Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மணப்பெண் மாடி ஜன்னலில்; மாப்பிள்ளை கீழே: வித்தியாசமாய் நடந்த கோவிட் திருமணம்!

வித்தியாசமான முறையில் நடந்த திருமணம்!

மணப்பெண் மாடி ஜன்னலில்; மாப்பிள்ளை கீழே: வித்தியாசமாய் நடந்த கோவிட் திருமணம்!

Monday December 07, 2020 , 2 min Read

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக, பலரின் திட்டமிடல்கள் சீர்குலைந்துபோயின. அதே போலத்தான் நிச்சயிக்கப்பட்ட பலரின் திருமணங்கள் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்க, சிலர் சிம்பிளாக வீடுகளிலும் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர்.


அப்படி திருமணம் முடிவாயிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட, இனியும் தாமதிக்கமுடியாத என்று முடிவெடுத்த தம்பதியினர் வித்தியாசமான முறையில் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கலிபோர்னியாவில் வசிக்கும் பேட்ரிக் டெல்கடோ மற்றும் லாரன் ஜிமெனெஸ் ஆகிய இருவருக்கும் நவம்பர் மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். திருமணத்துக்கு 3 நாட்களுக்கு முன் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மணப்பெண் தனிமைப்படுத்துதலில் இருந்தபோதிலும், திருமணத்தை நடத்தி முடிக்க இருவரும் முடிவெடுத்தனர்.

திருமணம்
அதன்படி, மணமகள் தனது அறையில் இருக்க, மணமகன் கீழே நின்றுகொண்டு, ஒரு ரிப்பனின் இரண்டு முனைகளை, இருவரும் தங்கள் கைகளில் கட்டிக்கொண்டனர். பின்னர் இருவரும் திருமண பந்தத்திற்கான உறுதி மொழி ஏற்றனர். ரிப்பன் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டபோது, அது எங்கள் இருவரும் கைகளை பிடித்துக்கொண்டிருக்கும் உணர்வை தரும் என்று கூறினர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது. மணப்பெண் முதல் மாடியின் ஜன்னல் அருகே நின்றுகொண்டிருக்கிறார். மணமகன் ஜன்னலுக்குக் கிழே தரைத்தளத்தில் நின்றுகொண்டிருக்கிறார். இருவரும் ரிப்பன் ஒன்றை கட்டிக்கொண்டு, திருமண பந்தத்தை தொடங்கும் வகையில் அந்த புகைப்படங்கள் இருந்தன.

"எங்கள் திருமணத்தை நாங்கள் நிச்சயமாக இப்படிக் கற்பனை செய்யவில்லை என்றாலும், பேட்ரிக்கும் நானும் ஒருவருக்கொருவர் எங்கள் உறுதிமொழியை பரிமாறிக் கொள்ள முடிந்தது," என்று மணப்பெண் ஜிமெனெஸ் கூறினார்.

அவர் தனது மருத்துவச் சோதனை முடிவுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டவுடன் வருத்தமடைந்ததாகவும், அதற்கு அவருடைய கணவர் ஆறுதலித்ததாகவும் கூறுகிறார் ஜிமனெஸ்.

திருமணம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக தாங்கள் ஏற்கனவே மூன்று முறை தங்கள் திட்டங்களை மாற்றிக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த திருமண விழாவில் மொத்தம் 10 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அந்தத் தெருவில் செல்லும் சிலர் தங்கள் கார்களில் இந்த விழாவை பார்த்துள்ளனர்.

"நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம், நாங்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் எங்கள் முகமூடிகளை அணிந்திருப்பதை உறுதிசெய்தோம்,” என்கிறார் மணமகன் பேட்ரிக்.

நான்கு ஆண்டுகளாக ஒன்றாக இருந்த இந்த ஜோடி 2019 மே மாதம் நிச்சயதார்த்தம் செய்து 2020 இல் திருமணத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் எல்லாம் தடைப்பட்டு இறுதியில் இப்படியாய் நடந்து முடிந்துள்ளது அவர்களின் திருமணம்.


இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவே பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


 தகவல் உதவி - indianexpress | தொகுப்பு: மலையரசு