Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2024-க்குள் புதிய நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் வரப்போகிறது தெரியுமா?

அதிக இடவசதி கொண்ட புதிய நாடாளுமன்றம் மற்றும் புதிய பிரதமர் இல்லம் உருவாகிறது என தகவல் வெளியாகியுள்ளன.

2024-க்குள் புதிய நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் வரப்போகிறது தெரியுமா?

Friday February 28, 2020 , 2 min Read

தேசியத் தலைநகர் தில்லியில், பிரதமர் அலுவலகம் அமைந்திருக்கும் ‘லோக் கல்யாண் மார்க்’ பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நல்ல செய்தியாக, 2024ம் ஆண்டில் பிரதமர் இல்லம், புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் இல்லம்

ராஜீவ் காந்தி பிரதமரானவுடன் 1984 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் பிரதமர் இல்லம், 12 ஏக்கரில் அமைந்துள்ளது. தில்லியின் முதன்மை கட்டிடக்கலை வல்லுனர் எட்வின் லுட்யென் வடிவமைப்பின் படி இது அமைந்துள்ளது.


இந்நிலையில், புதிய வடிவமைப்புக்கான திட்டத்துடன் பிரதமர் இல்லம், தெற்கு பிளாக் பகுதி பின்னே ரைசினா ஹில்லில் அமைய உள்ளது. பிரதமர் இல்லத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்குமான பயண நேரத்தை குறைக்கும் வகையில், புதிய பிரதமர் அலுவலகம் தென் கிழக்கு பகுதியில் அமைய உள்ளது.


மத்தியப் பகுதியை மாற்றி அமைப்பதற்கான பிரம்மாண்ட திட்டம், புதிய நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. இது அனைத்து மத்திய அமைச்சர்களையும் அருகாமையில் கொண்டு வரும்.

இந்தத் திட்டத்திற்கான வரைபடத்தை உருவாக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ள எச்.சி.பி டிசைன் அண்ட் பிளானிங் நிறுவனத்தின் தலைவர் பிமல் பட்டேல், லுட்யென்களின் மூலத் திட்டத்தின் படி இந்த வரைபடம் அமைந்திருக்கிறது என்கிறார்.

அனைத்து அமைச்சகங்களையும் அருகாமையில் கொண்டு வருவதுடம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி இல்லங்களை அருகே கொண்டு வருவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. வடக்கு பிளாக் பின் பகுதியில் துணை ஜனாதிபதி இல்லம் அமையும்.


நாடாளுமன்றத்தை நவீனமாக்கும் வகையில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதில், நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் எழுப்பப்பட உள்ளது. 13 ஏக்கர் நிலத்தில், முக்கோண வடிவிலான கட்டிடம் கட்டப்படும். தற்போதைய மக்களவை போன்று மூன்று மடங்கு அளவிலான மக்களவை கட்டிடம் தவிர, மாநிலங்களவை மற்றும் வரவேற்புப் பகுதி அமைக்கப்பட உள்ளன.

புதிய மக்களவை இரு அவைகளின் கூட்டுத்தொடருக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். தனித்தனியே, 450 பேர் அமரக்கூடிய வகையில், 900 இருக்கைகள் கொண்ட இந்த அவை, கூட்டு நடவடிக்கைகளுக்காக 1,350 பேர் அமரும் வசதி கொண்டிருக்கும்.

எகிப்து நாடாளுமன்றத்தை பின்பற்றிக் கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பின்னருக்கும் 50 சதவீத கூடுதல் இடம் அளிக்கும்.

“தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் குளிர்சாதன வசதி, இணைய பிராட்பேண்ட் மற்றும் பார்கிங் வசதி செய்ய ஏற்றதாக இல்லை. இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு புதிய கட்டிடம் அமைந்திருக்கும்,” என்று பட்டேல் கூறுகிறார்.

புதிய கட்டிடம் இந்தியாவின் பன்முகத்தனமையை பிரதிபலிக்கும் வகையில் மாறுபட்ட ஜன்னல்களை கொண்டிருக்கும்.


மத்தியப் பகுதியில் 22 அமைச்சகங்களைக் கொண்டிருப்பதோடு, ராஜ்பாத்தின் இரண்டு பக்கத்திலும், அனைத்து அமைச்சகங்களுக்கான அலுவலகம் அமைந்திருக்கும். ஒருங்கிணைந்த சுரங்க பார்க்கிங் வசதியுடன், தில்லி மெட்ரோவுக்கான பயணிகள் இணைப்பு வசதியும் கொண்டிருக்கும்.


செய்தி: பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு | தமிழில்: சைபர்சிம்மன்