இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகள் எவை? பட்டியல் இதோ!
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி உடன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி உடன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் பற்றிய காந்தார் பிராண்ட்இசட் (Kantar BrandZ) அறிக்கையின்படி, 2014 ஆம் ஆண்டு முதல் முதலிடத்தில் இருந்த HDFC வங்கியை பின்னுக்குத்தள்ளிவிட்டு, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகள்
HDFC-யை பின்னுக்குத் தள்ளிய TCS:
காந்தார் பிராண்ட்இசட் இந்தியாவின் 2022 தரவரிசையில், உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் $45.52 பில்லியன் பிராண்ட் மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2020 முதல் 2022ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 212 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் 2014ம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்து வந்த ஹெச்டிஎஃப்சி பேங்க், இந்த ஆண்டு பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது. காந்தார் பிராண்ட்இசட் உலகளாவிலான பட்டியலிலும் டாடா கன்சல்டன்சி நிறுவனமே முதலிடம் பிடித்துள்ளது.
சமீபத்திய இந்திய தரவரிசையில் ஹெச்டிஎஃப்சி வங்கி 32.75 பில்லியன் டாலர் மதிப்புடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பிராண்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களைப் பெற்றுள்ள வங்கிகளைப் பொறுத்தவரை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 13.63 பில்லியன் மதிப்புடன் 6வது இடத்திலும், கோட்டக் மஹிந்திரா 11.9 பில்லியன் மதிப்புடன் 8வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 11 பில்லியன் மதிப்புடன் 9வது இடத்திலும் உள்ளன.
டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சியைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் $29.22 பில்லியனுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏர்டெல் $17.45 பில்லியனுடன் 4வது இடத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ் $15.35 பில்லியனுடன் 5வது இடத்திலும் எல்ஐசி $12.39 பில்லியனுடன் 7வது இடத்திலும், ஜியோ $10.7 பில்லியன் மதிப்புடன் 10வது இடத்திலும் உள்ளது.
இதற்கு முன்னதாக 2வது இடத்தில் இருந்த எல்ஐசி நிறுவனம் நடப்பு ஆண்டில் 7வது இடத்திற்கும், 7வது இடத்தில் இருந்த ஜியோ 10வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் ஸ்டார்கள்:
டாப் 75 பிராண்ட்களின் ஒட்டுமொத்த மதிப்பு 393.3 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ($3.5 டிரில்லியன்) 11 சதவீதத்தை குறிக்கிறது. 2019ம் ஆண்டுடன் ஒப்பீடும் போது 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த ஆண்டு டாப் 50 பட்டியலில் ஏராளமான ஸ்டார்ட்அப் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
காந்தார் பிராண்ட்இசட் ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலின் படி,
8.92 பில்லியன் மதிப்புடன் ஃபிளிப்கார்ட் முதலிடம் பிடித்துள்ளது. 5.52 பில்லியனுடன் பைஜூஸ் 2வது இடத்திலும், 4.83 பில்லியனுடன் ஸ்விக்கி 3வது இடத்திலும் உள்ளது. நைகா நிறுவனம் 3.72 பில்லியன் மதிப்புடன் 4வது இடத்திலும், ஓலா 3.45 பில்லியன் மதிப்புடன் 5வது இடத்திலும் உள்ளது.
நௌக்ரி 3.3 பில்லியனுடன் 6வது இடத்திலும், ஜோமேட்டோ 3.12 பில்லியனுடன் 7வது இடத்திலும் உள்ளது. ஓயோ 3.05 பில்லியனுடன் 8வது இடத்திலும் உள்ளது. இதற்கு அடுத்த அடுத்த இடங்களை ட்ரீம் லெவன், ரேஸர்பே, பே டேம் போன்ற நிறுவனங்கள் முறையே 2.86 பில்லியன், 2.5 பில்லியன், 2.36 பில்லியன் மதிப்புடன் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனத்தின் சந்தை மூலதனம் அல்லது ஒரு பிராண்டின் மதிப்பீட்டு காந்தரால் உருவாக்கப்பட்ட சந்தை ஆராய்ச்சி மதிப்புடன் பெருக்கப்படுகிறது. இறுதியாக கிடைக்கும் மதிப்பைக் கொண்டே காந்தரால் பிராண்ட் தனது தரவரிசைப் பட்டியலை தயாரிக்கிறது. இந்த ஆண்டு வெளியாகியுள்ள தரவரிசைப் பட்டியலில் பாதிக்கும் அதிகமான இடத்தை பேங்க் மற்றும் ஐ.டி.நிறுவனங்கள் பெற்றுள்ளன.
தொகுப்பு - கனிமொழி