Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

டெஸ்க்டாப் மூலம் ‘WhatsApp Web' எளிதாகப் பயன்படுத்த வாட்ஸ் அப் அளிக்கும் புதிய வசதி!

கம்ப்யூட்டர் மூலம் வாட்ஸ் அப் கணக்கை அணுகுவதை எளிதாக்கும் வகையில் வாட்ஸ் அப் எளிதான லாகின் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டெஸ்க்டாப் மூலம் ‘WhatsApp Web' எளிதாகப் பயன்படுத்த வாட்ஸ் அப் அளிக்கும் புதிய வசதி!

Tuesday November 09, 2021 , 1 min Read

செல்பேசிக்கான முன்னணி மெசேஜிங் சேவையான 'வாட்ஸ் அப்' டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மூலமும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கம்ப்யூட்டரில் இருந்து பயன்படுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், எளிதான லாகின் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் செல்பேசியை இயக்காமலே கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப்பை அணுகமுடியும்.


வாட்ஸ் அப் செல்பேசி சார்ந்த சேவை என்றாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் இந்த சேவையை பயன்படுத்தும் வகையில், ‘Whatsapp Web' அறிமுகம் செய்யப்பட்டது. டெஸ்க்டாப்பிற்கான இந்த செயலி மூலம், பயனாளிகள் வாட்ஸ் அப் கணக்கை தங்கள் கம்ப்யூட்டரில் இருந்தும் அணுகி மெசேஜ்களை அனுப்பவும், பெறவும் முடியும்.

whatsapp-web-scan-code

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் ’வாட்ஸ் அப்’பை அணுகலாம் என்றாலும், இந்த வசதியை பயன்படுத்துவது கொஞ்சம் சிக்கலானது. டெஸ்க்டாப்பில் உள்ள கியூஆர் கோடை செல்பேசியில் வாட்ஸ் அப் கணக்கில் இருந்து ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை தற்போது வாட்ஸ் அப் எளிதாக்கியிருக்கிறது.

அதாவது உங்கள் மொபைல் போனை இயக்காமலே பல்வேறு சாதனங்களில் வாட்ஸ் அப் கணக்கை அணுகும் வசதியை வாட்ஸ் அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் படி, வாட்ஸ் அப் சேவையில், மல்டி டிவைஸ் வசதியை தேர்வு செய்து ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு டெஸ்க்டாப் கணக்கில் இருந்து வெளியேறும் வரை கணக்கை பயன்படுத்தலாம்.

இந்த வசதி, முன்னோட்ட அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்த நிலை மாறி இப்போது அனைத்து பயனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போனில் இது அறிமுகம் ஆகிறது.


எனினும், இந்த பல சாதன வசதியை பயன்படுத்தும் போது 14 நாட்களுக்கு மட்டுமே, டெஸ்க்டாப்பில் கணக்கும் செயலில் இருக்கும், பின்னர், மீண்டும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.