Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

திருமணங்களின் உற்ற நண்பன்- 'ஷாதி தோஸ்த்'

பட்ஜெட் சிக்கல் வராமல் நடுத்தர வர்க திருமணத்தை முடிக்க உதவும் நிறுவனத்தின் கதை!

திருமணங்களின் உற்ற நண்பன்- 'ஷாதி தோஸ்த்'

Wednesday February 19, 2020 , 4 min Read

பல வருடங்களாக திருமணம் என்றால் அதிக பொருட்ச்செலவில் ஆடம்பரமாக உறவினர் புடைசூழ நடக்கும் ஒரு நிகழ்வு என்றே சினிமா நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் உண்மை அதுவாக இல்லாது இருக்க, என்றும் வேலையில்லா திண்டாட்டம் இல்லாத இந்தத்துறை, தொழில்முனைவோரின் கவனத்தை பெற்றுள்ளது எனலாம்.    


உயர்தர சொகுசுத் திருமணங்கள் அல்லது குறைந்த பொருட்ச்செலவில் நடக்கும் திருமணங்கள் எதுவாக இருந்தாலும், மொத்தமாக 40-50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட  இந்திய திருமணச் சந்தையானது அனைவர்க்கும் வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. பலரும் இதில் குதித்துள்ள நிலையில், நாம் காணப்போகும் ’ஷாதி தோஸ்த்’ன் (Shaadi Dost) கதையும் அதுவே.


நான்கு இந்திய தொழில்முனைவோர் இணைந்து நவம்பர் 2018ல் துவங்கிய இந்த ஷாதி தோஸ்த் தொழில்நுட்பம் கலந்த திருமண திட்டமிடல் தளத்தை உருவாகியுள்ளது. இதன் மூலம் நமக்கு ஏற்ற விலையில் நமக்குத் தேவையான திருமணம் தொடர்பான சேவைகளைப் பெற முடிகிறது. உயர் பொருட்ச் செலவில் உருவாகும் திருமணங்கள் அன்றி, நடுத்தர இந்தியக் குடும்பங்களின் திருமணங்கள் தான் இவர்கள் சந்தை.

 The team of ShaadiDost

இவர்கள் பிரபலம் அடையக் காரணம் மற்ற நிறுவனங்கள் கூறும் விலையை விடவும் மூன்றில் ஒரு பங்கு  விலையில் இவர்கள் சேவைகளை வழங்குவதே. 

துவக்கம் : 


"நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்" இந்த வாக்கியத்திற்கு ஏற்ப, அவர்கள் பெற்ற அனுபவமே அவர்களை இந்த தளத்தை உருவாக்க வைத்துள்ளது.  சித்தார்த் ஷங்கர் மிஷ்ரா, ஷ்ருதி விஜயராகவன், சவுரப்சிங் பால் இவர்கள் மூவரின் பாதைகளும் சந்தித்தது சிங்கப்பூரில்.


சிங்கப்பூரின் என்டியூ பல்கலை மூலம் சித்தார்த் மற்றும் சவுரப் சந்திக்க, பி & ஜி சிங்கப்பூரில் பணிபுரியும் பொழுதுதான் துணைநிறுவனர் ஸ்ருதியை இவர்கள் சந்தித்தனர். 

ஒரு நிறுவனத்தை துவங்க வேண்டும் என்ற எண்ணம் மூவருக்கும் இருக்க, அவர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சியம் ஆன திருமணச் சந்தையை தேர்வு செய்தனர். இதன் மூலமே ’ஷாதி தோஸ்த்’ உருவாகியுள்ளது. இதில் தோஸ்த் (DOST - டிஜிட்டல் ஒன் ஸ்டாப் சொல்லூஷன் பார் ஷாதி டைம்) என பொருள் படும் வகையில் சித்தார்த் மற்றும் ஸ்ருதி உருவாக்கிய வார்த்தையாகும்.

“திருமணத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டி, அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு முடிக்கும் நண்பனாக எங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது அந்த பெயர்," என்கின்றனர் இருவரும். 

ஷாதி தோஸ்த் நிறுவனர்கள் குழுவில் மற்றும் ஒருவர் உள்ளார். முதன்மை தொழில்நுட்ப அதிகாரியான அக்ஷய் கட்டியால். மொசில்லா, ஹேக்கர்எர்த், ஸ்டிரைக் என பல டிஜிட்டல் மார்க்கெட்டிங்  தொழில்முனைவுகளில் துணை நிறுவனராக இருந்த அனுபவம் இவரிடம் உண்டு.


தொழில்நுட்பம் மட்டுமல்ல, இதற்கு முன்பு திருமணப் பரிசுகள் தொடர்பான ஒரு தளத்திற்கு பணிபுரிந்த அனுபவத்தையும் நிறுவனத்திற்கு பலமாக சேர்க்கிறார் அக்ஷய். 

திருமண சேவைகளுக்கான அர்பன் கிளாப் : 

"அதிக பொருட்ச்செலவில் உருவாகும் திருமணங்களில், திருமண வீட்டினர் திருமண திட்டமிடல் நிறுவனங்களை அணுக, அவர்கள் திருமணச் சேவைகள் வழங்கும் வணிகர்களிடம் பேசி, விலை பெற்று பின்னர் வாடிக்கையாளர்களிடம் அனுமதி பெற்று அனைத்தையும் நடத்தி முடிப்பார்கள். ஆனால் நடுத்தர குடும்பத் திருமணத்தில் அனைத்தையும் அவர்களே செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்," என்கிறது இந்த நிறுவன குழு.


இந்தத் துறையில், ஒவ்வொரு சேவைக்கும் தேவைப்படும் ஆட்களைப் பெறுவது சிரமமாக இருப்பதே. கடந்த 5 வருடங்களில் சில வலைத்தளங்கள் இதற்காக உருவாகி இருந்தாலும், அவர்களில் யார் சரியான நபர் என அடையாளம் காணுவது சிக்கலானக் காரியமாகவே உள்ளது. 

 

2018ல் அடுத்தடுத்து பல திருமணங்களுக்குச் சென்றதில் கிடைத்த அனுபவமும் கைக்கொடுத்துள்ளது. அதில் மிகவும் முக்கியமாக, திருமணத்தின் செலவுதனை, மணமக்கள் பெற்றோரே ஏற்கவேண்டும் என்ற நிலையும் அவர்களை உந்தித்தள்ளியுள்ளது. 


எனவே இவற்றைக் கவனித்த பொழுது, திருமணச் சந்தையில் இருக்கும் இடியாப்ப சிக்கல் அவர்களுக்கு புரிந்துள்ளது. முக்கியமாக நடுத்தரக் குடும்பங்கள் அவர்களின் வாடிக்கையாளர்கள் என்பதையும் உணர்ந்துள்ளனர். 

"எங்கள் நோக்கம், வாடிக்கையாளர்களின் சிக்கலைத் தீர்ப்பதே. இன்றைய காலத்தில் வலைத்தளங்கள் திருமணச் சேவைகள் கிடைக்கும் இடத்தை கூறினாலும், வாடிக்கையாளரின் வேலைப் பளுவை அவை குறைப்பதில்லை," என்கிறது இந்நிறுவனத்தை நிறுவிய குழு. எனவே 7.5 லச்சம் முதலீட்டில் இந்த தளத்தை துவக்கியுள்ளனர்.  

மேலும் அவர்கள் கூறுவது, "இந்நிறுவனத்தின் சிஆர்எம் (CRM- வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) மற்றும் திட்ட மேலாண்மையானது வாடிக்கையாளர்களின் பணியை  அவர்களுக்கு தேவையான தகவல்களை கொடுப்பதன் மூலம் 75% குறைக்கிறது".


சுருக்கமாக சொல்வதென்றால்,  வடிவமாதிரிகள், விருந்தினர் உபசரிப்பு உத்திகள் ஆகியவை குறைந்த விலையில் நடுத்தரக் குடும்பங்களுக்கு கிடைக்கும் வகையில் இவர்கள் தளம் அமைந்துள்ளது. 

எப்படி இயங்குகிறது? 

2018ல் இவர்கள் சேவையை துவங்கி இருந்தாலும், இப்பொழுது உள்ள மாதிரியானது 2019ல் தான் செயல்படத்துவங்கியது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வகையில் தளத்தை அமைக்கவும், எந்த வித சிக்கலும் இல்லாமல் திட்டங்களை அவர்களுக்கு உருவாக்க உதவும் வகையில் தளத்தை மாற்றி அமைக்கவும் 6 மாதங்கள் ஆனது என்கிறது இந்த நிறுவனர் குழு. 


2019ல் இருந்து கடின உழைப்பிற்கான பலன் கிடைத்துள்ளது. 450 திற்கும் மேல் இவர்களிடம் சேவைப் பற்றிய விசாரணைகள் வந்துள்ளது. ஆனால் ஆட்கள் அதிகம் இல்லாத காரணத்தால் 250 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவையளிக்க இவர்களால் முடிந்துள்ளது. 


இந்தியாவின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சேவைகள் வழங்கும் 35 திட்ட அமைப்பாளர்கள் தோஸ்தின் குழுவில் உள்ளனர். 

"சரியான வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களிடம் சேர்ப்பதற்கு ஒரு தொகையைக் கட்டணமாக நாங்கள் திட்ட அமைப்பாளர்களிடம் பெறுகிறோம். கிடைக்கும் ஒப்பந்தத்தை பொருத்து 12 டாலரில் இருந்து 100 டாலர் வரை அது வேறுபடும். மேலும் எங்கள் தளம் மூலம் ஒரு ஒப்பந்தம் கிடைக்கும் என்றால் அதற்கு 450 டாலர் கட்டணம் பெறுகிறோம்," என்கிறது நிறுவனர் குழு.

வளர்ச்சிப்பாதை :

இந்தியத் திருமணச் சந்தை என்பது அமெரிக்க திருமண சந்தைக்கு (70 பில்லியன் டாலர்) அடுத்த படியாக அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு அதன் வளர்ச்சி 20% உள்ளது. மேலும் இங்கு இந்நிறுவனத்திற்கு நேரடி போட்டியும் அதிகம் இல்லை.


ஆனால் மறைமுகப் போட்டியாக வெட்மீகுட், வெட்டிங்ஸ், ஷாதிசாகா, தி வெட்டிங் பிரிகேட் போன்ற புதிய தொழில்முனைவு நிறுவனங்கள் உள்ளன. அவர்களும் தொழில்நுட்பம் வழியாகச் சந்தையை ஆக்கிரமிக்க முயல்கின்றனர்.


இதில் தொடர்ந்து வெற்றி வேண்டும் என்றால், உங்கள் சேவையின் தரம் உயரவேண்டும். தளத்தையும் அதிக பயனாளர்கள் இயங்கும் வகையில் மேம்படுத்தவேண்டும். இதற்காக தான் தற்பொழுது இந்த குழு இயங்கி வருகிறது. அடுத்தக் கட்ட முதலீடாக, 5 லட்சம் டாலர் பெறவும், அந்த முதலீடு மூலம் மேலும் 10-15 இந்திய நகரங்களில் இவர்களின் சேவையைத் துவக்கும் எண்ணமும் உள்ளது. 


அத்தோடு, 2019ல் பெற்றதை விடவும் 2 மடங்கு அதிக வருமானத்தை பெறவுள்ளதாகவும் இவர்கள் கூறுகின்றனர். 

"2019ல் 6 மாதங்கள் பணிபுரிந்தோம். அதன் மூலம் 15 லட்சம் வருமானமாக பெற்றோம். 2020ல் குறைந்தபட்சம் 45 லட்சம் வருமானமாகப் பெற முயல்கின்றோம். மேலும் முதலீடு கிடைத்தால், விளம்பரங்கள் செய்து வருமானத்தை அதிகரிக்கவும் முடியும்," என நம்பிக்கையோடு உள்ளது இந்த குழு. 

ஹிந்தியில் வெளியாகி வசூல் சாதனை செய்த ’பாண்ட் பஜா பாரத்’ திரைப்படம் போல, திருமணச் சந்தையும் அற்புதமான வாய்ப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. 10 முதல் 30 லட்சம் வரை செலவிடும் திறன் கொண்ட நடுத்தர வர்கத்தை குறிவைத்து சரியான பாதையில் பயணிக்கிறது ஷாதி தோஸ்த். 


தமிழில் : கெளதம் தவமணி.