1,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க Ola முடிவு!
ஓலாவின் இந்த நடவடிக்கை செலவு குறைப்பு நோக்கிலானது அல்லாமல் மறுசீரமைப்பிலானது எனக் கருதப்படுகிறது. பணி இழக்கும் ஒருவரது இடத்தில் ஓலா எலெக்ட்ரிக் நான்கு பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து யூனிகார்ன் நிறுவனமான
, 1000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்து ஓலா எலெக்ட்ரிக்கில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. பணி இழக்கும் ஒருவரது இடத்தில் ஓலா எலெக்ட்ரிக் நான்கு பேரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.1000 ஊழியர்களை ஓலா ஏன் பணி நீக்குகிறது?
ஓலா நிறுவனம், 400 – 500 ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக, ’தி எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் முதலில் செய்தி வெளியிட்டது. எனினும், இந்த எண்ணிக்கை 1,000 ஆகலாம் எனக் கூறப்படுகிறது. எந்த ஊழியர்களை தக்க வைத்துக்கொள்வது என நிறுவனம் பரிசீலித்து வருவதால் இந்த செயல்முறை மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களை தானாக விலக ஓலா கேட்டிருப்பதாகவும், அதுவரை ஊதிய உயர்வு பரிசீலனையை தள்ளி வைத்திருப்பதாகவும் ஓலா நிறுவன அதிகாரி ஒருவர் எக்கனாமிக் டைமிசிடம் கூறியுள்ளார்.
“பணி நீக்கம் செய்ய விரும்பும் ஊழியர்கள், அவர்களாக பதவி விலகும் வகையில் பல்வேறு ஊழியர்களின் சம்பள உயர்வு பரீசிலனையை நிறுவனம் தாமதமப்படுத்துகிறது,” என ஓலா ஊழியர் ஒருவர் கூறினார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கார் வர்த்தகப் பிரிவில் 800 ஊழியர்களை நியமிக்க உள்ளது. மேலும், பலர் செல் ஆக்கம் பிரிவில் நியமிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக இந்த வாரம், உள்நாட்டு செல் தயாரிப்பு தொடர்பாக ஓலா எலெக்ட்ரிக் ரூ.18,000 கோடி பி.எல்.ஐ ஒப்பந்தத்தை அரசுடன் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்