தமிழகத்தில் நிறுவனம் தொடங்க ரூ.10 லட்சம் ஆதார நிதி: விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
TANSEED திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த நடுவர்குழு மூலம் இத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதியாக தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க செயலகத்தின் திட்டமான TANSEED (Tamil Nadu Startup Seed Grant Fund) முயற்சி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.
தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தாக்க இயக்கத்தின் அடிப்படை நோக்கம் ஆகும். அதற்காக இந்தாண்டின் ‘TANSEED 3.0’ அறிவிக்கப்பட்டுள்ளது.
TANSEED திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த நடுவர்குழு மூலம் தமிழ்நாட்டில் இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதியாக தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மீன்பிடி குக்கிராமமான தாமரைக்குளத்தைச் சேர்ந்த கே.மோகனின் ‘ஆல் இன் ஒன் பேமென்ட்’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட ‘இப்போ பே’ இந்த ஆண்டு முதலீட்டாளர்களிடமிருந்து 2.1 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க டாலர்களைத் திரட்டியுள்ளது.
தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆரம்ப கால ஆதரவு நிதியாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
2021 ஆம் ஆண்டில் TANSEED 2.0 (தமிழ்நாடு ஸ்டார்ட்அப் ஆரம்ப மானிய நிதி) திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 19 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மோகனின் Ippo Pay நிறுவனமும் ஒன்றாகும்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது (TANSIM). TANSEED 3.0-வில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆரம்பகட்ட ஆதார நிதியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கி நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நிதி பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு ஆரம்ப கட்ட ஆதரவு நிதியை 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டான்சிம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் இதுபற்றி கூறுகையில்,
“அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 10,000 புதிய ’ஸ்டார்ட்அப்’களை உருவாக்குவது எங்கள் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். எங்களின் TANSEED திட்டம், ஆரம்ப நிலை தொடக்க நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் இந்தப் பணியை முன்னெடுப்பதில் மிகப் பெரிய பங்காற்றுகிறது மற்றும் அதையொட்டி, நாம் கருதும் செழிப்பான தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. எங்களின் அனைத்து திட்டங்களும் பெருநகரங்கள் மற்றும் முதல் அடுக்கு நகரங்களில் கவனம் செலுத்தாமல், மாநிலம் முழுவதும் பரப்பப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிப்பது எப்படி?
TANSEED 3.0 திட்டத்தில் விண்ணப்பிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், டான்சிம்-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.startuptn.in பக்கத்தில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அல்லது தமிழ்நாட்டில் பதிவுசெய்யத் தயாராக உள்ள தகுதியான ஸ்டார்ட்அப்கள் தேர்வுச் செயல்பாட்டில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக மார்ச் 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள www.startuptn.tn. என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் [email protected] க்கு மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய: TANSEED 3.0