Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல; ஆனா ஜாமுக்கு இருக்கு' - அமைச்சரிடம் நகைச்சுவையோடு புலம்பிய ‘அன்னபூர்ணா’ சீனிவாசன்!

இனிப்பு, காரம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாதிரியான ஜிஎஸ்டி வரிவிதிப்பால், உணவகங்களை நடத்த முடியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சீனிவாசன், கோவை ஸ்டைலில் நகைச்சுவையாக புகார் அளித்தார்.

'பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல; ஆனா ஜாமுக்கு இருக்கு' - அமைச்சரிடம் நகைச்சுவையோடு புலம்பிய ‘அன்னபூர்ணா’ சீனிவாசன்!

Thursday September 12, 2024 , 3 min Read

கோவை கொடிசியா வளாகத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள், சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார்.

அதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு, தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு தொழிலதிபர்கள், தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும தலைவருமான சீனிவாசன், இனிப்பு, காரம் என ஒவ்வொன்றிற்கும் வேறு வேறான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், வியாபாரிகள் படும் கஷ்டங்களைக் குறித்து எடுத்துரைத்தார். காரசாரமான இந்த விவகாரத்தை, அவர் நகைச்சுவையான விதத்தில் எடுத்துக் கூறியதால், அந்த அரங்கமே கலகலப்பாக மாறியது.

nirmala

பன்னுக்கு இல்ல.. ஜாமுக்கு உண்டு!

அன்னபூர்ணா உணவக தலவர் சீனிவாசன், ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்களுக்கு ஏற்படும் தினசரி பிரச்சனைகளை அடுக்கினார். அப்போது,

“பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், அதில், கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வருது. இதனால், வாடிக்கையாளர்கள் பன்னையும், கிரீமையும் கொண்டு வாங்க, நாங்களே வச்சுக்கிறோம்னு சொல்றாங்க...” என தாங்கள் வாடிக்கையாளரிடம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினையை, எல்லோருக்கும் புரியும் வகையில், அதே சமயத்தில் கோபமாக இல்லாமல் சிரித்துக் கொண்டே சீனிவாசன் எடுத்துக் கூறிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

மேலும், அந்த வீடியோவில் அவர், “ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசம் வித்தியாசமாக ஜி.எஸ்.டி., போடுவது பிரச்னையாக இருக்கிறது. அனைத்திற்கும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.,யை நிர்ணயிக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.

உங்க பக்கத்துல இருக்கிற எம்.எல்.ஏ. (வானதி சீனிவாசன்) எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர். அவங்க ஜிலேபி ஸ்வீட் சாப்பிடும்போது, அதுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அப்புறம் காபி குடிக்கும் முன் காரம் சாப்பிடும்போது, காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி என இருமாதிரியான ஜிஎஸ்டி போட வேண்டி இருக்கிறது. அதற்காக அவங்க சண்டைக்கு வராங்க. இது தினமும் நடக்கிறது.

"வடமாநிலத்தில் இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும், காரத்திற்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.,யும் விதிக்கப்படுவதாக எங்க தொகுதி எம்.எல்.ஏ., (வானதி) கூறுகிறார்," என்று அதையும் சேர்த்து தன் பேச்சில் கொண்டுவந்தபோது அமைச்சர் உட்பட அரங்கமே சிரித்தது.
nirmala

அன்னபூர்ணா ஹோட்டல் குழும தலைவர் சீனிவாசன்

கம்யூட்டரே திணறுது மேடம்!

ஒரே பில்லில் ஒரே குடும்பத்திற்கு வெவ்வேறு மாதிரி ஜி.எஸ்.டி., போட்டுக்கொடுப்பது கஷ்டமாக இருக்கு. இப்படி பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே, தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள். கடையே நடத்த முடியலைங்க மேடம். எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜி.எஸ்.டி.,யை உயர்த்தினால் பரவாயில்லை. ஒரே மாதிரியா பண்ணுங்க,” என வியாபாரிகள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சீனிவாசன் எடுத்துக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன்,

”மாநில வாரியாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு இல்லைங்க...” என்றார். ஆனாலும், தனது வாதத்தில் உறுதியாக இருந்த சீனிவாசன், ‘நீங்கள் ஜிஎஸ்டியை உயர்த்தாமல் இருந்தாலே போதும்’ என தொடர்ந்து தங்களது பக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“ஜி.எஸ்.டி., அதிகாரிகள், இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது, அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது, அதிகாரிகளே திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவி பண்ணுங்க.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மாதிரி ஏதேனும் நிகழ்வு வரும் போது, வருஷத்துல ஏதாவது ஒரு நாள் தான் ஹோட்டல்களில் ஒரு அறைக்கு 7,500 என பில் போடுகிறோம். கூடுதல் பெட் கொடுத்தால் ரூ.1,000 சேர்த்து பில் பண்ணுவோம். அதுவும் தற்போது ஹோட்டல்களின் அறை கட்டணங்களை மேக் மை ட்ரிப் தான் நிர்ணயிக்கிறது. ஒரு நாள் 7,500 பில் போட்டதற்கு ஆண்டு முழுவதும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., போடுகிறார்கள். இதனை கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்,” என சீனிவாசன் வலியுறுத்தினார்.
nirmala

கலகலப்பான அரங்கம்

அதே நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோவை எம்.எல்.ஏ., வானதியும் மேடையில் அமர்ந்திருக்க, அவரை வைத்து நடந்த சம்பவங்களையே உதாரணமாகக் கூறி, நாசூக்காக கோவைக்கே உரிய நகைச்சுவையான பாணியில் தங்கள் கோரிக்கையை சீனிவாசன் முன்வைத்தவிதம், அரங்கில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேடைக்கு கீழே அமர்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவை தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர், சீனிவாசன் பேச்சுக்கு கைத்தட்டி வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.