மத்திய அமைச்சர் ஆன எல்.முருகன்: மோடி கேபினெட்டில் யார் யாருக்கு இடம்?
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது!
நரேந்திர மோடி, தலைமையிலான பாஜக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு 2-வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பல முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசப்பட்டு வந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தற்போது நடந்து வருகிறது. இதற்கான விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய மத்திய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வருகிறார்.
மோடி 2.0 கேபினெட்டில் யார் யாருக்கு இடம்?
புதிதாக பதவியேற்கவுள்ள மோடி கேபினெட்டில் 43 மத்திய அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். மத்திய பிரதேச பிரபலம் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசந்திர பிரசாத் சிங், பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, அனுபமா தேவி, அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா போன்ற பல பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
1) ஜோதிராதித்ய சிந்தியா
2) சோனோவால்
3) நாராயண் தாட்டு ரானே
4) கிஷன் ரெட்டி
5) ராமச்சந்திர பிரசாத் சிங்
6) அஸ்வினி வைஷ்ணவ்
7) கிரண் ரிஜிஜூ
8) பசுபதி குமார் பாரஸ்
9) ராஜ்குமார் சிங்
10) ஹர்தீப்சிங் புரி
11) மன்சுக் மாண்டாவியா
12) பூபேந்தர்
13) புருஷோத்தம் ரூபாலா
14) அனுராக் தாக்கூர்
15) பங்கஜ் சவுத்ரி
16) அனுப்ரியா சிங் படேல்
17) சத்யபால்சிங் பாகல்
18) ராஜீவ் சந்திரசேகர்
19) சோபா
20) பானுபிரதாப் சிங் வர்மா
21) தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
23) எல்.முருகன்
24) மீனாட்சி லேகி
25) அன்னபூர்ணாதேவி
26) நாராயணசுவாமி
27) கவுசல் கிஷோர்
28) அஜய் பட்
29) பி.எல்.வர்மா
30) அஜய்குமார்
31) சவுகான் தேவ்சிங்
32) பக்வந்த் கவுபா
33) கபில் மோரேஷ்வர் படேல்
34) பிரதிமா பவுதிக்
35) சுப்ஹஸ் சர்கார்
36) பக்வத் கிஷன்ராவ் காரத்
37) ராஜ்குமார் ரஞ்சன் சிங்
38) பாரதி பிரவின் பவார்
39) பிஷ்வேஸ்வர்
40) சாந்தனு தாக்கூர்
41) முஞ்சப்பரா மகேந்திர பாய்
42) ஜான் பர்லா
43) நிதிஷ் பிரமானிக்
முன்னதாக ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் குமார் கங்கவார், பாபுல் சுப்ரியோ, தாத்ரே சஞ்சய் சம்ராவோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திரா சரங்கி, தேபஸ்ரீ சவுத்ரி எனப் பலர் தங்களின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
புதிதாக பதவியேற்கும் 43 அமைச்சர்களுக்கு எந்த கேபினட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு பதிவியேற்புக்குப் பின்னர் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
படங்கள் உதவி: ஏஎன்ஐ | தொகுப்பு: மலையரசு