Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

காதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கிய காதல் மெத்தைகள்...

காதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கிய காதல் மெத்தைகள்...

Tuesday April 24, 2018 , 4 min Read

கௌரவ்சிங்கின் லவ்ரோலர்ஸ் நிறுவனம் 3 விதமான மெத்தைகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தாம்பத்திய உறவில் அதிகப்படியான சுகம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். தற்போது விடுதிகள் மற்றும் ஸ்பாக்களில் இந்த மெத்தைகளை உபயோகிப்பதை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொழில் முனைவு பெயர்: Loverollers (காதல் மஞ்சம்) | நிறுவனர்: கௌரவ் சிங்

தீர்க்கும் சிக்கல் : வேலைக்கு ஏற்ப சூழல்வடிவமைப்பையும், தம்பதியர் காதல் செய்வதையும் இணைத்து மெத்தைகள் உருவாக்கி, அதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட காதல் நிலைகளை அவர்கள் முயற்சிக்க உதவுதல்.

வடிவத்திற்கும் காதலுக்கும் பெயர்பெற்ற ஆக்ரா நகரத்தில், அந்த வடிவங்களையும் தாஜ் மஹாலையும், அதன் காதலையும் பார்த்து வளர்ந்த கௌரவ் சிங்கிற்கு எப்போதும் மனதில் ஒரு கேள்வி இருப்பதுண்டு. இந்த உலகத்திற்கு காமசூத்ரா கொடுத்த இந்தியாவில், தாம்பத்திய உறவில் உலக அளவில் 5வது இடம் பிடித்துள்ள இந்தியாவில், இன்றும் கலவி என்பது பேசக்கூடாத விஷயமாகவும், வேறுபாடுகளும் புதுமைகளும் புகாமல் இருப்பது ஏன் என்பதே அது. இந்த கேள்விக்கு பதில் தேடி, தனது வேலையை விட்டு, $450 மில்லியன் மதிப்புடைய இந்த சந்தையை பிடிக்க தற்போது தனது தொழில் முனைவு மூலம் களமிறங்கியுள்ளார்.

அவரது மூன்று வகை ’Loverollers’ விரைவில் உங்களது அருகாமையில் கிடைக்க உள்ளது. இவற்றின் மூலம் 100-க்கும் மேற்பட்ட காதல் நிலைகளை முயற்சிப்பதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசை பிடிப்புகளுக்கும் வலிநிவாரணியாக செயல்பட உள்ளது.

image
image

ஆய்வு மற்றும் வடிவமைப்பு :

“வடிவமைப்பு என்றுமே எனது முதல் காதல். கல்லூரி காலத்தில் பல பொருட்களை நான் வடிவமைத்துள்ளேன்,” 

என்கிறார் 33 வயதாகும் முன்னால் டெல்லி ஐஐடி மாணவர் கெளரவ் சிங். மேலாண்மை ஆலோசகராக பல உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளார் கெளரவ். அதில் பெரும்பான்மை தொழில் முனைவு நிறுவனங்களே.

முழு நேர வேலை செய்துகொண்டு எனது படைப்பாற்றலை இந்த சமூகத்திற்கு ஏற்றவாறு செயல்படுத்துவதில் அதிகம் சிரமம் இருந்தது எனக்கு. அதே சமயம் இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆழமாக சிந்திப்பது, ஆழமாக தொடர்பு ஏற்படுத்துவது குறித்து பல திட்டங்கள் தீட்டினாலும், எவரும் மனிதருள் இருக்கும் தொடர்பை ஆழப்படுத்துவதற்கு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. நமது முன்னோர்களிடம் கலவி குறித்து நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. 

“காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள நிலைகள் மூலம் புதிய உச்சங்களை அடைய இயலும். ஆனால் அதற்கு ஏற்ப இன்றைய மெத்தைகள் மற்றும் இதர மரச்சாமான்கள் அந்த நிலைகளை சாத்தியமாக்குவதற்கு உதவுவதில்லை. எனவே இது குறித்து நீண்ட நெடிய ஆய்வுகளும், கணக்குகளும், வடிவமைப்புகளும், தகவல் சேகரிப்பும், பரிசோதனை முயற்சிகளும் செய்துள்ளேன்,” என்கிறார். 

அவருக்கு கலவியல் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு பொருளை, அதே சமயம் பண்டைய இந்தியர்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளை தயாரிக்க முயன்றுள்ளார். தற்போது அவருடைய ’லவ் ரோலர்ஸ்’ 100க்கும் மேற்பட்ட காம சூத்ரா நிலைகளை முயற்சிக்க உதவும். இது குறித்த ஆய்வுகள் கடினமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்துள்ளது. அதற்கு தேவைப்பட்ட கணக்குகள் அதிகமாக இருந்துள்ளது. காரணம் இவரது பொருள் வெகுஜன உற்பத்திக்கானது என்றாலும், வாங்கும் அனைவருக்கும், அவர்களது உடலமைப்பு, உயரம் ஆகியவற்றை கடந்து, இது ஏற்றதாக இருக்கவேண்டியது அவசியம்.

அனைவருக்கும் பொருந்தும் ஒரு பொருள் எங்களுக்கு தேவைப்பட்டது. அதன் காரணமாக வடிவமைப்பிற்கு உபயோகிப்பவர்களின் தகவலை அதிகப்படியாக நாங்கள் ஆய்வு செய்தோம். மேலும் கீழும் அமைந்துள்ள வில் போன்ற வளைவை உருவாக்க மிக அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டது. அவை மூலம் கலவியின் போது அதிக அழுத்தம் தர இயலும், என்கிறார் கெளரவ்.

இந்த மெத்தை, தம்பதிகளின் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளுக்கு ஆதரவாக விளங்குகிறது. இடையில் உள்ள அந்த இறக்கம் மிகவும் முக்கியமானது. காரணம் பெண்ணின் இடுப்பை மேல் நோக்கி திருப்பி, அவர்கள் கருவுற உதவுகிறது.

“நாங்கள் அதனை ’வசிய வளைவு’ என அழைக்கிறோம். மேலும் நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்கள் ஒரு புத்தக வடிவிலும் லவ் ரோலரோடு கொடுக்கிறோம். அது தம்பதிகளுக்கு உபயோகமாக இருக்கும். அது மட்டுமின்றி மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வலி நிவாரணியாகவும் இது செயல் படுகிறது” என்கிறார் கெளரவ்.

3 விதமான லவ் ரோலர்ஸ்

லவ் ரோலர்ஸ் தற்போது 3 வடிவங்களில் உள்ளது. விரைவில் மேலும் அதிக வடிவங்கள் உருவாக உள்ளன. அதற்கான வேலைகளில் தற்போது கெளரவ் ஈடுபட்டுள்ளார். பொதுவான அளவில் ஒன்று, அளவு சிறிதான ஒன்று, மேலும் இரண்டாக பிரிக்கக்கூடிய விதத்தில் ஒன்று என மூன்று வகை தற்போது உள்ளன.

image
image

மூன்றாவது வடிவமாக ’பிளக் அன் ப்ளே’ வடிவத்தை நாங்கள் அமைத்துள்ளோம். காரணம் இதனை பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க இந்த வடிவம் உதவியாக இருக்கும். மேலும் தேவையான பொழுது அதனை மீண்டும் இணைத்து கொள்ள இயலும், என்கிறார் அவர்.

வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பனை செய்வது மட்டுமன்றி பல்வேறு விடுதிகள் மற்றும் ஸ்பாக்களோடு இணைந்து செயல்பட உள்ளனர். எனவே ஓய்வெடுக்க மற்றும் கருவுற உதவும் இந்த மெத்தைகளை விடுதிகளின் தேனிலவு அறைகளில் வைக்க முயன்று வருகிறார் கௌரவ். தற்போது சிறிது மாற்றங்கள் எதிர்பார்க்கும் விடுதிகளை நாடுவதொடு, கலவியல் நிபுணர்களையும் தங்களது பொருளை அவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகின்றனர். மேலும் வாடிக்கையாளருக்காக வலைத்தளம் ஒன்றை நிறுவியுள்ளனர். தற்போது மிகப்பெரிய சங்கிலி விடுதி ஒன்றில் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. மற்றவற்றில் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது.

கலவி என்பது நமது சமூகத்தில் பேசக்கூடாத விஷயங்களில் ஒன்று. எனவே பாரம்பரிய ஊடகம் மூலம் எங்களை பிரபலமாக முயல்வதில் அர்த்தமில்லை. ஆனால் சமூக ஊடகம் மூலமாகவும், வாய்வழியாகவும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

“துவங்கிய ஒரு மாதத்தில், எங்களது சமூக வலைதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொருள் வேண்டி 100 நபர்களும் எங்களை நாடியுள்ளனர். இதன் மூலம் எங்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது. தற்போது எங்களது தயாரிப்புத் திறனை மேம்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளேன்,” என்கிறார் கெளரவ்.
image
image

பல நகரங்களுக்கு செல்லும் பொழுது தனது அணியையும் பெரிதாக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கௌரவ். ஆனால் கலவி பற்றிய எண்ணம் புதிதாக ஆட்களை சேர்ப்பதிலும் சிக்கல் உருவாக்கியது. அடிமட்ட வேலையாட்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு இந்த பொருளை பற்றி விளக்கி அதன் பின் அவர்களிடம் வேலை வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனது கிராமத்தில் இருந்தே ஆட்களை வேலைக்கு எடுத்து தற்போது ஒரு அணியை உருவாக்கியுள்ளேன்,” என்கிறார் அவர்.

யாரும் தொடாத சந்தை :

உலக அளவில் கலவியல் ஆரோக்கிய சந்தை $52 பில்லியன் என்கிற உச்சத்தை 2020 இல் கடக்கும் என்று கணிகப்படுள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் $450 மில்லியன் மதிப்புள்ள வாய்ப்பு காத்துள்ளது.

“இந்தத் துறையில் இந்தியாவில் முதல் நிறுவனம் எங்களுடையது தான். லிபரேடர், தந்த்ரா சேர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் இறக்குமதி பொருட்களை விற்பனை செய்து வந்தாலும், அவற்றின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் இந்தியர்களின் எடை உடல் அளவுகளை மனதில் கொண்டு உருவாகப்பட்டது அல்ல. எனவே அவை அவ்வளவாக விற்பனை ஆகவில்லை,என்கிறார் கெளரவ்.

எனவே இந்த நிறுவனத்திற்காக தனது பணத்தை முதலீடு செய்தது மட்டுமல்லாது, தான் நண்பர்கள் சிலரிடமும் முதலீடு பெற்றுள்ளார். “மேலும் முதலீடு பெற முயன்று வருவதோடு, எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். வாடிக்கையாளரை குறிவைத்து எங்களது அணியை நாங்கள் வளர்த்து வருகின்றோம். பொருளை தயாரிப்பதற்கும் தொழிற்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். மற்றும் மிகவும் முக்கியமானதாக பொருளை எவ்வாறு புதுமையாக்கலாம், மேம்படுத்தலாம் என்ற ஆய்வும் தொடர்ந்த வண்ணம் உள்ளது,” என முடித்தார் கெளரவ். 

கட்டுரையாளர் : பின்ஜால் ஷா |தமிழில் : கெளதம் தவமணி