Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் முதல் ‘108 ஆம்புலன்ஸ்’ பெண் ஓட்டுனரை நியமித்த தமிழக அரசு!

இந்தியாவின் முதல் ‘108 ஆம்புலன்ஸ்’ பெண் ஓட்டுனரை நியமித்த தமிழக அரசு!

Tuesday September 01, 2020 , 2 min Read

‘108 ஆம்புலன்ஸ் சேவை’-ன் முதல் பெண் ஓட்டுனரை நியமித்துள்ளது தமிழக அரசு. இது நாட்டிலேயே முதல் என்றும், மாநிலத்தின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


எம்.வீரலட்சுமி, ‘108 ஆம்புலன்ஸ்’-ன் முதல் பெண் ட்ரைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே இவர் தான் முதல் அவசர ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுனர் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த வீரலட்சுமி, தற்போது திருவொற்றியூரில் வசித்து வருகிறார். வீரலட்சுமி மற்றும் அவரது கணவரும் கார் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ட்ரைவராக இருக்கும் வீரலட்சுமிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் எண்ணம் இருந்துள்ளது.

வீரலட்சுமி

வீரலட்சுமி (பட உதவி: Zee news)

அதனால் அண்மையில் தமிழக அரசின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்காக விண்ணப்பம் போட்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகவும் பணியாற்றி, கொரோனா உட்பட பல்வேறு நோயாளிகளை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுள்ளார்.


இந்நிலையில், நேற்று தமிழக முதலமைச்சர் 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அதற்கான ஓட்டுனர்களையும் நியமித்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது,

“இந்தியாவிலேயே முதல் 108 ஆம்புலன்ஸ் வாகன பெண் ஓட்டுனராக வீரலட்சுமிக்கு பணி நியமன அறிவிப்பு வெளியிட்டார். மேலும் வீரலட்சுமி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ட்ரைவராக பணிபுரிவார்.

சேவை மனப்பான்மை கொண்ட வீரலட்சுமி ஆம்புலன்ஸ் ஓட்டுவது சவாலாக இருப்பினும் அதை சமூக அக்கறையுடன் செய்ய நினைக்கிறார்.

“ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. துறை ரீதியாகவும், குடும்பத்தினரும் எனக்கு முழு ஆதரவு இருக்கிறது. எனவே பணியில் ஈடுபாடுடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்,” என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீரலட்சுமியை பலரும் பாராட்டி வருகின்றனர். 2018ஆம் ஆண்டு கயல்விழி என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தமிழக அரசால் பணி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் 108 ஆம்புலன்சின் முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை வீரலட்சுமி தற்போது பெற்றுள்ளார்.

edapaddi

உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளுடன் கூடிய 90 ஆம்புலன்ஸ்கள், அரசு ரத்த வங்கி சேவைக்காக ரத்த மாதிரிகளை கொண்டு செல்லும் 10 ஹை-டெக் வாகனங்கள், மற்றும் பொழுதுபோக்கு ஊடக சேனல் ஒன்று நன்கொடை அளித்துள்ள 18 ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து வாகனத்தையும் முதலமைச்சர் தொடக்கிவைத்தார்.

ஏற்கனவே மார்ச் 24 அன்று சட்டசபையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிக்கப்பட்டு, 500 புதிய ஆம்புலன்ஸ்கள் மாநிலதில் இயக்கப்படும் என்றார். இது ரூ.125 கோடி மதிப்பில் செயல்பாட்டில் வரும் என்றும் அப்போது தெரிவித்திருந்தார். இதன் முதல் கட்டமாக தற்போது 90 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 10 ரத்த மாதிரி கொண்டு செல்லும் வாகனங்கள் தொடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20.65 கோடி மற்றும் ரூ.3.09 கோடி ஆகும்.


தகவல் உதவி: பிடிஐ