நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்ன?

By YS TEAM TAMIL|12th Nov 2020
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி மேடைகள் தகவல் ஒளிபரப்பு அமைக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது, இந்த சேவைகள் தாங்கள் ஸ்டிரீம் செய்யும் உள்ளடக்கத்திற்கு அனுமதி பெறும் நிலையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி எனப்படும் ஸ்டிரீமிங் சேவை நிறுவனங்களை தகவல் ஒளிபரப்பு அமைக்கசத்தின் கீழ் அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த சேவைகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைக்கத்தின் பார்வையில் இருந்தன.


இணையம் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை ஸ்டிரீமிங் மூலம் வழங்கும் சேவைகள் 'ஓவர் தி டாப்' (OTT) மேடைகள் என அழைக்கப்படுகின்றன. தொடக்கத்தில் உள்ளடக்கத்தை விநியோகம் செய்து வந்த சேவைகள், தற்போது குறும்படங்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றை சொந்தமாக தயாரித்தும் வழங்குகின்றன.


பெரும்பாலான ஓடிடி மேடைகள், பொதுவாக மாதச் சந்தா அடிப்படையில் உள்ளடக்கத்தை வழங்குகின்றன. சொந்த தயாரிப்புகள் பிரிமியம் கட்டணச்சேவையாக அளிக்கப்படுகின்றன.

ஓடிடி தளங்களுக்கு இருந்த கட்டுபாடுகள் என்ன?

அண்மை காலத்தில் ஓடிடி சேவைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரலபலமாகி இருக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை, இந்த புதிய ஊடக வகையை முறைப்படுத்த எந்த கட்டுப்பாட்டு விதிகளும் தற்போது இல்லை.

தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய ஒலிபரப்பு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடக்கின்றன. ஆனால், ஓடிடி மேடைகளை உள்ளடக்கிய டிஜிட்டல் ஊடகங்களுக்கு இத்தகைய நெறிமுறைகள் இல்லை.

இதனிடையே, ஓடிடி மேடைகள் வழங்கப்படும் சில உள்ளடக்கம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இது தொடர்பான விவாதமும் நடைபெற்று வருகின்றன.


ஓடிடி மேடைகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனும் வாதத்திற்கு மத்தியில், இந்த மேடைகளுக்கான அமைப்பான, இந்திய இணையம் மற்றும் மொபைல் (IAMAI) சங்கம், சுய கட்டுப்பாட்டு யோசனையை முன்வைத்தது. எனினும் இந்த யோசனை தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது.


இந்நிலையில், டிஜிட்டல் உள்ளடக்கத்தை முறைப்படுத்துவதன் முதல் கட்டமாக, ஓடிடி சேவைகள் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆய்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ள நிலையில் இதற்கான அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை, ஸ்டிரீமிங் உள்ளடக்கத்திற்கு ஓடிடி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. ஆபாச உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த இது அவசியம் என கருதப்பட்டாலும், இது தணிக்கைக்கு வழி வகுக்கும் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

ஓடிடி மேடைகள் பெரும்பாலும் ஆவணப்படங்கள் போன்றவற்றை வழங்கி வருவதால், தணிக்கை செய்யப்படும் முயற்சியை கடுமையாக எதிர்க்கும் என்றும் கருதப்படுகிறது.


தொகுப்பு: சைபர்சிம்மன்