டிவிஎஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ் நிறுவனப் பொறுப்புகளில் முக்கிய மாற்றங்கள்!
டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தில் முதல்வராக பதவி உயர்வு பெற்றார் ராஜலட்சுமி வைதியநாதன். சூரஜ் மஜீ நிறுவனத்தின் துணை தலைவர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
டிவிஎஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ் நிறுவனம் தன் நிறுவனப் படிமுறைப் பொறுப்புகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. உள்நாட்டுத் திறன்களை வளர்த்தெடுப்பதில் தங்களது கடப்பாட்டை வலியுறுத்தும் விதமாக இந்த மாற்றங்களைச் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தில் முதல்வராக பதவி உயர்வு பெற்றார் ராஜலட்சுமி வைத்யநாதன். டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தில் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில், நிதிச் சேவைகளில் நிறுவனம் முதலீடு செய்வதில் ராஜலட்சுமி முக்கியப் பங்காற்றியுள்ளார்.
டிவிஎஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸில் இப்பொறுப்புக்கு வருவதற்கு முன்னதாக ராஜலட்சுமி பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் ஒரு பத்தாண்டு கால அனுபவத்தைக் கொண்டிருந்தார், அவருடைய இந்த அனுபவத்தின் மூலம் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்டு வந்தார்.
இதுபற்றி, ராஜலட்சுமி வைத்யநாதன் கூறும்போது,
“நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் ஆதரவை நான் ஆழமாக மதிக்கிறேன், மேலும் நிறுவனத்திற்கு மேலும் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை, நீடித்து நிலைத்து நிற்கும் வணிகங்களை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் நிறுவனத்தின் நோக்கத்துடன் இணைந்து, எங்களின் நான்காவது நிதியிலும் அதற்கு அப்பாலும் இருக்கும் வாய்ப்புகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
அதே போல், சூரஜ் மஜீ டிவிஎஸ் கேப்பிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார். சூரஜ் மஜீ தன் பங்களிப்புகளினால் நிறுவனத்தின் உள்ளார்ந்து வளர்ச்சி நிலையை எட்டினார். அவரது பதவிக்காலத்தில், நிதிச் சேவைகளில் நிறுவனத்தின் முதலீடுகளை வலுப்படுத்துவதிலும் 11 முதலீடுகளைச் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மஜீ கூறும்போது,
“TCF-இல் இந்த விரிவாக்கப்பட்ட ரோலை ஏற்றுக்கொள்வதில் நான் மிகவும் நன்றியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகால வாய்ப்புகளை வெளிக்கொண்டுவர நான் எதிர்நோக்குகிறேன், மேலும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் தங்கள் தலைமுறையை விட அதிகமாக தொழில்களை உருவாக்க மற்றும் முன்னேற்ற உதவவிருக்கிறேன்," என்றார்.
டிவிஎஸ் கேப்பிடல்ஸ் தனது ஃபண்ட் 4-க்கான பொறுப்புகளை உயர்த்தியுள்ள நிலையில், நிதிச் சேவைகளில் நிறுவனம் முதலீடு செய்வதில் ராஜலட்சுமி மற்றும் சூரஜ் ஆகியோர் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார்கள்.
டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோபால் சீனிவாசன் இதுபற்றி கூறும்போது,
"ராஜலட்சுமி வைத்தியநாதன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நிறுவனத்தில் இருக்கிறார். எங்கள் ஆராய்ச்சி செயல்பாட்டு திட்டத்தில் முக்கியப் பொறுப்பாற்றிய அவர், நிறுவனத்தின் முதலீட்டு பிரிவில் பெரிய பங்களித்துள்ளார். சூரஜ் மஜீ, எங்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு அலுவலகங்களில் பணிபுரிந்துள்ளார். அவர் ஒரு திறமையானவர், நாங்கள் அவரின் வளர்ச்சியில் பங்குபெற்றது பெருமை அளிக்கிறது, என்றார்.