வரி செலுத்தாத ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க்? வெளிவந்த அறிக்கை உண்மையா?

பல ஆண்டுகளாக வரி செலுத்தாதது அம்பலம்?!
9 CLAPS
0

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் எந்த வருமான வரியையும் செலுத்தவில்லை. இவர் மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான கோடீஸ்வரர்களில் பலர் சில ஆண்டுகளில் வருமான வரி ஏதும் செலுத்தவில்லை என்று ProPublica என்ற அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உள்நாட்டு வருவாய் சேவை பதிவுகளை மதிப்பாய்வு செய்து இந்த அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது புரோபப்ளிகா.

அதன்படி, ஜெஃப் பெசோஸ், 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் எந்தவொரு வருமான வரியையும் செலுத்தவில்லை. டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் 2018 ஆம் ஆண்டில் வருமான வரியை செலுத்தவில்லை. ப்ளூம்பெர்க் எல்பி நிறுவனர் மைக்கேல் ப்ளூம்பெர்க் மற்றும் முதலீட்டாளர்கள் கார்ல் இகான் மற்றும் ஜார்ஜ் சொரெஸ் சமீபத்திய ஆண்டுகளில் வருமான வரியின் குறைந்தபட்ச விகிதங்களை மட்டுமே செலுத்தியுள்ளனர்.

அதேநேரம் 2014 மற்றும் 2018 க்கு இடையில், வாரன் பஃபெட்டின் செல்வம் 24.3 பில்லியம் டாலராக உயர்ந்துள்ளதாகவும், அவர் 23.7 மில்லியன் டாலர் வரி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Founder and CEO Jeff Bezos

இந்த தரவுகளானது வருவாய் துறையை (IRS) தொடர்ந்து கண்காணித்து தொடர்களாக எழுதி வரும் ஒரு செய்தி நிறுவனம் அளித்தது என்று புரோபப்ளிகா கூறுகிறது. ஆனால் அந்த செய்தி நிறுவனம் தனக்குக் கிடைத்த சோர்ஸின் அடையாளம் தெரியாது என்றும் தனக்கு அனுப்பப்பட்ட தகவல்களைக் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த முரண்பட்ட தகவல்களால் சர்ச்சை எழ, ஐ.ஆர்.எஸ் கமிஷனர் சார்லஸ் ரெட்டிக் செவ்வாயன்று செனட் நிதிக் குழுவின் விசாரணையில், தனது நிறுவனம் தகவல்களின் ஆதாரம் குறித்து விசாரணை நடத்தும் எனக் கூறினார்.

ஐஆர்எஸ் விசாரணை!

இது தொடர்பாக பேசியுள்ள ஐ.ஆர்.எஸ் கமிஷனர் சார்லஸ் ரெட்டி,

“அந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களின் ஆதாரம் உள்நாட்டு வருவாய் சேவையிலிருந்து வந்தது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை உள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். ஐஆர்எஸ் பெறும் தகவல்களின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட தன்மை மற்றும் ரகசியத் தன்மை குறித்து ஒவ்வொரு அமெரிக்கரின் கவலைகளையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். கட்டுரை குறித்து நேரடியாகவோ அல்லது எந்தவொரு தனிநபரின் வரி நிலைமை குறித்தோ கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், தனியார் வரி செலுத்துவோர் தரவை முறையற்ற முறையில் வெளியிட்டதற்காக கூட்டாட்சி ஊழியர்கள் சிறைவாசத்தை எதிர்கொள்ள முடியும்," என்றுள்ளார்.

இதற்கிடையே, ப்ளூம்பெர்க் நியூஸின் தாய் நிறுவனமான ப்ளூம்பெர்க் எல்பியின் நிறுவனர் மற்றும் பெரும்பான்மை உரிமையாளர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ஆவார். இந்தத் தகவல் அவருக்கும் வாரன் பஃபெட் மற்றும் கார்ல் இகான் போன்ற அனைவரும் செய்தி வெளியிட்ட புரோபப்ளிகா நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தாங்கள் வரி செலுத்திவிட்டதாக கூறியதாக மீண்டும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

தகவல் உதவி: ப்ளூம்பர்க், ப்ரோபப்ளிகா | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world