Stock News: இந்தியப் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - காரணம் என்ன?
சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச போக்குகளின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 215.59 புள்ளிகள் சரிந்து 81,917.53 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 49.45 புள்ளிகள் சரிந்து 24,718.85 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தை இறங்கு முகமாக இருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 384.20 புள்ளிகள் (0.47%) சரிந்து 81,748.92 ஆகவும், நிஃப்டி 89.90 புள்ளிகள் (0.36%) வீழ்ச்சி கண்டு 24,678.40 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் நெகட்டிவாகவே நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், ஷாங்காய் பங்குச் சந்தையில் மட்டுமே சாதகமான சூழல் நிலவுகிறது. ஹாங்காங், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவுகிறது. அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் தயக்கத்தின் எதிரொலியாகவும் இந்திய பங்குச் சந்தையில் தற்போது வீழ்ச்சி நிலவுகிறது. அதேபோல், பணவீக்க விகித தரவுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
இன்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
பவர் கிர்டி கார்ப்பரேஷன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
ஐடிசி
எஸ்பிஐ
ஆக்ஸிஸ் பேங்க்
எல் அண்ட் டி
இன்ஃபோசிஸ்
விப்ரோ
டாடா மோட்டார்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து ரூ.84.03 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan