அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இந்திய நிறுவன சிஇஓக்கள் யார்; அவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டாப் 5 சிஇஒ-கள் பெறும் சம்பளம் குறித்து முழு விவரத்தை பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் டாப் 5 சிஇஒ-கள் பெறும் சம்பளம் குறித்து முழு விவரத்தை பார்க்கலாம்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
ஸ்டார்ட்அப்கள் மற்றும் பன்னாட்டு வணிகங்களின் வளர்ச்சிக் களமாக உள்ள இந்தியா, சில பெரிய நிறுவனங்கள் மூலமாக உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், இந்த நிறுவனங்களை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வது அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளே காரணம்.
கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது, வருவாய் திட்டம், நிர்வாகம் என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளும் சிஇஓக்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. சலில் பரேக், இன்ஃபோசிஸ் எம்.டி., சிஇஓ:
சலில் பரேக் 2017ம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ரூ.71.02 கோடி சம்பளம் பெற்ற இவர், 2023ம் ஆண்டில் 56.44 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார். அதாவது தந்து சம்பளத்தில் இருந்து 21 சதவீதம் குறைந்துள்ளது.
2023ம் ஆண்டு இன்ஃபோசிஸ் வெளியிட்ட நிதி அறிக்கையின் படி,
“பரேக் அடிப்படை ஊதியமாக ரூ.6.67 கோடியையும், போனஸாக 18.73 கோடி ரூபாயையும் பெறுகிறார். கூடுதல் சலுகைகளுக்காக ரூ.45 லட்சமும், ஸ்டாக் ரிவார்டாக ரூ.9.71 கோடியும் வழங்கப்படுகிறது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. சி.விஜயகுமார், ஹெச்சிஎல் எம்.டி., சிஇஓ:
1994ம் ஆண்டு முதல் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜயகுமார், இந்த சம்பளப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரது ஆண்டு சம்பளம் ரூ.130 கோடியாகும். ஹெச்சிஎல் நிறுவனத்தின் சிஇஓவாக மட்டுமின்றி அமெரிக்க-இந்திய வணிக கவுன்சிலின் குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் தற்போது நியூ ஜெர்சியில் வசிக்கிறார்.
3. ராஜேஷ் கோபிநாதன், டிசிஎஸ் முன்னாள் CEO & MD:
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ராஜேஷ் கோபிநாதன் 2023 நிதியாண்டில் ரூ.29.16 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐந்தாவது அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு பலன்கள் மற்றும் கொடுப்பனவிற்காக மட்டும் டிசிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2.43 கோடி வழங்கியுள்ளது.
4. சஞ்சீவ் மேத்தா, CEO & MD, இந்துஸ்தான் யூனிலீவர்:
இந்தியாவின் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சீவ் மேத்தா 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ரூ.22.07 கோடியில் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் ரூ.22.36 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. தியரி டெலாபோர்ட், விப்ரோ சிஇஓ:
நாட்டின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரியான தியரி டெலாபோர்ட் சுமார் 82 கோடி ரூபாயை ஆண்டு சம்பளமாக பெறுகிறார்.