கால் டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய கேப் சேவை அறிமுகம்!
அதிக சேவை, குறைந்த கமிஷன் அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு பயன் அளிக்கும் டாக்சி சேவை இது.
இணைய கால் டாக்சி சந்தையில் புதிதாக ’பரிவு கேப்ஸ்’ எனும் செயலி அறிமுகம் ஆகியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைவான கமிஷன் தொகையில் இயங்கும் வகையில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, செயலி வடிவில் வாகனங்களை அமர்த்திக்கொள்ளும் இணைய கால் டாக்சி நிறுவன சேவைகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் ’பரிவு கேப்ஸ்’ எனும் கால் டாக்சி சேவை சென்னை நிறுவனத்தால் துவக்கப்பட்டுள்ளது.
கால் டாக்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் போது, சவாரிக்கு கிடைக்கும் தொகையில் அதிக விகித கமிஷனை கால் டாக்சி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டியிருப்பதால், டிரைவர்கள் தங்கள் இலக்கை அடைய அதிக நேரம் வாகனம் ஓட்ட வேண்டியிருப்பதாகவும், இதற்குத் தீர்வாக டிரைவர்களுக்கு அதிகத் தொகை கிடைக்கும் வகையிலான சேவை அளிக்கும் நோக்கத்துடன் பரிவு கேப்ஸ் துவக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஓட்டுனர்களுக்குக் கிடைக்கு பிக்அப் மூலம் வரும் தொகையில் 10 ரூபாய் மட்டும் பரிவு கேப்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்தினால் போதும். பரிவு கேப்ஸ் நிறுவனத்தின் மூலம் எத்தனை பிக்அப், டிராப் எடுத்தாலும் ஒரு டிராப்புக்கு 10 ரூபாய் செலுத்தினாலே போதும். மேலும் நாளொன்றுக்கு எத்தனை டிராப், பிக்அப் எடுக்க வேண்டும் என்று இலக்கு கிடையாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் டிரைவர்கள் ஒரு டிரிப்பிற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சேமிக்க முடியும் என்றும், மொத்தமாக நாள் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை அதிகம் ஈட்ட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிவு கேப்ஸ் ஒரு சமூக நோக்கம் கொண்ட தொழில்முனைவரின் ஒரு முன்முயற்சி என்றும் ’சுல்னிர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் மூலம், இதை இக்னேஷியஸ் ரஃபயல் நிறுவனத்தின் இணை இயக்குனரும் சமூக ஆர்வலருமான டாக்டர் பரிவு சக்திவேல் வழி நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிவு கேப்ஸ் ஜனவரி 15ம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் 5 நாட்களில் 1850க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த செயலியில் இணைய பதிவு செய்துள்ளனர்.
செயலியை டவுண்லோடு செய்ய: Parivu Cabs