இந்தியாவில் கிராமப்புற சுகாதார நலனை மேம்படுத்த ஸ்டார்ட் அப்'களுக்கு உதவும் 'Mathworks'
சுகாதார நல ஸ்டார்ட் அப்கள் கிராமப்புற இந்தியாவில் அதிக வாய்ப்புகளை கொண்டிருந்தாலும், சவால்களையும் எதிர்கொள்கின்றன. மேத்வொர்க்ஸ் ஆக்சலேட்டர் திட்டம், கிராமப்புற சுகாதார நலனை மாற்றி அமைப்பதற்கு தேவையான சாதனங்கள், தொழில்நுட்ப ஆதரவை இந்த ஸ்டார்ட் அப்களுக்கு வழங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளில் சுகாதார நலனுக்கான தொழில்நுட்பம் இந்தியாவில் வெகுவாக முன்னேறியுள்ளது. இருப்பினும், இந்த முன்னேற்றம் பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில் மட்டுமே உள்ளது.
கிராமப்புற பகுதிகளில், மோசமான கழிவு வசதி, திறன்மிக்க ஊழியர்கள் பற்றாக்குறை, தடையற்ற மின்வசதி இல்லாதது என பலவித சவால்கள் உள்ளன. இதை எதிர்கொள்ளும் வகையில், தரமான சுகாதார நலன் கிடைப்பதில் உள்ள இடைவெளியை போக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்பத்தும் வர்த்தகங்கள் எழுச்சி பெறத்துவங்கியுள்ளன.
கிராமப்புற இந்தியாவில் சமூக பொருளாதார நோக்கில் பலவீனமான பிரிவினர் மத்தியில் சுகாதார நலன் மேம்பட்டு வரும் நிலையில், இத்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கட்டுப்பாடு விதிமுறைகள், பிளவு கொண்ட தன்மை, போட்டி மற்றும் டிஜிட்டல் நுப்டங்களுக்கான ஏற்பில் தயக்கம் உள்ளிட்ட தடைகளை எதிர்கொள்கின்றன. மேலும், இந்த பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் தங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டு தாக்கத்தை கூடுதலாக்கும் வாய்ப்புகளும் குறைவாக உள்ளன.
சரியான சாதனங்களைக் கண்டறிவது, தொழில்நுட்ப ஆதரவு, வல்லுனர்களின் ஆலோசனை ஆகியவை, கிராமப்புறங்களுக்கான சாதனங்கள், தீர்வுகளை வழங்க முயற்சிக்கும் சுகாதார நலன் ஸ்டார்ட் அப்கள் வெற்றிக்கு முக்கியத் தேவையாகும்.
Mathworks ஆக்ஸிலரேட்டர் திட்டம், 20க்கும் மேலான துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப்`களை மையமாகக் கொண்டது. சுகாதார நலத்துறையில், புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம், சுகாதார நலன் மற்றும் மருத்துவ சாதனங்கள் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கிறது. இந்த திட்டம், மென்பொருள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வல்லுனர் வழிகாட்டுதலுக்கான அணுகலை அளிக்கிறது.
அனைவருக்குமான சுகாதார நலன்
நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நோய்கள் பாதிப்பு அதிகரித்து வருவது, முன் எப்போதையும் விட, செலவு குறைந்த உயிர் காக்கும் சுகாதார நலனுக்கான தேவையை அதிகமாக்கியுள்ளது. வேகமாக பெருகி வரும் இந்திய மக்கள் தொகையும் பெரிய அளவில் விரிவாக்கக் கூடிய தீர்வுகளின் அவசியத்தை உணர்த்துகிறது. தொலைமருத்துவம், டேட்டா ஆய்வு, ஏஐ உள்ளிட்ட நுட்பங்கள் கிராமப்புறங்களில் சுகாதார நலனை மாற்றி அமைப்பதில் ஸ்டார்ட் அப்களுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கின்றன. தொழில்நுட்பத்தைக் கொண்டு, மருத்துவ அணுகல் வசதியை குறைக்க ஸ்டார்ட் அப்கள் பாடுபட்டு வருகின்றன.
வளர்ந்து வரும் இந்திய சுகாதார நலத்துறை, புதுமையாக்கத்திற்கான களமாக விளங்குவதால், மேத்வொர்க்ஸ் ஸ்டார்ட் அப் அண்ட் ஆக்ஸிலரேட்டர் திட்டம், ஸ்டார்ட் அப்களுக்கு முக்கிய வளங்களை வழங்கி, அவை பரவலான சமூக தாக்கம் ஏற்படுத்த வழி செய்கிறது.
இந்திய கிராமப்புற பகுதிகளுக்கான சுகாதார நலன் சேவை அளிக்க, மருத்துவ சாதனங்கள் மற்றும் சுகாதார நலன் ஸ்டார்ட் அப்களுக்கு மேத்வொர்க்ஸ் உதவுகிறது.
மருத்துவ சாதனங்கள்
MATLAB மற்றும் சிமுலிங்க் (Simulink), ஸ்டார்ட் அப்களுக்கான முழுமையான செயல்முறை அளிக்கிறது. இது,IEC 62304 கட்டுப்பாடுகளுக்கு ஏற்ற மருத்துவ சாதனங்கள், சுகாதார செயலிகளை உருவாக்க உதவுகிறது.
துறை கட்டுப்பாடுகள் மற்றும் தர நிர்ணயத்திற்கு ஏற்ப செயல்படுவதோடு, ஸ்டார்ட் அப்கள், பலவகை மருத்துவ சாதன தீர்வுகளை வடிவமைத்து, சோதித்துப்பார்க்கலாம். பொறியாளர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், சிகிச்சை சாதனங்கள், மருத்துவ உருவ அல்கோரிதம்கள், நோயாளி கண்காணிப்பு சாதனங்கள், மென்பொருள்கள் (SaMD) ஆகியவற்றை கிளவுட்டில் உருவாக்கவும், காது கேட்கும் கருவிகள், கோஹிலியல் இம்பிலேண்ட்கள், அறுவை சிகிச்சை சாதனங்கள், ரோபோக்கள், ஏஐ சார்ந்த விட்ரோ சாதனங்களை உருவாக்குவதற்கான ஊக்கம் பெறுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள ஸ்டார்ட் அப்கள், அணிகணிகள், தனிப்பட்ட மூளை சிமுலேஷன் சிகிச்சைகள், கட்டிகளுக்கு எதிரான சாதனங்களை உருவாக்க, மேத்வொர்க்ஸ் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றன. ஜெர்மனி ஸ்டார்ட் அப்பான Sync2brain சிமுலிங்க் ரியல் டைம் சாதனம் கொண்டு, நிகழ்நேர டிஜிட்டல் சிகன்ல் பிராசசைரை உருவாக்கியுள்ளது. இது அதீத மனச்சோர்வு அல்லது அப்சசிவ் கம்பல்சிவ் டிஸார்டர் உள்ளிட்ட நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையின் குறிப்பிட்ட பகுதியில் டிரான்ஸ்கார்னியல் மேக்னடிக் சிமுலேஷன் வாயிலாக துல்லிய செய்திகளை அனுப்ப வல்லது.
இந்தியாவில், iMedrix, PlebC Innovations உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சி பாதையை மேத்வொர்க்ஸ் மாற்றி அமைத்திருக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இதய நோய் தடுப்பு மற்றும் அல்ட்ராசவுண்ட் செயல்முறைகளை லட்சக்கணக்கானோருக்கு அளிப்பதை சாத்தியமாக்கியுள்ளது.
ஏஐ துணையோடு இதய சிகிச்சை
தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் தகவலின் படி, இந்தியாவில், 2022ல் மாரடைப்பு 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புறங்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மரணத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இதய நோய் அமைந்துள்ளது.
இதய நலன் சிகிச்சையில் கவனம் செலுத்தும் ஸ்டார்ட் அப், iMedrix தனது முக்கிய சேவையை மேட்வொர்க்ஸ் உதவியோடு உருவாக்கியுள்ளது. அதன் மொபைல் ஈசிஜி சேவை, மேத்வொர்க்ஸ் சாதனங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த சிக்னல் பிராசிசிங் வசதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. USFDA இடம் இருந்து 510k அனுமதி பெற்றுள்ளது. சேவையை முன்வைத்து, வடிவமைத்து, வளர்ச்சி செய்ய நிறுவனத்திற்கு தேவையான சாதனங்கள் அனைத்தும் கிடைத்தன. மேலும், மேத்வொர்க்ஸ், இந்த ஏஐ துணை சேவை, கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப செயல்முறையாக்கத்திற்கான உதவியையும் வழங்கியது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப், இதய நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், பத்து லட்சம் பேர் மீது தாக்கம் செலுத்தியுள்ளது. கிராமப்பிற இந்தியர்களுக்கு இதய நலன் சிகிச்சையை இது சாத்தியமாக்கியுள்ளது. இந்த மொபைல் ஈசிஜி சேவை அதிநவீன ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், பகுதியளவு திறன் கொண்ட சுகாதார நல ஊழியரும் தேவையான சேவைகளை அளிக்க உதவி, கிராமப்புற சிகிச்சை இடைவெளியை குறைக்கிறது.
“தரவுகளைக் கொண்டு செல்வதை நம்புகிறோம், நோயாளிகளை அல்ல,” என்கிறார் ஐமெட்கிர்க்ஸ் இணை நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் ராஜாராம் சாஸ்த்ரி.
இந்த ஏஐ சார்ந்த தீர்வு, மருத்துவர்கள் தங்கள் பணிச்சுமையை நிர்வகித்து முன்னுரிமை அளிக்கவும் உதவுகிறது.
கிராமப்புறங்களில் ரோபோ அல்ட்ரா ஸ்கேன்
பல்வேறு வலை உடல் கோளாறுகளை முன்னதாக கண்டறிவதில், அவசர கால சிகிச்சை மற்றும் சிசு ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் அல்ட்ரா சவுண்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ரா சவுண்ட் மருத்துவ சிகிச்சை பலனை அதிகரித்து, வசதி குறைந்த பகுதிகளில் உயிர் காக்க உதவும்.
எனினும், உலக அளவில் 3 ல் 2 பேருக்கு இந்த வசதி இல்லாமல் இருக்கிறது. மேலும், பாரம்பரிய அல்ட்ராசவுண்டிற்கு அந்த இடத்தில் ரேடியோலாஜிஸ்ட் தேவை. இந்தியாவில் 80 சதவீத ரேடியோலாஜிஸ்ட்கள் நகர்புறங்களில் உள்ளனர். தொலைதூர அல்ட்ராசவுண்ட்களை பெரிய அளவில் மேற்கொள்ள PlebC இன்ண்டவேஷன்ஸ் டெலி ஆப்பரேடட் ரோபோடிக் அல்டா சவுண்ட் சிஸ்டம் (TORUS) நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
TORUS நுட்பம், தொலைவில் இருந்து அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை ரேட்யோலாஜிஸ்ட்கள் மேற்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் நோயாளிகள் பயண நேரம் மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்கிறது. ஒரு ரேடியோலாஜிஸ்ட் இருந்த இடத்தில் இருந்து பல இடங்களில் சேவை அளிக்கலாம்.
“டோரஸ் அமைப்பை உருவாக்கி, மேம்படுத்துவதில், அலசம் மற்றும் சிமுலேஷனில் மேத்வொர்க்ஸ் சேவைகள் முக்கியப் பங்காற்றின. இந்த சாதனங்களின் ஆற்றலை அதிகமாக்கி சேவை உருவாக்கத்தை விரைவாக்க எங்கள் குழுவுக்கு மேத்வொர்க்சின் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உதவியது,” என்றுPlebC இன்னவேஷன்ஸ் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ண பிரசாத் கூறுகிறார்.
ஸ்டார்ட் அப் துறை வளர்ச்சி
மேத்வொர்க்ஸ் ஆக்சிலரேட்டர் திட்டம், பங்குதார ஆக்சிலரேட்டர் திட்டங்களில் ஸ்டார்ட் அப்களுக்கு மென்பொருள் ஸ்பாப்ன்சர்ஷிப் வழங்குகிறது. இதுவரை உலக அளவில் 500 ஆக்சிலேட்டர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டு ஸ்டார்ட் அப்களுக்கு லைசன்ஸ் கட்டணம் இல்லாத சேவை வழங்கியிருக்கிறது.
இந்தத் திட்டம் அணியின் அளவு மற்றும் தேவைக்கேற்ப மேத்வொர்க்ஸ் சாதனங்களின் 1- லைன்சஸ்களுக்கு உரியது. இதன் மூலம் ஆதரவு பெறும் ஆக்சிலரேட்டர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு ஐடி செலவு சுமை குறைகிறது. பங்கேற்பவர்கள் முழு அளவு வர்த்தக வாடிக்கையாளர்களாக கருதப்பட்டு, MATLAB®, Simulink® சாதனங்கள் அணுகல் அளிக்கப்படுகிறது. ஆக்சிலரேட்டர் திட்டம், செயல் பொறியாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு அளித்து, ஸ்டார்ட் அப்கள் திறனை மேம்படுத்துகிறது.
உள்ளூர் மொழியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப்கள் தங்கள் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான மேடையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இணை சந்தை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
MATLAB , Simulink ஆகியவற்றுக்கான குறைந்த செலவு அணுகல் வசதி, ஸ்டார்ட் அப்கள் ஆய்வு திட்டங்களை சாத்தியமாக்கி முன்னோட்ட சேவைகளை உருவாக்கி, துறைகளுக்கு ஏற்ற சேவைகளை வடிவமைக்க உதவுகிறது. சரியான ஆதரவு மற்றும் பொறியியல் வசதிகளோடு ஸ்டார்ட் அப்`கள் சேவை உருவாக்க செயல்முறையில் முன்னேறலாம்.
சாதனங்கள், வளங்கள், பொறியியல் அனுபவங்களை குறைந்த செலவில் அளித்து, ஸ்டார்ட் அப்கள் கிராமப்புற இந்தியாவுக்கான மேம்பட்ட சுகாதார நல சேவைகளை உருவாக்க இப்பிரிவு ஸ்டார்ட் அப்களுக்கு MathWorks® விலை மதிக்க முடியாத பங்குதாரராக விளங்குகிறது.
ஆங்கிலத்தில்: காவேரி சந்திரசேகர், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan