30,000 ரூபாய் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு எது தெரியுமா?
சரியான பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்தால் மட்டுமே பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட முடியும்.
நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்ட விரும்புகிறீர்களா? பங்குச்சந்தையைப் பொருத்தவரை ஆயிரங்களில் முதலீடு செய்து லட்சங்களில் லாபம் பார்த்தவர்களும் உண்டு. போட்ட பணத்தை இழந்து கடனில் சிக்கி மீளமுடியாமல் தவிப்பவர்களும் உண்டு.
அப்படியானால் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்ட என்ன செய்யவேண்டும்?
முதலில் சரியான பங்குகளைத் தேர்வு செய்யவேண்டும். அடுத்தபடியாக கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் எப்போது வெளியேறவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பங்குச்சந்தையில் மல்டிபேகர் பங்குகள் (Multi bagger stocks) எனச் சொல்லப்படுவதுண்டு. அதாவது, பணத்தை வாங்குவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பங்குகளைத்தான் மல்டிபேகர் பங்குகள் என்று சொல்வார்கள்.
இப்படிப்பட்ட பங்குகளில் ஒன்று தான் Kajaria Ceramics. இதில் முதலீடு செய்தவர்களுக்கு 400 சதவீதத்திற்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது.
மல்டிபேகர் பங்குகள் – லாபம் ஈட்ட பொறுமை அவசியம்
பங்குச்சந்தை மூலம் லாபம் ஈட்ட பொறுமை அவசியம். பொறுமையைக் கைவிட்டோமானால் முதலீடு செய்துள்ள தொகையைக்கூட இழக்க நேரிடலாம். அதேபோல், சரியான பங்குகளைத் தேர்வு செய்யாமல் போனாலும் நஷ்டம் மட்டுமே மிஞ்சும். எனவே, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆய்வு செய்துவிட்டு தொடங்குவதே சிறந்தது.
23 ஆண்டுகளில் 36,000 சதவீதம் லாபம்
Kajaria Ceramics பங்குகளில் முதலீடு செய்தவர்கள் பன்மடங்கு அதிக வருமானம் பெற்றிருக்கின்றனர். இந்நிறுவனம் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இந்தப் பங்குகள் 350 மடங்கு லாபம் கொடுத்திருக்கிறது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கின் விலை 3.40 ரூபாய். 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி நிலவரப்படி, இந்த பங்கின் மதிப்பு 1229 ரூபாய். அதாவது, இந்தப் பங்கு 36,000 சதவீதம் வருமானம் ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
30 ஆயிரம் முதலீடு – 1 கோடி ரூபாய் லாபம்
Kajaria Ceramics பங்குகளை 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வாங்கியவர்கள் வெறும் 3.40 ரூபாய் கொடுத்து பங்குகளை வாங்கியிருப்பார்கள். இப்போது இந்தப் பங்குகளின் விலை 36,000 சதவீதம் அதிகரித்து 1229 ரூபாய் மதிப்புடன் இருக்கிறது.
அந்த சமயத்தில் வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று 1 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் பெற்றிருப்பார்கள். அதேபோல், அன்று 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தவர்கள் இன்று 4.5 கோடி ரூபாய் லாபம் பார்த்திருப்பார்கள்.
நிலையான வருவாய்
கடந்த 23 ஆண்டுகளில் Kajaria Ceramics நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பன்மடங்கு அதிக லாபத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் 4.56 சதவீத லாபத்தை இந்தப் பங்குகள் கொடுத்திருக்கின்றன. அதேசமயம், கடந்த 6 மாதங்களில் 16 சதவீத லாபம் கிடைத்திருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளைப் பொருத்தவரை இந்நிறுவனம் 70 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக Kajaria Ceramics பங்கின் விலை 1,374.90 ரூபாயை எட்டியது. கடந்த 52 வாரங்களில் மிகக்குறைவான மதிப்பான 885.30 ரூபாயை எட்டியது. இந்நிறுவனத்தின் ‘மார்க்கெட் கேப்’ (market cap) 19,500 கோடி ரூபாய்.
தமிழில்: ஸ்ரீவித்யா