ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய விவசாயி மகன் - யார் இந்த தன்வீர் சங்கா?
ஆஸ்திரேலிய அணியில் 19 வயது ஸ்பின்னர் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார், பஞ்சாபை பூர்விகமாகக் கொண்டுள்ள ஜோகா சிங் சங்காவின் 19 வயது மகன் தன்வீர் சங்கா. வரும் பிப்ரவரியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள T20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார் தன்வீர் சங்கா. அவர் லெக் ஸ்பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1997ல் தன்வீரின் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவரது அப்பா முதலில் அங்கு விவசாய வேலைகளைச் செய்துள்ளார். இப்போது வாடகை கார் ஓட்டி வருகிறார். அவரது அம்மா உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார்.
தன்வீர் 10 வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் அளவிலும், அண்டர் 19 அணிக்காகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் தேசிய அணியில் சர்வதேசப் போட்டியில் விளையாட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாவது இது இரண்டாவது முறை.
![தன்வீர் சங்கா](https://images.yourstory.com/cs/18/052f2d502b0911ebbc3b19999bad6158/Tanveer-Sangha-1611985968232.jpg?fm=png&auto=format)
“அணியில் நான் விளையாட தேர்வாகியுள்ளேன் என்ற செய்தியை அறிந்ததும் நான் நிலவைத் தொட்டு விட்டதாகவே உணர்ந்தேன். அதை நிஜம் என்று நம்ப சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். 19 வயதில் விளையாட வாய்ப்பு கிடைப்பதெல்லாம் வரம்,” என அணியில் தேர்வாகியுள்ள அனுபவத்தை பகிர்கிறார்,” தன்வீர்.
தன்வீர் ஒரு இயற்கையான விளையாட்டு வீரர். அவர் வளர்ந்து வரும் கைப்பந்து, ரக்பி மற்றும் கபடி விளையாடியுள்ளார். தன்வீருக்கு 10 வயதாக இருந்தபோது கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார். அவருக்கு 12 வயதாக இருந்தபோது, அவரை உள்ளூரில் பெரியவர்களுக்கான கிரிக்கெட் அணிகளில் விளையாடச் செய்தேன், என்று அவரது தந்தை ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்தார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஃபவாத் ஆலமை (Fawad Alam) தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளதாக தன்வீர் தெரிவித்துள்ளார்.
"இது பாகிஸ்தானுக்கு எதிரான யு -16 தொடரின் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தின் போது (ஃபவாத் தன்வீரைக் கண்டபோது) அவரை பார்த்தேன். அன்று முதல், அவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்,” என்று அவர் கூறினார்.