அப்பா விவசாயி; ஜாதவ்பூர் பல்கலையில் படித்த மகனுக்கு லண்டன் ஃபேஸ்புக்கில் ரூ.1.18 கோடி சம்பளத்தில் வேலை!
தற்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிசாக் மொண்டல் என்ற மாணவர் லண்டனில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தில் 1.18 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ள செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி மற்றும் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பலரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகள் அல்லது அதிக சம்பளம் உள்ள வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜியில் எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் பிரதம் பிரகாஷ் குப்தா, ஆண்டுக்கு 1.4 கோடி ரூபாய் பேக்கேஜுடன் கூகுள் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிசாக் மொண்டல் என்ற மாணவர் லண்டனில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தில் 1.18 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ள செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார்.
யார் இந்த பிசாக் மொண்டல்?
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் இறுதியாண்டு கணினி அறிவியல் படித்து வருபவர் பிசாக் மொண்டல், பிர்பூமின் ராம்பூர்ஹாட்டின் ஒரு சாதாரண பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி, தாய் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவரது அன்றாட உழைப்பிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர உள்ளார் பிசாக் மொண்டல்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்கு தேர்வாகியுள்ள மொண்டல் செப்டம்பர் மாதம் லண்டனில் உள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“செப்டம்பரில் நான் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிக்குச் சேர உள்ளேன். இந்த வேலையை ஏற்கும் முன், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களில் இருந்து எனக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஃபேஸ்புக் வழங்கும் பேக்கேஜ் அதிகமாக இருப்பதால், ஃபேஸ்புக்கைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நினைத்தேன். இதனால் எனது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள் தங்களது மாணவர் உலகின் முன்னணி நிறுவனத்தில் பணிக்கு தேர்வாகியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியுள்ளனர்.
“எனது பேராசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நான் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன், நான் வேலை வாய்ப்பைப் பெற்ற பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்துத்து வாழ்த்து பெற்றேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ள பிஷாக், அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த ஒன்பது ஜேயு மாணவர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான ஊதியத்துடன் வெளிநாட்டு வேலைகளைப் பெற்றனர்.
தகவல் உதவி - இந்தியா டுடே | தமிழில் - கனிமொழி