Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

90 ரூபாய்க்கு வாங்கிய குவளையை ரூ.4.5 கோடிக்கு விற்ற நபர்!

ஆன்லைனில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் இந்த குவளையை விற்ற இங்கிலாந்து நபர் ஒருவர். ஆமா அப்படி என்னத்தான் இருக்கு இந்த மஞ்சள் குவளையில்?

90 ரூபாய்க்கு வாங்கிய குவளையை ரூ.4.5 கோடிக்கு விற்ற நபர்!

Wednesday November 13, 2019 , 3 min Read

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் என கேள்விப் பட்டிருப்போம். அது சீனாவில் நிஜமாகவே ஒரு ஆணுக்கு நடந்திருக்கிறது. பழைய பொருட்கள் விற்கும் கடையில் ரூ.90க்கு வாங்கிய ஒரு அழகிய குவளை, ரூ.4.5 கோடிக்கு ஆன்லைனில் விற்பனையாகி ஒரே நாளில் அவரைக் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது என்றால் நம்புவீர்களா?


இங்கிலாந்தில் உள்ள ஹெர்ட்போர்ட்சைர் (Hertfordshire ) சேர்ந்தவர் அந்நபர். சமீபத்தில் அவர் அதே பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான கடை ஒன்றில் அழகிய குவளை ஒன்றை ஒரு பவுண்ட் ஸ்டெர்லிங், அதாவது இந்திய மதிப்பில் 90 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார். அந்த குவளையை வாங்குவதன் மூலம் அத்தொண்டு நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு உதவ முடியும் என்பதால் அதனை அவர் வாங்கியுள்ளார்.

mug

Sworders Fine Art Auctioneers நிறுவன ஆசிய கலைப் பிரிவுத் தலைவர் யெக்சி லீ

அழகிய வெள்ளை நிறக் குவளையில் மஞ்சள் நிறத்தில் எனாமல் செய்யப்பட்டிருந்தது. அதோடு வீட்டுக்குச் சென்றதும் அதனை என்ன செய்வது எனத் தெரியாமல், மீண்டும் அதனை விற்க முடிவெடுத்தார் அவர்.


அந்த குவளையை அவர் இ-பே மூலம் விற்க முடிவு செய்தார். எனவே, அந்த ஜாடியின் புகைப்படத்தை அந்த இணையதளத்தில் பதிவு செய்து மிகக்குறைந்த விலையையும் நிர்ணயித்தார். ஆனால் என்ன ஆச்சர்யம், அவர் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் அந்த குவளையை வாங்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நபர், அந்த ஜாடியின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள முடிவு செய்தார்.


எசெக்ஸ் பகுதியில் இருக்கும் Sworders Fine Art Auctioneers நிறுவனத்திடம் அந்த குவளையைக் கொண்டு சென்றுள்ளார் அந்நபர். அந்நிறுவனத்தின் ஆசிய கலைப் பிரிவின் தலைவராக இருக்கும் யெக்சி லீ, அந்நபர் கொண்டு சென்ற குவளையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.


காரணம் எலுமிச்சை நிற பேக்கிரவுண்டில், செடி கொடிகள் படர்ந்தது போன்ற ஓவியங்கள் வரையப் பட்டிருக்கும் அந்த குவளை சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. கடந்த 1735 - 1796 வரை சீனாவை ஆட்சி செய்த, குவின் லாங் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தது அந்த ஜாடி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மஞ்சள் நிற சீன குவளையானது அது உருவாக்கப்பட்ட காலத்திலேயே அதிக விலைமதிப்பைக் கொண்டது என்கிறார் யெக்சி லீ. அந்தக் காலத்திலேயே வெளிநாட்டு எனாமல்களைப் பயன்படுத்தி அந்த குவளையை உருவாக்கி இருக்கிறார்கள். அதோடு மஞ்சள் நிறம் அரசர்களுக்கானதாக அப்போது இருந்துள்ளது. இந்தக் குவளையானது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்துக்கானது அல்ல, அரசருக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டது என்றும் கூறுகிறார் யக்சி லீ.

இப்படியாக பல சிறப்பு அம்சங்களைத் தன்னகத்தேக் கொண்ட அந்த குவளை எப்படியும் 80,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை ஏலத்தில் போகலாம் என கணித்துக் கூறினர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம் ரூபாய். ஆனால், அவர்களின் கணிப்பு பொய்த்துப் போனது.


அந்த மஞ்சள் நிற சீன குவளையின் அருமை பெருமைகள் எல்லாம் இணையத்தில் வைரலாக, அதன் விலை எகிறத் தொடங்கியது. கடைசியில் சீனர் ஒருவர், கட்டணங்கள், வரிகள் எல்லாவற்றையும் சேர்த்து 4,84,000 பவுண்ட் ஸ்டெர்லிங் விலை கொடுத்து அந்த குவளையை வாங்கி இருக்கிறார்.  இது இந்திய மதிப்பில் 4,43,70,369 ரூபாய் ஆகும்.
Vase

Photo courtesy: Daily mail

தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்காக 90 ரூபாய்க்கு வாங்கிய குவளை இன்று அந்நபரை ரூ. 4,43,70,369 க்கு உரிமையானராக்கி இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னைப் பற்றிய விபரங்களை வெளியிடக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவரது பெயர் மற்றும் மற்ற விபரங்கள் எதையும் அந்நாட்டு ஊடகம் வெளியிடவிலை.


சரி, திடீரென கிடைத்த இந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என்பதற்கு,

“என் மகளின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த இருக்கிறேன்,” எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார் அந்த அதிர்ஷ்டசாலி நபர். அவரது மகளுக்கு தற்போது தான் மூன்று வயதாகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


அதிர்ஷ்டம் எந்த பொருள் வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். நாம் மற்றவர்களுக்காக உதவி செய்ய ஒரு அடி எடுத்து வைக்கும்போது, நமக்கு அதன் பலன் பல மடங்காகக் கிடைக்கும் என்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகி இருக்கிறது.


படம் மற்றும் தகவல் உதவி: dailmail.co.uk