இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விரைவில் அறிமுகம்!
மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை அனைத்து தரப்பு மக்களும் எளிதாகவும், விரைவாகவும் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக, பயணிகள் லோக்கல் ட்ரெயின் சேவையில் உள்ளது போல் டிக்கெட் எடுக்க அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும் முறையைத் தவிர, பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடுமுறை ஆகிய முறைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.
குறைவான நேரத்திற்குள் எளிதாக பயணிக்க முடியும் என்பதால் சென்னையில் தினந்தோறும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.
வாட்ஸ்-அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வழி
தற்போது மெட்ரோ ரயில்பயணிகளுக்கு பயணச் சீட்டை பெறுவதற்கு ஏதுவாக வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வாட்ஸ் அப் மூலம் எப்படி டிக்கெட் எடுக்க முடியும் என தெளிவாக விளக்கியுள்ளார்.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ’ஹாய்( Hi)' என்று குறுந்தகவல் அனுப்பினால் ‘சார்ட் போட்' என்ற தகவல் வரும்.
- அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவு செய்து, வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே, யு-பே மூலமோ பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துவிடும்.
- இந்த டிக்கெட்டை ரயில் நிலைய நுழைவாயில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து, ரயில், மெட்ரோ... இனி சென்னை முழுக்க எதில் பயணித்தாலும் ‘ஒரே டிக்கெட்’