1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளித்த டிசிஎஸ்; அடுத்த நிதியாண்டிலும் அசத்தல் வாய்ப்பு!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் 2022ம் ஆண்டில் 1 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு 40 ஆயிரம் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் 2022ம் ஆண்டில் 1 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ளது. அடுத்த ஆண்டு 40 ஆயிரம் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டு வருகிறது.
கூடுதலாக, கடந்த நிதி ஆண்டு மார்ச் 2022ல் முடிவடைந்த நிலையில், 1,03,546 பேரைச் சேர்த்து சாதனை படைத்தது, இதேபோல், 2021ம் ஆண்டிற்கான நிதி ஆண்டில் 40,000 பேருக்கு மேல் பணியமர்த்தப்பட்டது. மேலும், இந்நிறுவனம் ஒரே காலாண்டில் மட்டும் 35 ஆயிரத்து 209 பேரை பணியமர்த்தியுள்ளது.
மொத்த பணியமர்த்தல் விவரங்கள்:
டிசிஎஸ் நிறுவனம் ஆனது கடந்த நிதியாண்டில் மட்டும் 78 ஆயிரம் பிரஷ்ஷர்களுக்கு பணி வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டில் 40,000 ஆக இருந்தது. ஆண்டின் தொடக்கத்தில் 8.6 சதவீதமாகவும், டிசம்பர் 2021 காலாண்டில் 11.9 சதவீதமாகவும் இருந்த காலாண்டில் நிறுவனத்தின் ஆட்கள் வெளியேறுவது 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ், அதிகளவிலான பணியமர்த்தலை செய்தாலும், திறமைக்கு பற்றாக்குறையே தொடரும் என்றும் கூறியுள்ளது. நிறுவனங்களின் வலுவான பணியமர்த்தல் திட்டங்கள் கொடுக்கப்பட்டால், 2023ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணியாளர்கள் வெளியேறும் விகிதமானது குறையத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியாண்டு கணக்கு முடிவில், டிசிஎஸ் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 195 ஆக உள்ள போதிலும், எனினும் பிரெஷ்ஷர்களை நடப்பு நிதியாண்டில் பணியமர்த்துவதிலும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது.
நிதி நிலை செயல்பாடு:
மார்ச் 2022ம் ஆண்டிற்கான முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 50,591 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் வருவாயை விடவும் 15.8 சதவீத அதிகமாகும். இதே கடந்த நிதியாண்டில் 1,91,754 கோடி ரூபாய் வருவாயினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 16.8 சதவீதம் அதிகமாகும்.
தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நிதி ஆண்டில் இடைப்பட்ட வளர்ச்சி மற்றும் அதிகபட்ச வருவாயைச் சேர்ப்பதன் மூலம், FY 22 ஐ ஒரு வலுவான வகையில் நிறைவு செய்கிறோம். எங்களின் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் உருமாற்றப் பயணங்களில் பங்கேற்பை அதிகரிப்பது மற்றும் எல்லா நேரத்திலும் உயர்ந்த ஆர்டர் புத்தகம் தொடர்ந்து வளர்ச்சிக்கு வலுவான மற்றும் நிலையான அடித்தளத்தை வழங்குகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் 11.3 பில்லியன் பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான வருவாய் புத்தகத்திலும் கையொப்பமிட்டுள்ளது.