Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மாணவர்கள், இளைஞர்களுக்கு ‘கைமாத்து’ கடன் வழங்க வந்திருக்கிறது ‘Pocketly’

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு அவசரத் தேவைகளுக்கான குறைந்த வட்டியில் ‘கைமாத்து’ கடன் வழங்கும் ‘பாக்கெட்லி’யை அணுகுவதும் மிகவும் எளிது.

மாணவர்கள், இளைஞர்களுக்கு ‘கைமாத்து’ கடன் வழங்க வந்திருக்கிறது ‘Pocketly’

Thursday April 27, 2023 , 3 min Read

மாதக் கடைசியோ அல்லது அவசர செலவோ, நடுத்தர வயதினரைப் பொறுத்தவரையில் தங்கள் அனுபவத்தாலும் தொடர்புகளாலும் எளிதில் கைமாத்தாக கடன் வாங்கி சமாளித்து விடுவர். கொஞ்சம் கூடுதலாக தேவை என்றால், பர்சனல் லோன் - டாப் மாதிரி ஏதாவது வழிகளை நாடுவர். ஆனால், கல்லூரி மாணவர்கள் அல்லது இளைஞர்களுக்கு..?

கவலையே வேண்டாம், இருக்கவே இருக்கிறது Pocketly’. இளைஞர்கள், மாணவர்களின் அவசரத் தேவைகளுக்கு குறைந்த வட்டியில் கைமாத்துக் கடன் வழங்கும் ‘பாக்கெட்லி’ அணுகுவதும் மிகவும் எளிது.

நவீஷ் அஹுஜா மற்றும் ஆரவ் பாட்டியா ஆகிய இருவரும் பெங்களூரில் தொடங்கிய மாணவர்கள், இளைஞர்களுக்கான சிறு கடன் உதவி நிறுவனமே ‘பாக்கெட்லி’ (Pocketly).

pocketly

கல்லூரி மாணவர்களுக்கு வங்கிக் கடன்களோ, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிலோ அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள், உத்தரவாதங்கள், ஆவணங்கள் தேவைப்படும். மேலும், தேவைப்படும் காலத்தில் வங்கிக் கடன் கிடைக்க வழியில்லை. ஏனெனில், ஏகப்பட்ட நடைமுறை விவகாரங்கள் உள்ளன.

ஆனால், ‘பாக்கெட்லி’யின் முக்கிய நோக்கம் இளம் இந்தியர்களை நிதி ரீதியாக சுயாதீனமாக மாற்றுவதாகும். வேறு எந்த பாரம்பரிய கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்தும் கடன் வாங்கும்போது, ஒரு நபர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை, சில பிணையங்களை கொடுத்தாக வேண்டும். இது ‘பாக்கெட்’லி நிறுவனத்தில் கிடையாது. ஏனெனில், பாக்கெட்லி தாங்கள் வழங்கும் கடன்களுக்கு எந்த வகையான பிணையத்தையும் உத்தரவாதமாகக் கோரவில்லை.

குறைந்தபட்ச KYC செயல்முறை முடிந்தவுடன் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றுவதன் மூலம் பாக்கெட்லி நிறுவனம் பயனர்களுக்கு உடனடி கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘பாக்கெட்லி’யின் செயலியைப் பற்றி கூறினால், பயன்படுத்துவதற்கு மிக எளிதானது. எளிமையான யுஐ மற்றும் ஆன்-போர்டிங் செயல்முறை எளிதானது.

pocketly founder

அஹுஜா மற்றும் பாட்டியா தொடங்கிய பாக்கெட்லி நிறுவனம் அதன் பெயருக்கேற்ப கல்லூரி மாணவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.50,000 வரை கடன் வழங்குகின்றது. அதாவது, 30 நாட்களில் கடனைத் திருப்பி அடைக்கலாம்.

குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் இதில் பயனடைவார்கள். இந்த லட்சியத்தை மனதில் கொண்டு 2019ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு யுபிஐ ஐடி மூலம் கடன்களை நேரடியாக வழங்குகின்றது பாக்கெட்லி. இப்போது 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பாக்கெட்லி தன் கடன் வசதிச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

நாட்டில் 750 பல்கலைக்கழகங்கள், இதனுடன் இணைந்த சுமார் 35,000 கல்லூரிகள், இதில் படிக்கும் 3 கோடியே 50 லட்சம் மாணவர்கள் என்று பாக்கெட்லி நிறுவனத்திற்கு வாய்ப்புகள் பரந்துபட்டு உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாக்கெட்லி நிறுவனம் மாணவர்களின் நம்பிக்கை நிறுவனமாகி வருகின்றது.

மாணவர் கடன்கள் பாக்கெட்லியால் வேகமாக வழங்கப்படுகின்றன. கடன் தொகை மற்றும் அதன் காலக்கெடுவைப் பொறுத்து கடன் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 1% முதல் 3% வரை (ஆண்டுக்கு 12% - 36%) வட்டி விகிதங்களை விதிக்கப்படுகின்றன. கடனை கூகுள் பிளே மூலம் ஆப் டவுன்லோடு செய்து ஆண்ட்ராய்டு தொலைபேசி பயனர்கள் பெறலாம்.

உங்கள் மாதாந்திர கட்டணங்களை விரைவாகவும் சீராகவும் செலுத்த டாப்-அப் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் பேடிஎம் வாலட், வங்கிக் கணக்கு அல்லது வழக்கமான வங்கி கணக்குகள் மூலம் பணத்தைப் பெறலாம்.

தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாக்கெட்லி கடன் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டு ஒன்றுக்கு ரூ.250 கோடி கடனாக விநியோகப்பட்டு வருகின்றது. நிதி தொழில் நுட்ப நிறுவனமான பாக்கெட்லி கடன் தொகை வழங்குதலை ரூ.250 கோடியிலிருந்து ரூ.1000 கோடி வரை அதிகரிக்க பரிசீலனை செய்து வருகின்றது. இதற்காக பல நிதி நிறுவனங்களுடன் கூட்டாளியாக இயங்கி வருகின்றது பாக்கெட்லி.

பல இளைஞர் தொழில் வல்லுநர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு அல்லது மாத இறுதி நிதி நெருக்கடியை சமாளிக்க பணம் தேவைப்படலாம். குறுகிய கால தனிநபர் கடன்கள் மூலம் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதில் பாக்கெட்லி ஒரு எளிதான துணையாக இருக்கும்.

pocketly app

Pocketly-இன் தனித்துவ அம்சங்கள்:

> நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய கடன் தொகை - ரூ.25,000 வரை கடன் பெறலாம்

> கடன் பெறும் வழிமுறை வேகமானது, விரைவானது, எளிதானது. எப்போது பணம் தேவைப்பட்டாலும் பாக்கெட்லி செயலி உதவும்.

> எந்தவித பிணைய ஆவணங்களும் பேப்பரில் தேவையில்லை. உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பினால் போதும்.

> நெகிழ்வுடன் கூடிய மாதாந்திர தவணை முறை: உங்களிடம் கடன் தவணை செலுத்தும் நாளன்று பணம் இல்லையா? கவலை கொள்ள வேண்டாம். குறைந்தபட்ச தவணைத் தொகையை செலுத்தலாம். கடனை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.

> 24/7 ஆன் லைன் உதவி: பாக்கெட்லி ஊழியர்கள் நீங்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு தக்க விடை கொடுத்து தெளிவுபடுத்துவார்கள்.

> முக்கியமாக இதில் இணைய ஆண்டு சந்தா கிடையாது, சேருவதற்கான கட்டணமும் கிடையாது. எந்தவித மறைமுகக் கட்டணங்களும் இல்லை.

> மத்திய ரிசர்வ் வங்கியின் நியாயமான நடைமுறைகள் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டது, எனவே பாதுகாப்பானது.

மேலும், மிக முக்கியமாக பாக்கெட்லி நிறுவனத்திடம் கடன் வாங்குவோரிடத்தில் தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது மோசடியான கடன் நடைமுறைகள் இல்லை என்று அந்த நிறுவனம் கூறுகின்றது.

கடனுக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையின்போது கடன் வேண்டுவோர் அளிக்கும் சொந்தத் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற கவலையும் வேண்டாம். ஏனெனில் ஆர்பிஐ-யின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே செயல்படுகின்றது.


Edited by Induja Raghunathan