Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

செய்திகளை மீம் வடிவில் கொடுக்கும் ஆப் தொடங்கியுள்ள இளைஞர்!

Nyus செயலி மூலம் பயனர்கள் செய்திகளை வாசித்து, மீம் உருவாக்கி, கலந்துரையாடல்களில் பங்கேற்று, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்பதால் செய்தி என்பது புதுவித அனுபவமாக மாறிவிடுகிறது.

செய்திகளை மீம் வடிவில் கொடுக்கும்  ஆப் தொடங்கியுள்ள இளைஞர்!

Saturday February 05, 2022 , 3 min Read

இந்தியாவில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். சுமார் 250 மில்லியன் பேர் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. இதனால் புதிய தயாரிப்புகளும் சேவைகளும் இவர்களை முன்னிறுத்தியே உருவாக்கப்படுகின்றன.

புரு தக்கர் Nyus நிறுவனத்தின் நிறுவனர். இவர் செய்திகளை மீம்களாக மாற்றி புதிய வகையில் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கிறார்.

புருவிற்கு 20 வயதாகிறது. குஜராத்தின் வதோதராவில் பிறந்து வளர்ந்தார். ஜெய்ப்பூர் குளோபல் செண்டர் ஆஃப் எண்டர்பிரனர்ஷிப் கல்வி நிலையத்தில் வணிக நிர்வாகம் பிரிவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு கோடிங் மீது ஆர்வம் அதிகம். 11 வயதிலேயே கோடிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அப்போதே தொழில் தொடங்க வேண்டும் என்கிற வேட்கையும் பிறந்துள்ளது.

1
“பன்னிரண்டாம் வகுப்பு முடித்தேன். பட்டப்படிப்பில் ஈர்ப்பு இல்லாமல் போனது. பெங்களூரு சென்று இன்டர்ன்ஷிப் முயற்சி செய்தேன். என்னுடைய கவனம் முழுவதும் ஸ்டார்ட் அப் உலகையே வலம் வந்துகொண்டிருந்தது. கல்லூரிப் படிப்பு அவசியம் என்பதை உணர்ந்து பட்டப்படிப்பு மேற்கொண்டேன்,” என்கிறார்.

Nyus தொடக்கப்புள்ளி

2020-ம் ஆண்டில் பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டபோது புரு, ரெட்டிட் தளத்தைப் பார்வையிட்டுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருந்த சமயம் என்பதால் எங்கு பார்த்தாலும் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய மீம்கள் இருந்தன.

செய்திகளை மீம்ஸ் வாயிலாகவே தெரிந்து கொள்வதாக புருவிடம் ஒருவர் தற்செயலாகக் கூறியிருக்கிறார். இதுவே இந்தப் புதிய தொழில் முயற்சிக்கான விதையை புருவின் மனதில் விதைத்துள்ளது.

“வழக்கமாக ஒருவர் மீம்ஸ் பார்க்கும்போது, அது தொடர்பான செய்தியை கூகுளில் தேடுவார். Nyus நியூஸ் மீம்கள் வேடிக்கையாக இருப்பதுடன் தலைப்புச் செய்தியாகவும் செய்தி சுருக்கமாகவும் தகவல்களை வழங்கிவிடுகிறது,” என புரு விவரித்தார்.

யுவர்ஸ்டோரியின் 2021 டெக்50 ஸ்டார்ட் அப்கள் பட்டியலில் Nyus இடம்பெற்றிருந்தது. Inshorts, DailyHunt போன்ற செயலிகளும் Memechat, Sharechat போன்ற மீம்ஸ் சார்ந்த தளங்களும் இதன் போட்டியாளர்கள்.

2
Nyus ஆண்ட்ராய்ட் ஆப் 20,000 பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. தினசரி பதிவுகள் 4,500 என்கிற எண்ணிக்கையில் பார்வையிடப்படும் நிலையில் வாராந்திர ஆக்டிவ் பயனர்கள் எண்ணிக்கை 600-ஆக உள்ளது. இதில் 90 சதவீதம் பேர் ஒரு வாரத்தில் நான்கு முறைக்கு மேல் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

Nyus செயல்பாடுகள்

13 முதல் 24 வயதுடையர்வகளை இலக்காகக் கொண்டே Nyus செயல்படுகிறது. இது இலவசமாகப் பயன்படுத்தும் வகையிலான செயலி.

இந்த செய்தி செயலியில் பயனர்கள் செய்திகளை வாசிக்கலாம், மீம் உருவாக்கலாம், கலந்துரையாடல்களில் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் செய்தி என்பது வேடிக்கையான அனுபவமாக மாறுவதுடன் சமூகத்துடன் ஒருங்கிணைந்து புதுவித அனுபவத்தையும் வழங்குகிறது.

இந்தச் செயலியில் அன்றாட செய்திகள் வழங்கப்படுவதுடன் பாலியல் கல்வி, தனிப்பட்ட நிதி, தொழில் வாழ்க்கை, உளவியல், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

வருவாய் மற்றும் சவால்கள்

Nyus ஸ்டார்ட் அப் தற்சமயம் வருவாய் ஏதும் ஈட்டவில்லை. வரும் நாட்களில் ஸ்பான்சர்ஷிப் மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்காக பிரத்யேக சேவையளிக்கும் பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களுடன் கைகோர்க்கவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது. இவர்கள் மூலம் தங்கள் பிராடக்டை விளம்பரப்படுத்தி, பயனர்களிடம் கொண்டு சேர்க்கவும் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது.

உள்ளடக்கத்தின் தரமும் அளவும் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் Nyus நான்கைந்து பதிவுகள் மட்டுமே கொண்டிருந்தது. பின்னர், மற்ற மீம்களையும் தளத்தில் இணைத்துக்கொள்ள புரு முடிவு செய்தார்.

“தற்போது நாள் ஒன்றிற்கு 17-20 கட்டுரைகள் பதிவிடுகிறோம். இதை மேலும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்,” என்கிறார்.
3

வருங்காலத் திட்டங்கள்

அமெரிக்கா போன்ற பெரிய சந்தைகளில் விரிவடையவேண்டும் என்பதே புருவின் நீண்டகால இலக்காக உள்ளது. கல்வி உள்ளிட்ட மற்ற பிரிவுகளிலும் விரிவடைய விரும்புகிறார். இதுதொடர்பாக கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து உள்ளடக்கம் உருவாக்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறார்.

பயனர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, விளம்பரங்களை முயற்சிப்பது, ஸ்பான்சர்ஷிப் மூலம் வருவாய் ஈட்டுவது மட்டுமல்லாது வருவாய் ஈட்டுவதற்கான மற்ற மார்க்கங்களையும் ஆராய்வது உள்ளிட்ட குறுகியகால இலக்குகளுடன் புரு பயணிக்கிறார். மார்க்கெட்டிங், தொழில்நுட்பம், உள்ளடக்கம் போன்ற துறைகளில் குழுவை விரிவுபடுத்த உள்ளார்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் நாட்டு நடப்பு குறித்தும் உலக செய்திகள் குறித்தும் அறிந்திருப்பது அவசியம். இதை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக வழங்குகிறது Nyus.

ஆங்கில கட்டுரையாளர்: மேகா அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா