐஐடி மெட்ராஸ் வர்த்தக சமூக பொறுப்புணர்வு மற்றும் தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்சியை ஊக்குவிப்பதற்கான விக்ஸித் பார்த 2047 கருத்தரங்கை நடத்தியது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஐஐடி தொழில்நுட்பம் சார்ந்த கூட்டு முயற்சிக்கு ஏற்ற துறைகளை வழிகாட்டியது.
மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி, டீன் அஸ்வின் மகாலிங்கம், கல்வியியல் மேம்பாடு பிரிவி சி.இ.ஓ. கவிராஜ் நாயர், வர்த்தக உறவுகள் துணைத்தலைவர் வசுதா நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுத்துறை நிறுவன தலைவர்கள், வர்த்தக சமூக பொறுப்பு பிரிவு தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
“மாநிலத்தின் மகுட நகைகளில் ஒன்றாக ஐஐடி மெட்ராஸ் திகழ்கிறது. இந்த வர்த்தக சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிகழ்ச்சி முக்கியமானது. தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு இடையிலான இணைப்பு மிக முக்கியம். அரசு இடைவெளிகளை கண்டறிந்து அவற்றை நிரப்ப முயற்சிக்கிறது. சமூகத்திடம் இருந்து இதற்கான தேவை இருக்கிறது. அரசு மற்றும் தொழில்துறையிடம் எண்ணம் இருக்கிறது. இதை இணைப்பது முக்கியம். சி.எஸ்.ஆர் நிதி பயனாட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது,” என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும் போது கூறினார்.
“மாநில வளம் மற்றும் திறமைகளை பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதியை தமிழ்நாட்டில் பயன்படுத்த வேண்டும். அரசின் கவனமும் முக்கியம். ஆய்வுக்கு நிதி அளிப்பதும் முக்கியம். எரிசக்தி பற்றாக்குறை தொடர்பாக பிரச்சனை என்றால், ஐஐடி மெட்ராஸுக்கு வந்து தீர்வு பெற்று தொழில்துறையை அணுக முடியும் என எனக்குத்தெரியும்,” என்றும் அமைச்சர் கூறினார்.
“சி.எஸ்.ஆர் மாற்றத்தை கொண்டு வரக்கூடியது. அதிலும், குறிப்பாக கண்டறிதல் நோக்கில் பயன்படுத்தப்படும் போது மிகவும் பயனுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பலன்கள் நீடித்த வளர்ச்சி போன்ற பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டாம் அடுக்கு நகரங்களில் சுற்றுச்சூழல் நட்பான புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் ஐஐடி மெட்ராசின் கார்பன் ஜீரோ சாலஞ்சை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதிலிருந்து 25 ஸ்டார்ட் அப்கள் உருவாயின,” என்று ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சி.எஸ்.ஆர். துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு டெக் பார் டுமாரோ சிஎஸ்.ஆர் விருதுகள் வழங்கப்பட்டன.
“சமுக தாக்கம் மற்றும், பொது நலனுக்காக தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள ஐஐடி மெட்ராஸ், 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொத்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக,“ பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்தியாவின் துடிப்பான ஸ்டார்ட் அப் சூழலை வளர்த்தெடுக்க சி,எஸ்.ஆர் பயன்பாடு, ஹார்வேர்டு போன்ற உலகத்தரமான கல்வி நிறுவனத்தை உருவாக்க தொழில்துறையுடன் இணைந்து செயல்படுவது, எதிர்கால உற்பத்தி துறைக்கான திறன்கள் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
Edited by Induja Raghunathan