மாம்ப்ரூனர்கள் வணிக முயற்சியில் சிறப்பிக்க உதவும் ‘கடைவீதி’ கண்காட்சி!
தாய்மார்கள் தங்களது தயாரிப்புகளையும் சேவைகளையும் விற்பனை செய்ய உதவும் ‘கடைவீதி’ எனும் குழுவின் விற்பனை கண்காட்சி சென்னையில் 7, 8ம் தேதி நடைப்பெறுகிறது.
'கடைவீதி' 'kadaiveedhi' ஒரு பிரத்யேக மாம்ப்ரூனர் முயற்சி. தாய்மார்கள் தங்களது தயாரிப்புகளையும் சேவைகளையும் விற்பனை செய்ய இந்த முயற்சி உதவுகிறது. உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் நிதிச் சுதந்திரம் பெறவும் தொழில் தொடங்கவும் உதவுவதே கடைவீதியின் நோக்கம்.
'ஸ்மார்ட் மம்மீஸ்’ 'Smart Mommies' என்கிற தனிப்பட்ட முகநூல் குழுவே இந்த முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஃபேஸ்புக் குழுவில் உலகம் முழுவதிலும் இருந்து 48,000 தாய்மார்கள் இணைந்துள்ளனர். வணிக முயற்சியில் ஈடுபடும் தாய்மார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் இவர்கள் நிதிச் சுதந்திரம் அடைய உதவும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
கடைவீதி சார்பில், சுயதொழில் புரியும் தாய்மார்கள் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தவும், பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சந்திப்பு விழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் ‘கடைவீதி’ சங்கமம் வரும் 7, 8ம் தேதி நடைப்பெறுகிறது.
2020ம் ஆண்டில் கடைவீதி முயற்சியில் புதிதாக இடம்பெற உள்ள அம்சம் என்ன?
கடந்த நான்காண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களைக் கொண்டு செயல்படும் இந்த சந்தைப் பகுதியின் சங்கமம் திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்கள் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“இந்த ஆண்டு புதிய தொழில் வாய்ப்புகளையும் நிதிச் சுதந்திரத்தையும் உருவாக்க முன்னணி கார்ப்பரேட்கள், ஐடி பூங்காக்கள், மால், சில்லறை வர்த்தக பிராண்டுகள் போன்றவை அழைப்பு விடுத்துள்ளது. 2020-ம் ஆண்டில் எங்களது முயற்சிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு விரிவடைகிறது,” என்றார் கடைவீதி நிறுவனர் சங்கீதா அருணாச்சலம்.
தொழில்நுட்பம் சார்ந்த சந்தைப்படுத்தும் திட்டமான ‘கடைவீதி’ மின்வணிகம், எக்ஸ்போ, சமூக மற்றும் அச்சு ஊடகங்கள் என தாய்மார்கள் அனைத்து வகைகளிலும் வணிக முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பளிக்கிறது.
இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?
“ஒருவர் மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்வதன் மூலமாகவே சிறப்பாக சந்தைப்படுத்த முடியும். சிறந்த வாடிக்கையாளர் அனுபவமே மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத் தூண்டுதலாக அமையும்,” என்கிறார் கடைவீதி இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப பார்ட்னர் ஜெய் தட்டை.
இவர் CXONCLOUD என்கிற தனது பிராண்ட் மூலம் புதுமையான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குகிறார். இவர் கடைவீதி சந்தைப் பகுதித் திட்டம் குறித்து தனது வாடிக்கையாளரான ‘மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்’ உடன் பகிர்ந்துகொண்ட போது இந்த உன்னத நோக்கத்தில் அவர்கள் உடனடியாக இணைந்துகொண்டனர்.
'Madras Super Store' 'மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர்' 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் புரசைவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்ட புதிய பிராண்ட் ஆகும். தரமான ஃபேஷன் பொருட்கள் அனைவரையும் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த பிராண்ட் தயாரிப்புகளின் விலை 99 ரூபாய் முதல் 999 வரை உள்ளது. இந்த பிராண்ட் சிறு வணிகங்களுடன் இணைந்து வளர்ச்சியடைவதில் ஆர்வம் காட்டுவதால் கடைவீதியில் இணைந்துள்ள மாம்ப்ரூனர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 2020-ம் ஆண்டு மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கடைவீதி சந்தைப்பகுதி மெட்ராஸ் சூப்பர் ஸ்டோரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இந்நிகழ்வில் புடவைகள், ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகள், சமையல் பாத்திரங்கள், பரிசுப் பொருட்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளைக் கொண்ட 40-க்கும் அதிகமான கடைகள் அமைக்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு பகுதியும் உள்ளது. மேலும் பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகளும் ஆச்சரியங்களும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். யுவர்ஸ்டோரி தமிழ் ‘கடைவீதி’ 8ம் பதிப்பின் மீடியா பார்ட்னராக உள்ளது.
மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும், உந்துதல் பெறவும், அனைத்திற்கும் மேலாக 2020 மாம்ப்ரூனர்களுக்கு ஆதரவளிக்கவும் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்கவும்.
ஸ்டால் புக் செய்வதற்கு +91 99620 26014 என்கிற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: Kadaiveedhi 8th Edition