‘பிரைவேட் ஜெட் வாங்கும் இந்திய செல்வந்தர்கள்’ - கலாநிதி மாறனின் ஜெட் விலை என்ன தெரியுமா?
தமிழகத்தின் முன்னணி ஊடகமான சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் வாங்கியுள்ள பிரைவேட் ஜெட்டின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்...
தமிழகத்தின் முன்னணி ஊடகமான சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் வாங்கியுள்ள பிரைவேட் ஜெட்டின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்...
இந்தியாவில் வசிக்கும் பெரும் பணக்காரர்கள் ரியல் எஸ்டேட், ஆடம்பர கார்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நகை, ஆடை உள்ளிட்ட பேஷன் பொருட்களை வாங்கிக் குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சமீப காலமாக இந்திய செல்வந்தர்களுக்கு இடையே அமெரிக்கா மற்றும் ஐரேப்பாவிற்கு பறக்க தனியாக ஜெட் விமானங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு பெரும் பணக்காரர்கள் தனியாக பறப்பதையே விரும்புகின்றனர். இதற்காக பலரும் தனக்கான தனி விமானங்களை வாங்கி வருகின்றனர்.
பிரைவேட் ஜெட் விலை:
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், சீரம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆதார் பூனாவாலாஸ், அதானி குழுமத்தின் கௌதம் அதானி மற்றும் அவருடைய மகன்கள் ஆகியோர் சமீபத்தில் மிகப்பெரிய விலையில் பிரைவெட் ஜெட்களை வாங்கியுள்ளனர்.
கடலுக்கு மேல் 7,700 கடல் மைல்கள் தூரம் வரை பறக்கக்கூடிய நீண்ட தூர ஜெட் விமானத்தில் சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. பாம்பார்டியர் குளோபல் 7500 (Bombardier Global 7500) என்ற அந்த ஜெட் விமானத்தை சுமார் 5 மில்லியன் டாலர் விலைக்கு கலாநிதி மாறன் வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
6,600 நாட்டிகல் மைல் பயணிக்கக்கூடிய பாம்பார்டியர் குளோபல் 6500 ஜெட்டை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இதே விமானத்தை கடந்த ஆண்டு சீரம் இன்ஸ்ட்டியூட்டின் நிறுவனர் பூனாவாலாஸும் வாங்கியுள்ளார். இதன் விலை 56 மில்லியன் டாலர்கள் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இந்திய செல்வந்தர்கள்:
நைட் ஃபிராங்க் சர்வேயின் படி, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆதார் பூனவாலா பிரைவெட் ஜெட் விமானங்களை வாங்கியது குறித்து கூறுகையில்,
"வியாபாரம் உள்ளவர்கள், இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவிற்குப் பயணம் செய்கிறார்கள் மற்றும் குறைந்தபட்சம் 9-10 மணிநேரம் இடைவிடாமல் பறக்க வேண்டும், அதனால்தான் நாங்கள் முதலீடு செய்து இந்த விமானங்களைப் பெற்றுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
ஜிண்டால் குழுமம் மற்றும் ஹீரோ குழுமம் ஆகியவையும் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய ஜெட் விமானங்களை வாங்கியுள்ளன.
வணிக விமான தீர்வுகள் நிறுவனமான ஏஜேஎம் ஜெட் மேனேஜ்மென்ட்டின் நிறுவனர் அதிஷ் மிஸ்ரா, இந்திய வணிகத்தின் உலகமயமாக்கல், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் இந்த தனியார் ஜெட் விமானங்களை வாங்குவதற்கு முக்கியக் காரணம் என்று கூறுகிறார், இது பறக்கும் போது அதிக வசதியை அளிக்கிறது
கொரோனா பெருந்தோற்று பரவிய பிறகு, தனியார் ஜெட் நிறுவனங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி காலக் கட்டத்தில் மட்டும் தனியார் ஜெட் விமானங்களின் இயக்கம் ஆண்டுக்கு 37% அதிகரித்துள்ளது.
தகவல் உதவி - பிசினஸ் ஸ்டாண்டர்டு | தமிழில் - கனிமொழி
‘தெரிந்த நிறுவனம்; தெரியாத கதை’ - மாறன் இடமிருந்து அஜய் சிங்குக்கு ஸ்பைஸ்ஜெட் போனது எப்படி?