இந்தியாவின் பணக்கார குழந்தை நட்சத்திரம் - 8 கோடி ரூபாய் சொத்து ஈட்டியது எப்படி?
இந்தியாவிலேயே பணக்கார குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா சினிமாவில் நடித்ததன் மூலமாக 8 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்.
இந்தியாவிலேயே பணக்காரக் குழந்தை நட்சத்திரமான ரிவா அரோரா சினிமாவில் நடித்ததன் மூலமாக 8 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையானது உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்குத் துறைகளில் ஒன்றாகும். உண்மையில், இந்தியத் திரைப்படத் துறை 2022ம் ஆண்டில் ரூ.172 பில்லியனுக்கும் மேலாக அதிவேகமாக வளர்ந்துள்ளது. திரையரங்குகளைத் தவிர, தொடர்ந்து விரிவடைந்து வரும் OTT பிளாட்பார்ம்கள் நாடு முழுவதும் உள்ள 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் கவனத்தை கவர்ந்திழுத்து வருவதே திரைத்துறையின் அபார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.
சினிமா துறை என்பதே கோடிகளில் பணம் புரளும் இடமாகும். குறிப்பாக ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை ஹீரோக்களின் சம்பளம் மட்டுமே பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் சில ஹீரோயின்கள் பற்றிய செய்திகளை பார்க்க முடிகிறது.
அப்படியிருக்கையில், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வரும் ஒருவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டுமே 8 கோடி ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
யார் அந்த குழந்தை நட்சத்திரம்?
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் ஒரு படத்திற்கு சில நூறு ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலிருந்து சினிமா துறையில் நிதி பலமடங்கு வளர்ந்துள்ளது. இப்போதெல்லாம், மிகவும் பிரபலமான குழந்தை நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பதற்காக லட்சங்களில் சம்பளம் பெறுகிறார்கள். அத்துடன் சோசியல் மீடியா இன்புளூயன்சிங், விளம்பரங்கள் மற்றும் பிராண்டிங் மூலமாகவும் பணம் சம்பாதிக்கிறார்கள்.
அப்படித்தான் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குழந்தை நட்சத்திரமான ’ரிவா அரோரா’ ரூ.8 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். உரி மற்றும் சத்ரிவாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரமான ரிவா, தற்போது இந்தியாவின் பணக்கார குழந்தை நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.
பல்வேறு அறிக்கைகளின் படி, ரிவா அரோராவின் சொத்து மதிப்பு $1 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 8.2 கோடி ரூபாயாகும். இது இந்தியாவில் உள்ள மற்ற எல்லா குழந்தை நடிகர்களையும் விட அதிகமாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2023ம் ஆண்டில் தான் ரிவா இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றார். ஏனெனில் இதற்கு முன்னதாக ரூ.10 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த சாரா அர்ஜுன் இந்த ஆண்டோடு 18 வயதை அடைந்துவிட்டதால், ரிவாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
சோசியல் மீடியா பிரபலம்:
ரிவா அரோரா ஒரு நடிகை என்பதைத் தவிர, இன்ஸ்டாகிராமில் 11.2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதனால் சோசியல் மீடியா இன்புளூயன்சராகவும் வலம் வருகிறார். சோசியல் மீடியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் பெற்றதை கொண்டாடும் விதமாக ரிவா அரோரா 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி க்யூ3 காரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ரிவாவின் திரைப்பயணம்:
2019 ஆம் ஆண்டு வெளியான Uri: The Surgical Strike படத்தின் மூலம் ரிவா அறிமுகமானார். அறிமுக படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். பாரத், பிரிவு 375, குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் போன்ற படங்களிலும், பண்டிஷ் பேண்டிட்ஸ் மற்றும் டிவிஎஃப் ட்ரிப்ளிங் போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
ரிவா கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ரகுல் ப்ரீத் சிங் நடித்த சத்ரிவாலி படத்தில் நடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர்: இன்ஸ்டாவில் 100k ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் ‘கைரா’