Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்திய கிராமப்புற மேம்பாட்டிற்காக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் 'மிஷன் சம்ரிதி'

’மிஷன் சம்ரிதி’ மூலம் கிராமப்புற மேம்பாட்டை துரிதப்படுத்தும் நோக்கில் 18 மாநிலங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட சமூகத் தொண்டு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிராமப்புற மேம்பாட்டிற்காக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் 'மிஷன் சம்ரிதி'

Wednesday February 05, 2020 , 4 min Read

இந்தியாவில் முழுமையான கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமூகநல அமைப்பான 'மிஷன் சம்ரிதி' தனது 8வது ஆண்டு மாநாட்டை சென்னையில் நடத்தியது.


இந்த மாநாட்டில் முழுமையான கிராமப்புற மேம்பாட்டை துரிதப்படுத்தும் நோக்கில் 18 மாநிலங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட சமூகத் தொண்டு அமைப்புகளின் நிபுணத்துவமிக்கவர்களை ஒன்றிணைத்துள்ளது. மிஷன் சம்ரிதியால் ஆதரவு அளிக்கப்பட்ட இந்த அமைப்புகள் துரிதமான சமூக வளர்ச்சி பயணத்திற்கு உதவி செய்கின்றன.

1

புதிய வடிவமைப்புக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் சமூகம் சார்ந்த விஷயங்களில் பல செயல்முறைகளை துரிதப்படுத்த மிஷன் சம்ரிதி ஒரு உந்து சக்தியாக செயல்படுகிறது. இது, சமூக மேம்பாட்டு கட்டமைப்பை பயன்படுத்தி முழுமையான கிராமப்புற மாற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவமிக்க சமூகத் தொண்டு அமைப்புகளை ஆதரிக்கிறது.


அதன் அடிப்படையில் ’அளவிற்கான வடிவமைப்பு' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு 8வது மாநாட்டை சென்னையில் 3 நாள் நடத்துகிறது. இந்த மாநாட்டில் அரசு, சமூகத் தொண்டு அமைப்புகள், பஞ்சாயத்து அமைப்புகள், பெருநிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், நிலையான மற்றும் அவர்களுக்குத் தகுந்த திட்டங்களை உருவாக்குவது குறித்தும், அது தொடர்பான தங்களின் அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் கேரள முன்னாள் தலைமை செயலர் எஸ்.எம். விஜய் ஆனந்த், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் ஜெனரல் டபிள்யூ.ஆர். ரெட்டி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை கமிஷனர் சித்தார்த் திரிபாதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள், சமூக மேம்பாட்டு கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.

சமூக வளர்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றிய தொண்டு அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக இந்த மாநாட்டில் ’போல்ஸ்டார் சோஷியல் இம்பாக்ட் அவார்ட்ஸ்' என்னும் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாக சர்பஞ்ச் என்னும் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் குழு விவாதமும் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சர்பஞ்ச்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும், தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் தனது துவக்க உரையில் மிஷன் சம்ரிதி நிறுவனவரும், ஊக்குவிப்பாளரும் மற்றும் இன்டலக்ட் டிசைன் அரினா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான அருண் ஜெயின் பேசுகையில்,

“3 ஆண்டுகளுக்கு முன், பரிவு மற்றும் பெரிய உருமாற்ற நோக்கத்துடன் கிராமப்புற இந்தியாவில் முழுமையான சமூக மேம்பாட்டுக்கான வடிவங்கள், அதற்கான இடைவெளிகள் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மிஷன் சம்ரிதி தனது பயணத்தை துவக்கியது. மிஷன் சம்ரிதி 2.0 நடத்த உள்ள எங்களின் நோக்கம் ஒவ்வொரு நாளும் தெளிவாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரசு, சமூகத் தொண்டு அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் பெருநிறுவனங்களின் சுறுசுறுப்பு ஆகியவற்றிற்கு மிஷன் சம்ரிதி மதிப்பளிக்கிறது. இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே கிராமப்புற வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் காண முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் வலுவான பொருளாதாரத்திற்கு, கிராமங்களில் கவனம் செலுத்துவது, அவற்றின் திறன்களை வளர்ப்பது மற்றும் அதன் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வது என்பது முக்கியமானதாகும்.

’வடிவமைப்பு சிந்தனை' என்பது எல்லையற்ற சிந்தனைகளின் சக்தியை வெளிக்கொண்டு வர உதவியாக இருக்கும். கிராமப்புறங்களுக்கான முழுமையான சமூக மேம்பாட்டு வடிவங்கள், இடைவெளிகள் மற்றும் வாய்ப்புகளை புரிந்து கொள்ள முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரம் குறித்து இந்த மாநாட்டில் விஜய் ஆனந்த் பேசுகையில், சமூக தொண்டு நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் பங்கேற்பு என்பது கிராம பஞ்சாயத்துகளில் சுயராஜ்யத்தை செயல்படுத்துவதற்கான துவக்க புள்ளிகள் ஆகும் என்று தெரிவித்தார்.


முழுமையான கிராமப்புற மேம்பாட்டிற்கு கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரம்


கிராமப்புற மேம்பாட்டிற்கான மிஷன் சம்ரிதியின் அணுகுமுறை வடிவமைப்பு சிந்தனை, ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இந்திய பஞ்சாயத்து மன்றம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான அக்டோபர் 2, 2019 அன்று மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்தில் துவக்கப்பட்டது. இது வடிவமைப்பு சிந்தனை, ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, அதன் மூலம் நிலையான மற்றும் முழுமையான கிராமப்புற வளர்ச்சியை பெறுவதாகும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய பஞ்சாயத்து மன்றம் ஒரு சுயாதீனமான, பாகுபாடற்ற, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முழுமையான வளர்ச்சிக்கான சமூக மேம்பாட்டு கட்டமைப்பு


இன்று இந்தியாவில், பல்வேறு தொண்டு அமைப்புகள் கிராமப்புற மேம்பாட்டிற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக வாழ்வாதாரத்தில் அதிகக் கவனம் செலுத்தும் அந்த அமைப்புகள், உடல் நலம் அல்லது கல்வி அல்லது பாலின சமத்துவம் அல்லது சமூக நீதி தொடர்பான சமூகத்தில் உள்ள சவால்கள் குறித்து கவனிக்கலாம் அல்லது கவனிக்காமலும் இருக்கலாம்.


நாட்டில் ஏராளமான கொள்கைகள், திட்டங்கள் அல்லது துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பஞ்சமில்லை. இது மக்களை மிரட்டுகிறது. தகவல், யோசனை, கருத்துகள் மற்றும் மாதிரிகள் ஆகியவற்றை நாம் ஒழுங்காக கட்டமைக்காதபோது நாம் அவற்றை இழக்க நேரிடும். ஒரு சிறந்த கட்டமைப்பானது இந்த ஒழுங்கீனத்தை குறைத்து, அனைவருக்குமான புரிதலை கொண்டு வருகிறது. அதுவே ஒரு பெரிய நோக்கத்துடன் முழுமையான மற்றும் நிலையான மனித வளர்ச்சிக்கு உதவுகிறது.


வாழ்வாதாரம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றில் வடிவமைப்பு சிந்தனை பட்டறைகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக, சிந்தனைமிக்க பல தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடான கலந்துரையாடல்களுக்கு பிறகு, ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானின் 73வது திருத்தம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கட்டமைப்பு ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்ட பிறகு, அத்தகைய வளர்ச்சி கட்டமைப்பை மிஷன் சம்ரிதி உருவாக்கி உள்ளது.

இது கிராம பஞ்சாயத்துகளின் தனிப்பட்ட, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் அந்த அமைப்புகளுக்கான அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேம்பாட்டு கட்டமைப்பு ஆகும்.

மிஷன் சம்ரிதி தனது கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை மகாராஷ்டிராவில் உள்ள வார்தா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் பாக்பத் ஆகிய இடங்களில் செயல்படுத்தி வருகிறது. மேலும் இது, மகாராஷ்டிராவில் 3 கிராமத்திலும், சத்தீஸ்கரில் 4 கிராமத்திலும், அசாமில் 3 கிராமத்திலும், 3 ஆண்டு காலத்திற்குள் அந்த கிராம பஞ்சாயத்துகளின் நிர்வாக திறன்களை வலுப்படுத்துவதற்காக தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்துராஜ் உடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.