Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்த ஆண்டின் ‘டாப் 10 உலகப் பணக்காரர்கள்’ இவங்க தான்; சொத்து மதிப்பு பட்டியல்!

எலான் மஸ்க் முதல் லாரி எல்லிசன் வரை உலகின் டாப் 10 மில்லியனர்கள் யார் யார் என்பதைப் பற்றி இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டின் ‘டாப் 10 உலகப் பணக்காரர்கள்’ இவங்க தான்; சொத்து மதிப்பு பட்டியல்!

Monday September 05, 2022 , 6 min Read

எலான் மஸ்க் முதல் லாரி எல்லிசன் வரை உலகின் டாப் 10 மில்லியனர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.

உலக அளவில் மார்க்கெட், பிசினஸ் நிலவரம் சம்பந்தமான கருத்துக்கணிப்புகள், தகவல்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள டாப் 10 உலகப் பணக்கார்கள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பு குறித்த முழு விவரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்...

Top richest people

உலகின் டாப் 10 பணக்காரர்கள்

1. எலான் மஸ்க் (அமெரிக்கா):

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் சமீபத்திய பட்டியலின் படி, டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 241 பில்லியன் டாலர்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த எலான் மஸ்க், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு பட்டம் பெற்றுள்ளார்.

அதன் பின்னர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், பிசினஸ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக Zip2 என்ற ஆன்லைன் வழிகாட்டுதல் சேவை நிறுவனத்தை தொடங்கினார்.

Rich man

2014ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் அதிகபட்ச பங்குதாரராக மாறிய எலான் மஸ்க், தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓவாகவும், ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜி என அழைக்கப்படும் ஸ்பெஸ் நிறுவனத்தின் சிஇஓவாகவும் செயல்பட்டு வருகிறார். 2021ம் ஆண்டு முதல் உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 2022ல், மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்குவதற்கான பேரத்தை ஆரம்பித்தார். ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்க முடிவெடுத்த எலான் மஸ்க், டெஸ்லாவின் 9.6 மில்லியன் பங்குகளை 8.5 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தார். இதனால் விமர்சன ரீதியாகவும், வழக்காகவும் எலான் மஸ்க் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தற்போது வரை அவர் தான் உலகிலேயே நம்பர் ஒன் பணக்காரராக நீடித்து வருகிறார்.

டெஸ்லா நிறுவனத்தின் 130 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 16 சதவீத பங்குகளை எலான் மஸ்க் கைவசம் வைத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் $46.9 பில்லியன் மதிப்பிலான சொத்துக்களையும், தி போரிங் நிறுவனம் மூலம் $3.33 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களையும், ரொக்கமாக 11.2 பில்லியனையும் கைவசம் வைத்துள்ளார்.

2. ஜெஃப் பெசோஸ் (அமெரிக்கா):

அமேசான் நிறுவனத்தின் செயல் தலைவரான 58 வயது ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் இவரது நிகர மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

1994ம் ஆண்டு Amazon.com என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் புத்தக விற்பனை தளம், தற்போது ஆடைகள், அழகு சாதன பொருட்கள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

Amazon Founder and CEO Jeff Bezos

Amazon Founder and CEO Jeff Bezos

அமேசான் ஓனர்ஷிப்பாக 140 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 10 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளார். ஜெஃப் பெசோஸ் தனது விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தில் 9.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் மூலம் 250 மில்லியன் டாலர்கள் வரையிலான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். ரொக்கமாக 14.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார்.

3. கெளதம் அதானி (இந்தியா):

மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, கடந்த சில வருடங்களாகவே அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார்.

அதானி குழுமம் இப்போது 5ஜி அலைக்கற்றைக்கு ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது.

Rich man

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டான லூயி விட்டன் நிறுவனத்தின் சிஇஓ ஆன பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 141 பில்லியன் டாலர்கள் ஆகும்.

மார்ச் 2022 பங்குச் சந்தைத் தாக்கல்களின்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன்ஸ் ஆகியவற்றில் 75% பங்குகளை கெளதம் அதானி வைத்துள்ளார். அதானி மொத்த எரிவாயுவில் சுமார் 37%, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 65% மற்றும் அதானி பசுமை எரிசக்தியின் 61% ஆகியவற்றையும் கைவசம் வைத்துள்ளார்.

4. பெர்னார் அர்னால்ட் (பிரான்ஸ்):

உலகிலேயே டாப் பிராண்ட்டான லூயி விட்டன் (louix Vuitton) நிறுவனத்தின் சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, இவரது சொத்து மதிப்பு, 132 பில்லியன் டாலர்கள் ஆகும். பிரான்சின் மிகப்பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்களைத் தயாரிக்கும் LVMH மோட் ஹென்னெஸி லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இது லூயிஸ் விட்டன் தோல் பொருட்கள், TAG ஹியூயர் வாட்ச் மற்றும் டோம் பெரிக்னான் ஷாம்பெயின் உள்ளிட்ட தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

Rich man
பெர்னார்ட் எல்விஎம்எச் நிறுவனத்தின் 119 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 97.5 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளார். மொய்லிஸ் & கம்பெனி ஈக்விட்டி $21.8 பில்லியன் டாலர்கள், ஹெர்ம்ஸ் ஈக்விட்டியின் வெளியிடப்படாத பங்குகள் மற்றும் ரொக்கமாக $9.13 பில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார்.

5. பில்கேட்ஸ் (அமெரிக்கா):

1955ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த பில்கேட்ஸ், தனது 20வது வயதில் நண்பருடன் சேர்ந்து தொடங்கிய நிறுவனம் மைக்ரோசாப்ட். வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் 168 பில்லியன் டாலர்கள் ஆகும். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு, 114 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Rich man

உலகமயமாக்கலைத் தொடர்ந்து, கணினித்துறையின் அசுர வளர்ச்சியால் கிடுகிடுவென உயர்ந்தது அவரது சொத்து மதிப்பு. ஆரம்பம் முதலே உலக அளவில் உதவி செய்வதில் முன்னோடியாக திகழ்ந்த அவருக்கு, 1994ல் தேர்ந்த இணையானார் மெலிண்டா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், பில்கேட்ஸ் தம்பதி தொடங்கியதுதான் 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்'. இவர்களது அறக்கட்டளை சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் $29.1 பில்லியன் மதிப்புள்ள 1.3 சதவீத பங்குகளை கைவசம் வைத்திருக்கும் பில்கேட்ஸ், தனது பெரும்பாலான சொத்துக்களை பணமாக வைத்துள்ளார். $55.6 பில்லியன் டாலர்களை ரொக்கமாக வைத்துள்ளார். கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி மூலம் $82.4 பில்லியன் டாலர்களை கைவசம் வைத்துள்ளார்.

6. லாரி பேஜ் (அமெரிக்கா):

உலகின் மிகப்பெரிய சர்ச் இன்ஜின் ஆபரேட்டரான கூகுளின் ஹோல்டிங் நிறுவனமான ஆல்பபெட்டின் இணை நிறுவனர் லாரன்ஸ் எட்வர்ட் லாரி பேஜ், 98.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார்.

Rich man

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், 1998ல் நிறுவப்பட்டது. இது 2021ல் $258 பில்லியன் வருவாய் ஈட்டியதாக அறிவித்தது. குழுவின் பிரிவுகளில் Gmail, Android மற்றும் YouTube ஆகியவை அடங்கும். இவர் கூகுள் நிறுவனத்தின் $91.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 6 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளார். ரொக்கமாக 14.6 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளார்.

7. வாரன் பஃபெட் (அமெரிக்கா):

முதலீட்டு மன்னன் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் 96.9 பில்லியன் டாலர்களுடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் சிஇஓவாக தனது 91 வயதிலும் நீடித்து வருகிறார்.

1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 1965 ஆம் ஆண்டு முதல் சந்தை மதிப்பில் 20% கூட்டு வருடாந்திர ஆதாயத்தை வழங்கிய முதலீட்டுக் குழு என்ற பெருமை பெற்றது. ஒமாஹா, நெப்ராஸ்காவை தளமாகக் கொண்ட Geico, Clayton Homes மற்றும் Dairy Queen, கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் வாரன் பஃபெட் முதலீடு செய்துள்ளார்.

Rich man
14 வயதில் பங்குச்சந்தையில் கால் பதித்த இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு $96.9 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் $113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 16 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளார். $1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரொக்கமாக வைத்துள்ளார்.

8. செர்ஜி பிரின் (அமெரிக்கா):

புளூம்பர்க் பில்லியனர்ஸின் தகவல்படி, 48 வயதான பிரின் 94 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்டுள்ளார். 1998ஆம் ஆண்டு லாரி பேஜ் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை நிறுவிய இவர்கள் இருவரும் 2019-ம் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

Rich man

தற்போது கூகுள் நிறுவனத்தின் பங்குதாரராக நீடித்து வரும் இவர், அதன் மூலமாக 39.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களையும், 14.4 பில்லியன் அளவிலான ரொக்கத்தையும் கொண்டுள்ளார்.

9. லாரி எல்லிசன் (அமெரிக்கா):

லாரன்ஸ் ஜோசப் எலிசன் ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர், நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ ஆவார். கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, இவரது நிறுவனம் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ள இவரது சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Rich man

உலகின் பெரு முதலீட்டாளர்கள் மற்றும் கொடை வள்ளல்களில் ஒருவராக அறியப்பட்டவர். 77 வயதாகும் லேரி எலிசன் ஆரக்கிள் நிறுவனத்தில் சுமார் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பர்சனல் கம்பியூட்டர் வர்த்தகத்தில் தீவிரமாக இருந்த நிலையில் ஆரக்கிள் எண்டர்பிரைசர்ஸ் மென்பொருள் துறையில் 1977 முதல் இயங்கி வருகிறது. மொத்த சொத்து மதிப்பில் 75 சதவீதம் ஆரக்கிள் நிறுவன பங்குகளாக உள்ளது,

டெக்சாஸை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் 40% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார். ரொக்கமாக $17.4 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளார்.

10. ஸ்டீவ் பால்மர் (அமெரிக்கா):

Rich man

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10ம் இடம் பிடித்துள்ள ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு, 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2000 முதல் 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாஃட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ஸ்டீவ் பால்மர்.

இவர் என்.பி.ஏ வின் கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்செல்ஸ் கிளிப்பர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகள் மூலமாக 81.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். பணமாக 5.78 பில்லியன் டாலர்களையும், பிற சொத்துக்களின் வகையில் 3.16 பில்லியன் டாலர்களையும் வைத்துள்ளார்.