ஜவுளி தொழிலில் இருந்து 10,000 கோடி நகை பிராண்டாக உருவான 'கல்யாண் ஜுவல்லர்ஸ்'

By YS TEAM TAMIL|9th Sep 2020
டி.எஸ்.கல்யாணராமன், 1983ல் கல்யான் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை துவக்கி, தனது மகன்களுக்காக இரண்டு கடைகளை அமைத்துக் கொடுத்தார். இன்று, இந்த பிராண்ட் இந்தியா மற்றும் மேற்காசியாவில் 140 கிளைகளை கொண்டதாக, ரு.10,000 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

பலருக்கு ஊக்கமளிக்கும் வெற்றிக்கதை இது. சரியான திட்டமிடல் இருந்தால், பெரிதாக கனவு காண்பது உங்கள் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என உணர்த்தும் கதை இது.


கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர் டி.எஸ்.கல்யாணராமன், வெற்றிகரமான வர்த்தக சாம்ப்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதோடு, ஜுவல்லரி தொழில் வளர்ச்சிக்கும் பங்களிப்பும் செய்திருக்கிறார்.


ஜவுளித்துறை பின்னணியைக் கொண்ட கல்யாணராமன் (72) கேரளாவின் திருச்சூரில் தனது தந்தையின் ஜவுளி வியாபாரத்தில் உதவியாக இருந்தார். எனினும், நகைத்தொழிலில் நல்ல வாய்ப்பு இருப்பதையும், இந்த தொழில் நிறுவனமயமாக்கப்பட வேண்டும் என்றும் உணர்ந்தார்.


எஸ்.எம்.பி ஸ்டோரியுடனான உரையாடலில், அவரது மகனும், கல்யாண் ஜுவல்லர்ஸ் செயல் இயக்குனருமான ரமேஷ் கல்யாணராமன், நிறுவனத்தின் வெற்றி பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.

“என் தாத்தாவும், தந்தையும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். திருச்சூரில் வரிசையாக நகைக் கடைகள் அமைந்த தெருவிற்கு நகைகள் வாங்க மக்கள் வருவார்கள், அதே தெருவில் எங்கள் ஜவுளிக் கடை அமைந்திருந்தது. நகைத் தொழிலில் நுழைய வேண்டும் எனும் விருப்பம் என் தந்தைக்கு எப்போதும் இருந்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் சிலரும் இதை வலியுறுத்தினர். விருப்பம் மற்றும் வாய்ப்பு இணைந்து அவர் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தை துவக்கினார்.”

நகை தொழில்களுக்கு நடுவே ஜவுளிக் கடையை நடத்தி வந்தததால், இத்துறையின் பிற தொழில்முனைவோர் மற்றும் பொற்கொல்லர்களுடன் கல்யாணராமனுக்கு நல்ல உறவு இருந்தது, வர்த்தகம் பற்றிய புரிதலையும் அளித்தது.

நகைத் தொழிலுக்கு மாற்றம்

கல்யாணராமன், தனது சொந்த சேமிப்பு ரூ.25 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் பெற்று 1993ல் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைத் துவக்கினார்.  

“என் தந்தை எப்போதும் நகைத்தொழிலை ஒருங்கிணைப்பது பற்றி கனவு கண்டார். முன்பெல்லாம் நகைக் கடைகள் சிறியதாக இருக்கும். அவற்றில் அதிகம் ஸ்டாக் இருக்காது. மக்கள் நகை புத்தகத்தைப் பார்த்து வாங்கினர். நகைக்கடைக்காரரை நம்பி விலை உயர்ந்த நகைகளை வாங்கினர். வர்த்தகத்தில் முழுமையான வெளிப்படை தன்மையை என் தந்தை கொண்டு வர விரும்பினார்.”

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் அனைத்து கையிருப்பு நகைகளையும் காட்சிப்படுத்த கல்யாணராமன் விரும்பினார். எனவே, 4,000 சதுர அடியில் பெரிய விற்பனை நிலையத்தை துவக்கினார். இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ரசனை மாற்றம்

நகை

திருச்சூரில் இருந்த நகைக் கடையைத்தேடி, கேரளாவின் பாலக்காடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்தும் மக்கள் வரத்துவங்கினர் என்கிறார் ரமேஷ். ஏழு ஆண்டுகளாக ஒரு கடை மட்டுமே நடத்தி வந்த நிலையில், கல்யாண் ஜுவல்லர்ஸ், பாலக்காட்டில் இன்னொரு கிளையைத் துவக்கியது. ஆனால், புதிய கிளையில் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை.  

“திருச்சூர் கடைக்கு பாலக்காட்டில் இருந்து நிறைய பேர் வந்ததால், இங்கு கிளை திறப்பது சரியான முடிவு என நினைத்தோம். ஆனால் சந்தையில் நுழைந்த போது தான், வாடிக்கையாளர் பழக்கம் திருச்சூரில் இருந்து மாறுபட்டிருப்பதை உணர்ந்தோம். இதன் மூலம் உள்ளூர் தன்மைக்கேற்ப செயல்படுவதன் அவசியத்தை கற்றுக்கொண்டோம்,” என்கிறார் ரமேஷ்.

நகைத்தொழிலில் உள்ளூர் தன்மை மிகவும் முக்கியம். ஒரு பகுதியில் விற்பனை ஆவது இன்னொரு பகுதியில் வரவேற்பைப் பெறாது. வாடிக்கையாளர்கள் இடம் பெயர்ந்திருந்தாலும், ரசனை மாறாது. இந்த பாடத்தை தான், கல்யாணராமன் மற்றும் அவரது மகன்கள், ரமேஷ் மற்றும் அப்போது தான் வர்த்தகத்தில் இணைந்திருந்த ராஜேஷ் கற்றுக்கொண்டனர்.


கல்யாணராமன், இரண்டு மகன்களுக்கும் இரு ஷோரூம்கள் எனும் எண்ணத்தில் நிறுவனத்தை துவக்கியிருந்தார். ஆனால், நிறுவனம் ஐந்து நாடுகளில் கிளைகள் கொண்டிருக்கும் வகையில் விரிவாக்கம் பெற்றது. இதன் உள்ளூர் தன்மைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து பிராண்டும் பெரிய அளவில் வளர்ந்தது.

2003ல் கல்யாண் ஜுவல்லர்ஸ், கோவைக்கு விரிவாக்கம் செய்தது. இன்று இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா மற்றும் மேற்காசிய நாடுகளில் 140 ஷோரூம்கள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதன் விற்றுமுதல் ரூ.10,000 கோடி அளவில் இருக்கிறது. இந்தியா முழுவதும் 2,000 பொற்கொல்லர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

2017ல் கல்யாண் ஜுவல்லர்ஸ், மும்பையின் Candere, ஆன்லைன் ஜுவல்லரி பிராண்டுடன் இணைந்து தனது ஆன்லைன் இருப்பை ஏற்படுத்திக்கொண்டது. கல்யாணராமன் வர்த்தகத்தில் நுழைந்த போது, ஒருங்கிணைக்கப்படார்த பிரிவில் செயல்படுவது முதன்மையான சவாலாக இருந்தது.

நகை
“முன்பெல்லாம், மக்கள் தங்கத்தின் தூய்மை பற்றி கவலைப்பட்டதில்லை. இன்வாய்ஸ் பற்றியும் கேட்டதில்லை, மறைமுக செலவுகள் சேர்க்கப்பட்டன. என் தந்தை வர்த்தகத்தில் நுழைந்த போது முதல் சில ஆண்டுகள் கடினமாக இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஹால்மார்க் மற்றும் தூய்மை பற்றி எடுத்துக்கூற வேண்டியிருந்தது,” என்கிறார் ரமேஷ்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் 1996, அச்சு ஊடக விளம்பரங்கள் மூலம் தங்கத்தின் தூய்மை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கிறது. பின்னர், மை கோல்ட் மை ரைட் போன்ற பல்வேறு பொதுநலன் நோக்கிலான விளம்பர பிரச்சாரங்களை மேற்கொண்டது.


நிறுவனம் விரிவான விலைப்பட்டியலை வெளியிட்டு, செய்கூலி போன்றவற்றை பற்றிய குழப்பத்தை போக்கியது. மை கல்யாண் பிராண்ட் கீழ், உள்ளூர் சேவை மைய கருத்தாக்கத்தையும் அறிமுகம் செய்தது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சவால்கள் அப்படியே நீடிப்பதாக ரமேஷ் சொல்கிறார். ஒருங்கிணைக்கப்படாத கடைகள் குறைந்து விட்டாலும், இன்னமும் இது 80:20 சதவீதமாக இருப்பதாக கூறுகிறார்.

ஐந்து மாநிலங்களில் விரிவாக்கத்திற்காக கல்யாண் ஜுவல்லர்ஸ் ரூ.300 கோடியை ஒதுக்கியுள்ளது. ஐந்தாண்டுகளில் 250 ஷோரூம்கள் எண்ணிக்கையை அடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2 ஷோரூம்கள் உள்பட தென்னிந்தியாவில் எட்டு ஷோரூம்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


ஆங்கில் கட்டுரையாளர்: பாலக் அகர்வால்