ஆன்லைன் பயண மோசடிகளுக்கு அதிகம் உள்ளாகும் இந்தியர்கள் - 77% பேர் 80 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு!

ஆன்லைன் பயண மோசடிகளுக்கு அதிகம் உள்ளாகும் இந்தியர்கள் - 77% பேர் 80 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு!

Tuesday May 23, 2023,

2 min Read

கோவிட் சூழலுக்கு பிறகு நாட்டில் சுற்றுலா செல்வது அதிகரித்து வரும் நிலையில், இந்தத் துறையில் ஆன்லைன் பயண மோசடியும் அதிகரித்து வருகிறது என்றும், பணத்தை சேமிப்பதற்காக ஆன்லைனில் விடுமுறை பயணங்களை முன்பதிவு செய்பவர்களில் கணிசமானோர் ஏமாற்றப்படுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

McAfee Corp வெளியிட்டுள்ள பாதுகாப்பான பயணங்கள் அறிக்கையில் பங்கேற்றவர்களில், 51 சதவீத இந்திய பயனாளிகள் பயண ஏற்பாடு முன்பதிவு மூலம் பணம் சேமிக்க முயற்சிக்க போது, ஆன்லைன் மோசடிகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களில் 77 சதவீதம் பேர், ஆயிரம் டாலர்களுக்கு (ரூ.83,000 மேல், பணத்தை பயணத்திற்கு முன்பாகவே இழந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
air travel

இந்தியாவில் இருந்து 1,010 பேர் உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து 7,000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களில் 66 சதவீதம் பேர் இந்த ஆண்டு உள் நாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், 42 சதவீதம் பேர் வெளிநாட்டு பயணம் செல்ல விரும்புவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இன்றைய பொருளாதாரச் சூழலில், இந்தியர்களில் பலரும் பணத்தை சேமிக்க ஆன்லைனில் தள்ளுபடி டீலை பெற விரும்புவதாகவும் (54%), விரைவாக டீலை பெற விரும்பம் கொண்டுள்ளதாகவும் (50%), புதிய பதிவு இணையதளத்தை முயற்சிக்க தயாராக உள்ளதாகவும் (44%) தெரிவிக்கும் இந்த அறிக்கை, 47% புதிய இடத்திற்குச் செலவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறது.

பயண மோசடிகள் பலவிதமாக நடைபெறுகின்றன.

27 சதவீத இந்தியர்கள் ஏமாற்று நோக்கிலான இணையதளங்களால் பணத்தை செலுத்த நேர்ந்திருப்பதாகவும், 36 சதவீதம் பேர் ஆன்லைன் பதிவின் போது அடையாளத்திருட்டிற்கு உள்ளானதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களில் 13 சதவீதம் பேர் பாஸ்போர்ட் தகவல்களையும், 23 சதவீதம் பேர் இதர தனிப்பட்ட அடையாள தகவல்களையும் அளித்துள்ளனர்.

வை-பை வலைப்பின்னலை பயன்படுத்துவது, விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் இலவச சார்ஜிங் சேவையை பயன்படுத்துவது அல்லது டிஜிட்டல் கணக்கில் இருந்து முழுமையாக வெளியேறாதது உள்ளிட்ட குற்றத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய செயல்களில் பெரும்பாலானோர் பயணத்தின் போட்டு ஈடுபடுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

பயண மோசடி தொடர்பான ஆபத்துகளை பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், 46 சதவீதம் பேர் இணையத்தை பயன்படுத்தும் போது தங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தாலும், இணையத்தில் தங்கள் அடையாள பாதுகாப்பை கண்காணிக்கும் சேவைகளை 61 சதவீதத்தினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மேலும், 59 சதவீத இந்தியர்கள் பிக்பாக்கெட் தாக்குதல் போன்றவற்றை விட, டிஜிட்டல் தாக்குதல் குறித்து கவலைக் கொண்டிருப்பதாகவும், 94 சதவீதம் பேர் பயணத்தின் போது தங்கள் அடையாளத் தகவல்கள் தாக்குதலுக்கு உள்ளாவது குறித்து கவலை கொண்டுள்ளனர் என்பதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

எனினும், இந்த இடர்கள் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைய அரட்டையில் ஈடுபடுவதை தடுக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. 70 சதவீதம் பேர் பயணத்தின் போது போனை பயன்படுத்துகின்றனர். 69 சதவீதம் பேர் சமூக ஊடகம் பயன்படுத்தும் நிலையில், 52 சதவீதம் பேர் ஆன்லைன் வங்கிச்சேவை மற்றும் 41 சதவீதம் பேர் ரொக்க செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan