Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சைவ இறைச்சி தெரியுமா? தாவரத்தில் இருந்து ‘க்ரீன் மீட்’ தயாரிக்கும் கேரள ஸ்டார்ட்-அப்!

’தி கிரீன் மீட்’ ஸ்டார்ட் அப் இறைச்சிக்கு சிறந்த மாற்றாக, பதப்படுத்தப்படும் பொருட்கள் சேர்க்கப்படாத, 100 சதவீதம் தாவரம் சார்ந்த தயாரிப்பை வழங்குகிறது.

சைவ இறைச்சி தெரியுமா? தாவரத்தில் இருந்து ‘க்ரீன் மீட்’ தயாரிக்கும் கேரள ஸ்டார்ட்-அப்!

Friday February 04, 2022 , 3 min Read

உன்னிகிருஷ்ணன், தீரஜ் மோகன் இருவரும் ஐஐஎம் கோழிக்கோடு மாணவர்கள். எம்பிஏ படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவர்கள் இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிக்கொள்வார்கள். ஒன்று உணவு. மற்றொன்று இந்த பூமியின் எதிர்காலம்.

இவர்கள் இருவரில் தீரஜ் மாமிசப் பிரியர். உன்னிகிருஷ்ணன் சுத்த சைவம். மாமிசம் சாப்பிடாததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுமோ என்கிற கவலை உன்னிகிருஷ்ணனுக்கு இருந்தது.

மாமிசம் சாப்பிடுபவர்களின் உடல் நலன் மட்டுமல்லாது கிரகத்திற்கும் பாதிப்பு ஏற்படுவது உண்மை. இதுபற்றி இருவரும் கலந்து பேசியுள்ளனர். கவலையும் தெரிவித்துள்ளனர். மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு அதைச் சாப்பிட்ட உணர்வு இருக்கவேண்டும், அதேசமயம், அவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு மாற்று உணவை வழங்கினால் அவர்கள் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடுவார்கள் என இருவரும் யோசித்தனர்.

Green meat

மாமிச உணவு போன்ற தாவர உணவை வழங்க ‘தி கிரீன் மீட்’ (The Green Meat) என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

“ஐஐஎம் கோழிக்கோடு லைவ் மூலம் நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானோம். ஒன்றாக சேர்ந்து இந்த முயற்சியைத் தொடங்கினோம். ’தி கிரீன் மீட்’ உணவு வாடிக்கையாளர்களைக் கவர்ழ்ந்திருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. சுவை, ஆரோக்கியம், சுற்றுச்சூழல் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் அசைவப் பிரியர்கள் சாப்பிடும் வகையில் ‘தி கிரீன் மீட்’ உருவாக்கியிருக்கிறோம்,” என்கின்றனர் இந்த இணை நிறுவனர்கள்.

கொச்சியைச் சேர்ந்த ‘தி கிரீன் மீட்’ சுயநிதியில் இயங்குகிறது. யுவர்ஸ்டோரி டெக்50 2021 பட்டியலில் இந்த உணவு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இடம்பெற்றுள்ளது.

தி கிரீன் மீட் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ உன்னிகிருஷ்ணன் பிராஜெக்ட் மேலாண்மை மற்றும் தொழில்முனைவில் சிறப்பு கவனம் செலுத்துகிறார். அதன் இணை நிறுவனரும் சிஓஓ-வும் ஆன தீரஜ் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் தயாரிப்பு செயல்முறை கட்டுப்பாடு பிரிவில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று உணவு

தி கிரீன் மீட் தாவரங்களால் ஆன தனித்துவமான மாற்று தயாரிப்பை வழங்குகிறது. இதில், பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. உறைநிலையில் துண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட இறைச்சியை எடுத்துக்கொள்ளும் அனுபவமும் உணர்வும் கிடைக்கும்.

பி2சி ஸ்டார்ட் அப் The Green Meat அதன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்காக மைசூரு, மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது. இந்திய வகை சமையலுக்கு ஏற்றதாக இருப்பது ‘தி கிரீன் மீட்’ தயாரிப்பின் தனித்துவமான அம்சம்.

Greenovative Foods Pvt Ltd நிறுவனத்தின் தயாரிப்பு ‘தி கிரீன் மீட்’. இறைச்சிக்கு சிறந்த மாற்றாக, பதப்படுத்தப்படும் பொருட்கள் சேர்க்கப்படாத, 100 சதவீதம் தாவரம் சார்ந்த தயாரிப்பை உருவாக்குவதற்காக இந்நிறுவனம் டெக்ஸ்டரைசேஷன் என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

மூலப்பொருட்கள் தேர்வு மற்றும் உருவாக்கம், புரோட்டீன் கான்செண்ட்ரேஷன், மிக்சிங் போன்ற செயல்முறைகளை இது உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தொடர்ந்து தெர்மோ-மெக்கானிக்கல் முறையில் டெக்ஸ்டரைஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு தாவரம் சார்ந்த மூலப்பொருட்கள் இறைச்சிக்கு நிகரான மாற்றுத் தயாரிப்பாக மாற்றப்படுகிறது.

2
இறைச்சியில் இருப்பதற்கு நிகரான புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துகள் இந்த தாவரம் சார்ந்த மாற்றுப் பொருளில் இருக்கின்றன. அதேசமயம் ட்ரான்ஸ் ஃபேட், கொலஸ்ட்ரால், ஆன்டிபயாடிக்ஸ், ஹார்மோன்கள் போன்றவை இல்லை. மாறாக ஆரோக்கியமான டயடரி ஃபைபர் அடங்கியிருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த ஸ்டார்ட் அப் வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் உள்ளது. ஐஐஎம் கோழிக்கோடு, KRIBS-Bio Nest ஆகியவற்றால் இன்குபேட் செய்யப்படுகிறது.

வருங்காலத் திட்டங்கள்

கேரளாவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் முதல் கட்டமாக கேரளாவில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தென்னிந்திய சந்தை முழுவதும் விரிவடைந்து வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது.

2025ம் ஆண்டில் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டத்துடன் இந்தியா முழுவதும் விரிவடைந்து குறிப்பிட்ட சர்வதேச சந்தைகளிலும் கவனம் செலுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.

1

2021-2026 ஆண்டுகளில் தாவரம் சார்ந்த தயாரிப்புகளுக்கான சந்தை 7.48 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சைவ உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்த சந்தை மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறைச்சி உணவு வகைகளைத் தவிர்க்க விரும்புவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. பலர் சைவ உணவிற்கு மாறி வருகின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ‘தி கிரீன் மீட்’ சிறப்பாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: சன்னதி பானர்ஜி | தமிழில்: ஸ்ரீவித்யா