சீனியர்ஸ் - ஜூனியர்ஸ் காம்போ: தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு?
வெளியானது அதிகாரபூர்வ பட்டியல்!
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். இதையடுத்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின் தன்னுடன் பதவியேற்க இருக்கும் அமைச்சர்களின் பட்டியல்களை ஆளுநரிடம் வழங்கி இருந்தார்.
அதன்படி, தற்போது புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் சிலர் இந்தமுறையும் இடம்பெற்றிருந்தாலும், பட்டியலில் பலர் புதிதாக அமைச்சர் பதவி பெறவுள்ளனர்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அமைச்சரவை விவரம்!
* முதலமைச்சர் - மு.க ஸ்டாலின். இந்திய ஆட்சிப்பணி, காவல் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறையை இவர் கவனிக்க இருக்கிறார்.
* நீர்ப்பாசனத்துறை, சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை - துரைமுருகன்
* உள்ளாட்சித்துறை - கே.என் நேரு
* மின்சாரத்துறை - செந்தில் பாலாஜி
* சுகாதாரத்துறை - மா.சுப்பிரமணியன்
* கூட்டுறவுத்துறை - ஐ.பெரியசாமி
* பொதுப்பணித் துறை - எ.வ வேலு
* பள்ளிக் கல்வித்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
* உயர் கல்வித்துறை - பொன்முடி
* தொழில்துறை - தங்கம் தென்னரசு
* வருவாய்த்துறை - KKSSR ராமச்சந்திரன்
* சட்டத்துறை - எஸ்.ரகுபதி
* வேளாண்மைத்துறை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
* ஊரக தொழில் துறை - தா.மோ.அன்பரசன்
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை - எம்.பி.சமிநாதன்
* சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை - கீதா ஜீவன்
* மீன்வளத்துறை - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
* போக்குவரத்துத் துறை - எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன்
* வனத்துறை - கே.ராமசந்திரன்
* உணவு மற்றும் பொது விநியோகத் துறை - சக்கரபாணி
* கைத்தறி மற்றும் நெசவுத் துறை - ஆர்.காந்தி
* வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை - பி.மூர்த்தி
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - எஸ்.எஸ்.சிவசங்கர்
* இந்து சமய நலத்துறை - பி.கே.சேகர்பாபு
* நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை - பழனிவேல் தியாகராஜன்
* பால்வளத்துறை - எஸ்.எம்.நாசர்
* சிறுபான்மை நலத்துறை - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
* சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை - வி.மெய்யநாதன்
* தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை - சி.வி.கணேசன்
* தொழில்நுட்பத் துறை - மனோ தங்கராஜ்
* சுற்றுலாத்துறை - மதிவேந்தன்
* ஆதிதிராட நலத்துறை - கயல்விழி