இந்தியாவின் மலிவு விலை விமானச் சேவை ‘ஆகாசா ஏர்’ லோகோ அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா முதலீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஆகாஷ் ஏர் நிறுவனத்தின் லோகோ மற்றும் தீம் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஆகாஷ் ஏர் நிறுவனத்தின் லோகோ மற்றும் தீம் வெளியாகியுள்ளது.
‘ஆகாசா ஏர்’ லோகோ மற்றும் தீம்:
இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவையில் அதிகப்படியான வளர்ச்சி இருக்கும் என்பதால் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியுள்ளது. டாடாவைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின் லோகோ அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆரஞ்சு மற்றும் நீல நிறத்தில் ஆகாசா ஏர் நிறுவனத்தின் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
’இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் ஆகாயத்தையும் சூரியனையும் முன்னிலைப்படுத்தும் விதமாக 'The Rising A' என்பதை தனது தீமாக அறிவித்துள்ளது. அதாவது,
சூரியனின் வெப்பத்தை சுட்டிக்காட்டும் வகையில் ஆரஞ்சு நிறமும், ஒரு பறவை சிரமம் இல்லாமல் பறக்கத் தேவையான இறக்கையைப் போல், விமான இறக்கையின் உறுதித்தன்மையையும் குறிப்பது போல் தீம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை தொடக்கம் எப்போது?
துபாய் ஏர் ஷோவில், ஆகாசா ஏர் 72 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்தது, இது உலகளவில் மேக்ஸ் விமானத்திற்கான மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாகும். மிகக்குறைந்த விலையிலான பயணிகள் சேவையை தொடங்குவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜிசிஏவிடமிருந்து ஆரம்ப கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில், 2022 முதல் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறுவனம் சுமார் 70 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏர்பஸ்’ஸின் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் ஸ்கேரர் பேசுகையில்,
“ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்திற்காக ஆகாசாவுடன் உரையாடி வருவதாகக் கூறியிருந்த நிலையில், துபாய் ஏர் ஷோவில், இந்திய பிராண்ட், 72 737 மேக்ஸ் விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேக்ஸ் 8 ரக விமானம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இரண்டு ஆபத்தான விபத்துக்களைச் சந்தித்த பிறகு, இரண்டரை ஆண்டுகள் பறக்க இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதி அளித்த காரணத்தால் SNV ஏவியேஷன் நிறுவனம் 72 போயிங் 737 மேக்ஸ் விமானத்தை ஆர்டர் செய்துள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியப் பங்குதாரர்கள்:
புதிய ஏர்லைன்ஸ் நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவால் இணை இயக்குநரும், நிறுவனத்தின் 40% உரிமையாளரும் ஆவார். இண்டிகோவின் முன்னாள் தலைவரான ஆதித்யா கோஷ் ஆகாசா ஏர் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் ஜெட் ஏர்வேஸ் சிஇஓ வினய் துபே 15 சதவீத பங்குகளுடன் ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்க உள்ளார்.
வழித்தடங்கள்:
"நாட்டின் மிகவும் நம்பகமான, மலிவு மற்றும் பசுமையான விமான நிறுவனமாக இருக்கும் முயற்சியுடன்" இந்தியா முழுவதும் விமானங்களை வழங்க ஆகாசா ஏர் திட்டமிட்டுள்ளது.
இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், விமானப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் முக்கிய உள்நாட்டு வழித்தடங்களுக்கு ஆகாசா சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: கனிமொழி