Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பீரியட்ஸ் தேதி மறந்துவிடுகிறதா? இனி WhatsApp மூலம் அறிந்த கொள்ள வந்தாச்சு ‘Period Tracker'

Sirona வாட்ஸ் அப் பிசினஸ் அக்கவுண்டிற்கு ஒரு “Hi” மெசேஜ் அனுப்பினால் போதும் பயனர்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை எளிதாகக் கண்காணித்துக்கொள்ளலாம் என இந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீரியட்ஸ் தேதி மறந்துவிடுகிறதா? இனி WhatsApp மூலம் அறிந்த கொள்ள வந்தாச்சு ‘Period Tracker'

Friday July 15, 2022 , 2 min Read

பெண்களின் சுகாதாரம் தொடர்பாக செயல்படும் பிராண்ட் Sirona Hygiene. இந்த பிராண்ட் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் 'பீரியட் ட்ராக்கர்’ 'Period Tracker' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Sirona, வாட்ஸ் அப் பிசினஸ் அக்கவுண்டிற்கு ஒரு 'Hi' மெசேஜ் அனுப்பினால் போதும் பயனர்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை எளிதாகக் கண்காணித்துக்கொள்ளலாம் என இந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த சுழற்சியைக் கண்காணித்துக்கொள்ள இந்த வசதி உதவும்.

1

மூன்று விஷயங்களைக் கண்காணித்துக்கொள்ள இந்த பீரியட் ட்ராக்கர் உதவும் என அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. மாதவிடாய் சமயத்தை ட்ராக் செய்துகொள்ளலாம்
  2. கருவுற்றிருப்பதை கண்காணித்துக்கொள்ளலாம்
  3. கருவுறுவதைத் தவிர்க்கலாம்.

மாதவிடாய் பற்றிய அடிப்படைத் தகவல்களை பயனர்கள் பதிவிடவேண்டும். கடைசியாக மாதவிடாய் வந்த தேதியைக் குறிப்பிடவேண்டும். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சாட்பாட், வரவிருக்கும் மாதவிடாய் சுழற்சியைப் பற்றி பயனருக்கு நினைவூட்டும்.

Sirona பெண்களுக்கான பல்வேறு சுகாதாரப் பொருட்களை வழங்குகிறது. மாதவிடாய் சமயத்தில் தேவைப்படும் பொருட்கள், அந்தரங்க பகுதிகளுக்கான சுகாதாரப் பொருட்கள், கழிப்பறை சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை வழங்குகிறது.

“மாதவிடாய் தொடர்பான சிக்கல்களைப் போக்கி தீர்வளிக்கும் திறன் தொழில்நுட்பத்திற்கு உள்ளது. அதைக் கொண்டு பயனர்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புகிறோம். செயற்கை நுண்ணறிவு, ஃப்ரென்ட்லியான இண்டர்ஃபேஸ் ஆகியவற்றைக் கொண்டு பயனர்கள் எளிதாக தகவல்களை அணுக உதவுகிறோம். வாட்ஸ் அப் இன்று நம் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ள நிலையில் பயனர்கள் அதன் மூலம் பலனடைய வழி வகுத்திருக்கிறோம்,” என்கிறார் Sirona Hygiene Pvt Ltd இணை நிறுவனர் தீப் பஜாஜ்.
Period
“சிறப்பான தாககத்தை ஏற்படுத்தக்கூடிய இப்படிப்பட்ட ஒரு புதுமையான முயற்சிக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுவதும் உள்ள பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொள்ள பாதுகாப்பான, நம்பகமான தளமாக வாட்ஸ் அப் விளங்குகிறது. சுகாதாரம் தொடர்பாக மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படும் நிறுவனங்கள் வாட்ஸ் அப் பிசினஸ் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறோம்,” என்கிறார் வாட்ஸ் அப் பார்ட்னர்ஷிப்ஸ்-பிசினஸ் மெசேஜிங், இந்தியா, இயக்குநர் ரவி கார்க்.

சமீபத்தில் Sirona நிறுவனம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக முழுமையான தீர்வளிக்கும் வகையில் Sirona App அறிமுகப்படுத்தியது. மின்வணிகம், கல்வி உள்ளடக்கங்கள், கம்யூனிட்டி என்கேஜ்மெண்ட், செயலியினுள் அமைக்கப்பட்ட பீரியட் ட்ராக்கர் போன்றவற்றை இந்த செயலி கொண்டிருக்கிறது.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கமின்றி பயனர்கள் வெளிப்படையாகத் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு பாதுகாப்பான பகுதியாக இது விளங்குகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா