Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழக முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின்: பதவியேற்ற பின் மாற்றப்பட்ட டுவிட்டர் விவரம்!

கண்கலங்கிய மனைவி துர்கா.. ட்ரெண்டு செய்யப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின்: பதவியேற்ற பின் மாற்றப்பட்ட டுவிட்டர் விவரம்!

Friday May 07, 2021 , 1 min Read

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். சென்னை கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறி பதவி பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்.

ஸ்டாலின் அப்படி கூறவும் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், யாரும் கவனிக்காவண்ணம் துர்கா ஸ்டாலின் தனது கண்களை துடைத்துக் கொண்டார். அவரைப் போலவே விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் பதவியேற்பின் போது கண்கலங்கினார். 


பதவியேற்பு விழாவில் கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடன் தனபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்டாலின்

ஸ்டாலின் பதவியேற்பை முன்னிட்டு ’#ChiefMinisterMKStalin’, ’#முகஸ்டாலின்_எனும்_நான்’ போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகிவரும் நிலையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ எனும் நான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒவ்வொருவரும் உறுதிமொழியை வாசித்து அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.


இதற்கிடையே, பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,

தமிழக முதல்வர், திமுக தலைவர் மற்றும் திராவிடன் என இணைத்துக்கொண்டுள்ளார் மு.க ஸ்டாலின். பதவியேற்பு விழாவை அடுத்த தற்போது தேனீர் விருந்து நடந்து வருகிறது.