இந்தியாவிலேயே முதல் முறை: சென்னையில் ஆளில்லாத பிரியாணி கடை - என்ன ஸ்பெஷல்?

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பிவிகே ஆளில்லாத பிரியாணி டேக்அவுட்டை திறந்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை: சென்னையில் ஆளில்லாத பிரியாணி கடை - என்ன ஸ்பெஷல்?

Thursday March 16, 2023,

2 min Read

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பிவிகே ஆள் இல்லாத பிரியாணி டேக்அவுட்டை திறந்துள்ளது. இந்தக் கடையின் சிறப்பு அமசங்கள் குறித்து பார்ப்போம்.

வெளிநாடுகளில் மால்கள், பெட்ரோல் பங்க், வால்மார்ட் போன்றவற்றில் ஊழியர்களே இல்லாமல் வாடிக்கையாளர்களே தங்களுக்கு தேவையான பொருட்களை பில் போட்டு, அதற்கான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தக்கூடிய ஸ்டோர்கள் ஏராளமாக உள்ளன. ஏன் சில வங்கிகள் கூட ஊழியர்களே இல்லாமல் முற்றிலும் தானியங்கி முறையில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இப்போது இந்த அதிநவீன டேக்அவுட் சிஸ்டம் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் நம்ம சென்னையில் பிரியாணி பிரியர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக ஆளே இல்லாத பிரியாணி டேக்அவே திறக்கப்பட்டுள்ளது.

ஆளில்லாத பிரியாணி கடை:

சென்னையை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப்பான பிவிகே பிரியாணி, ஒரிஜினல் கல்யாண ஸ்டைல் பிரீமியம் பிரியாணியை விற்பனை செய்து வருகிறது. முற்றிலும் பண்ணையில் இருந்து கிடைக்கக்கூடிய புதிய காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றைக் கொண்டு மணமணக்க சமைக்கப்படும் பிவிகே பிரியாணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையிலும், நவீனமாக்கும் விதமாகவும் சென்னையில் முதல் ஆள் இல்லாத பிரியாணி டேக்அவே-யை தொடங்கியுள்ளது. கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா டேக்அவே திறக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே செம்ம ஃபேமஸாகி வருகிறது.

தலைமை நிர்வாக அதிகாரி ஃபஹீம் கூறுகையில், “இந்தியாவின் முதல் ஆளில்லா டேக்அவே ஆர்டரிங் வசதியைத் தொடங்கியுள்ளோம். சென்னை முழுவதும் இதேபோல் 12 சென்டர்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பின்னர் இந்தியா முழுவதும் இதனை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அடுத்ததாக BVK ஆப் மூலமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 60 நிமிட டெலிவரியை உறுதிபடுத்த திட்டமிட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறை:

இந்தியாவிலேயே முதன் முறையாக பிரியாணி பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை தரும் வகையில் பிவிகே பிரியாணி டேக்அவே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேக்அவே-க்குள் பசியுடன் நுழையும் பிரியாணி பிரியர்களுக்கு பசியை தணிக்க மட்டுமல்ல, விரைவாகவும் வித்தியாசமாகவும் ஆர்டர் செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

bvk

உங்கள் ஆர்டரை 32" கவர்ச்சிகரமான மற்றும் தெளிவான டிஸ்ப்ளேவில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் ஆர்டர் செய்தற்கான தொகையை கார்டு அல்லது UPI மூலம் செலுத்தலாம். உடனே உங்கள் ஆர்டர் டெலிவரிக்கான கவுண்ட்டவுன் டைமர் ஓட ஆரம்பிக்கும். அப்படியே அதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தால், டைம் சட்டென நின்ற உடனே உங்கள் ஆர்டர் பேக் ஆகி டெலிவரிக்கு வந்துவிடும்.

“எனக்கு வெயிட் பண்ண எல்லாம் நேரமில்ல” என்பவர்கள், உங்களுக்கு பிடித்த பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டு வாக்கிங் அல்லது ஜாக்கிங் சென்றுவிட்டு கூட திரும்ப வந்து எடுத்துக்கொள்ளலாம்.

பிவிகே பிரியாணி ஸ்டார்ட் அப்:

2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிவிகே பிரியாணி ஸ்டார்ட்அப் ஆரம்பத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் தற்போது வாடிக்கையாளர்களின் விரும்பமான நிறுவனமாக மாறியுள்ளது. இஸ்லாமிய திருமண பாணியில் தனித்துவமான மசாலாப் பொருட்களை மற்றும் ஃப்ரெஷனா இறைச்சியைக் கொண்டு மணமும், சுவையும் நிறைந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது.

bvk

பிவிகே பிரியாணியைப் பொறுத்தவரை பிரியாணிக்குத் தேவையான மசாலா முதல் இறைச்சி வரை அனைத்துமே தினசரி வாங்கப்பட்டு, ஃப்ரெஷாக சமைக்கப்படுவதாக உறுதியளிக்கிறது. தற்போது சென்னை முழுவதும் 60 நிமிடத்திற்குள் பிரியாணி டெலிவரி செய்து வரும் இந்நிறுவனம், விரைவில் தனது டெலிவரி நேரத்தை 30 நிமிடமாக குறைக்க திட்டமிட்டு வருகிறது.

www.thebvkbiryani.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தோ அல்லது கூகுள் பிளே மற்றும் IOS ஆப் ஸ்டோரில் கிடைக்கும் "The BVK பிரியாணி" என்ற செயலிலோ ஆர்டர் செய்யலாம். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato ஆகிய ஆப்களிலும் கிடைக்கிறது.