ஒலா எலெக்ட்ரிக் S1 ஜென்3 ஸ்கூட்டர்கள் டெலிவரி துவக்கம்!
இந்த ஸ்கூட்டர் ரூ.79,999 (S1 X (2kWh) எனும் விலையில் துவங்கி, ரூ.1,69,999 வரை (பாரத் செல்லுடன் கூடிய S1 Pro+ 5.3kWh) அமைகிறது.
ஓலா எலெக்ட்ரிக் தனது எச் ஜென் 3 ஸ்கூட்டர் ரகங்கள் விற்பனை டெலிவரி இந்திய அளவில் துவங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டர் ரூ.79,999 (S1 X (2kWh) எனும் விலையில் துவங்கி, ரூ.1,69,999 வரை (பாரத் செல்லுடன் கூடிய S1 Pro+ 5.3kWh ) அமைகிறது.
எஸ் 1 ஜென் 3 ஸ்கூட்டர்கள் ஓலா எலெக்ட்ரிக் விற்பனை நிலைய வலைப்பின்னல் மற்றும் நேரடி டெலிவரி மூலமாக டெலிவரி செய்யப்படுவதாக நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
மேம்பட்ட செயல்திறன், அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிக செயல்பாட்டை இந்த்ய ரக ஸ்கூட்டர்கள் அளிப்பதாக நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

அண்மையில், மத்திய கணரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால், விற்பனை தறவுகள் பிறழ்வுகள் மற்றும் சான்றிதழ் தேவை தொடர்பான விதிமுறைகள் தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் தொடர்பு கொள்ளப்பட்டது. இதற்கு நிறுவனம் இ-மெயிலில் பதில் அளித்து வருகிறது.
பிப்ரவரி 28ல், வெளியிட்ட அறிக்கையில் நிறுவனம் இந்த மாதம் 25,000 வாகனங்கள் விற்பனை செய்து இப்பிரிவில் முன்னிலையை மீண்டும் பெற்றதாக கூறினாலும், வாஹன் தேசிய பதிவேடு தளம் 8,600 வாகனங்களை மட்டுமே குறிப்பிட்டது.
தனது வாகன பதிவு நிறுவனங்கள் ரோஸ்மெட்ரா டிஜிட்டல் மற்றும் ஷிம்ஷிட் இந்தியா ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சு வார்த்த நடத்தி வருவதாக அப்போது நிறுவனம் தெரிவித்தது. இதன் காரணமாக, அரசின் வாஹன் தளத்தில் நிறுவன வாகன பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தி-பிடிஐ
Edited by Induja Raghunathan