சொந்த மகளே மணமகள்: சீன திருமணத்தில் அடுத்தடுத்து நடந்த டுவிஸ்ட்!

திருமணத்தில் பாச போராட்டம்!

சொந்த மகளே மணமகள்: சீன திருமணத்தில் அடுத்தடுத்து நடந்த டுவிஸ்ட்!

Friday April 09, 2021,

2 min Read

சீனாவின் ஜியாங்சு மகாணத்தின் சுஜோவில் மார்ச் 31-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமகளுக்கு செய்முறைகள் செய்த மணமகனின் தாய் அவரின் கையில் இருந்த அடையாளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


மணமகளின் கையில் இருந்த பிறப்பு அடையாளம் அவரை 20 ஆண்டுகளுக்கு முன் நினைவுகளை நியாபகப்படுத்தியுள்ளது. மணமகனின் தாய்க்கு 20 ஆண்டுகள் முன்பு பெண் குழந்தை இருந்துள்ளது. ஆனால் அந்தக் குழந்தை சாலையோரத்தில் தொலைந்து போயுள்ளது. ஆம், அந்த குழந்தை தான் அந்த மணப்பெண்.

china wedding

20 ஆண்டுகள் முன் குழந்தையாக இருந்த போது கையில் இருந்த பிறப்பு அடையாளத்தை வைத்து மணமகள் தான் தன் காணாமல் போன மகள் என்பதை உறுதிப்படுத்தியதுடன், அவரை வளர்த்த பெற்றோரிடம் சென்று, இந்த பெண்ணை நீங்கள் 20 வருடங்களுக்கு முன் தத்தெடுத்து வளர்த்து வருகிறீர்களா? எனக் கேட்க, அதன்பின் 20 ஆண்டுகால ரகசியத்தை வெளியில் சொல்லியிருக்கின்றனர் அந்த பெற்றோர்கள்.

”நாங்கள் இந்த பெண்ணை சாலையோரத்தில் தான் கண்டெடுத்தோம். ஆதரவின்றி தனியாக இருந்ததால் அவளை எங்கள் சொந்தக் குழந்தை போலவே வளர்த்து வந்தோம்," என்று வளர்ப்பு பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தனது உண்மையான பெற்றோர் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த மணப்பெண், தான் கல்யாணம் பண்ண நினைத்த மணமகன் தனக்கு சகோதரர் என்பதால் திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

marriage

ஆனால் பெற்றோர்கள் அவரை அந்தப் பையனையே திருமணம் செய்துகொள்ளச் சொல்லினர். காரணம், மறுபடியும் ஒரு ட்விஸ்ட்... அவர்களின் பெண் குழந்தை தொலைந்த பிறகு, அவரை கிட்டத்தட்ட ஒரு வருடம் தேடி வந்துள்ளனர். ஆனால், அவள் கிடைக்கவில்லை. இதன்பின் தேடினால் அது வீண் நேரம் என்பதை உணர்ந்து, ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

அந்த ஆண் குழந்தை தான் மணமகன். இந்த விவரத்தைச் சொல்லி மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் ரத்த சம்மந்த சொந்தங்கள் இல்லை எனப்தால் மணமுடிக்க சிக்கல் இல்லை என தெரிவித்தனர்.

அதன்பிறகு, திருமணச் சடங்குகள் முறைப்படி செய்யப்பட்டு திருமணம் முடித்து வைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் காணாமல் போன மகள் கிடைத்த சந்தோசம், அவளுக்கு திருமணம் ஆன சந்தோசம் என இரட்டிப்பு சந்தோசத்தில் பார்த்து சென்றனர்.