Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கார் தேர்வு முதல், கடன் வசதி வரை காகிதமில்லா ஆன்லைன் கார் விற்பனை சேவை KUWYLaaS அறிமுகம்!

கார் விற்பனையாளர்கள், வாங்குபவர் மற்றும் கடன் வழங்குபவர் என அனைத்து தரப்பினரையும் ஒரே மேடையில் கொண்டு வரும் வகையில் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் KUWYLaaS சேவை அமைந்துள்ளது.

கார் தேர்வு முதல், கடன் வசதி வரை காகிதமில்லா ஆன்லைன் கார் விற்பனை  சேவை KUWYLaaS அறிமுகம்!

Wednesday February 09, 2022 , 2 min Read

இந்தியாவில் ஆன்லைன் கார் விற்பனையை அதிகரிக்கும் எண்ணத்துடன், வாகனத்துறை நிதி நுட்ப நிறுவனமான KUWY, புதிய தொழில்நுட்பச் சேவை KUWYLaaS அறிமுகம் செய்துள்ளது.


கடன் வழங்குதல் ஒரு சேவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. கார் விற்பனையாளர், வாங்குபவர் மற்றும் கடன் வழங்குபவர் என அனைத்து தரப்பினரையும் ஒரே மேடையில் கொண்டு வரும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.


ஆன்லைன் கார் விற்பனையில் வெளிப்படத்தன்மையை கொண்டு வருவதோடு, அனைத்து தரப்பினருக்கும், தகவல்கள் அடிப்படையில் முடிவெடுக்கும் வாய்ப்புகளை இந்த சேவை அளிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்

சென்னையைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான, The Kuwy 2017ல் பி.கணேஷ் குமாரால் துவக்கப்பட்டது. வாகனக் கடன் வசதியை மேலும் ஜனநாயகமயமாக்குவது மற்றும் டிஜிட்டல்மயமாக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டீலர்கள், உற்பத்தியாளர்கள், வாடிக்கையாளர்கள், கடன்வசதி நிறுவனங்களை இணைக்கும் வகையில் செயல்படுகிறது. வோக்ஸ்வாகன் பைனான்சின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

“Kuwy–கடன் வழங்குதல் ஒரு சேவையாக அளிக்கும் இந்த வசதியை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை ஆன்லைனில் கடன் வசதியுடன் வாங்கலாம். இது இந்தியாவில் ஆன்லைன் கார் விற்பனையில் பெரும் பாய்ச்சலாக அமையும்,” என Kuwy இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பி.கணேஷ் குமார் கூறியுள்ளார்.
KUWY

Kuwy இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பி.கணேஷ் குமார்

”ஆன்லைன் கார் விற்பனையில் தற்போதுள்ள சவால்களை இந்த தொழில்நுட்ப மேடை நீக்குவதோடு, மேம்பட்ட வாங்கும் அனுபவத்தை பெறுவதற்கும் வழிவகுக்கும். கார் தேர்வு முதல், கடன் வசதி, உடனடி அனுமதி என எல்லாமே காகிதம் இல்லா சேவையாக அமையும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த புதிய மேடை, கார் உற்பத்தியாளர்கள், டீலர்கள், கார் திரட்டி நிறுவனங்கள், டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சில்லறை விற்பனை அனுபவத்தை அளிக்க உதவும்.


KUWYLaaS மேடை, உற்பத்தியாளர்கள், டீலர்கள், ஆன்லைன் திரட்டிகள், கடன் நிறுவனங்கள், புதிய மற்றும் பயன்படுத்திய கார் விற்பனைக்கான டிஜிட்டலமயமாக்கலுக்கான கீழ் கண்ட வசதிகளை அளிக்கிறது.

●      டிஜிட்டல் கடன் விண்ணப்ப வசதி

●      Kuwy கடன் முடிவு இஞ்சின் வாயிலான நிகழ் நேர கடன் முடிவு.

●      இந்தியாவின் முன்னணி கார் விற்பனையாளர்களில் இருந்து தேர்வு செய்யும் வசதி.

●      27+ Kuwy கடன் திட்ட வசதி.

●      வாகன ஆவண டிஜிட்டல் பரிமாற்றம்.