சிறிய பிராண்ட்கள் இன்ஸ்டாகிராமில் விற்பனையை அதிகரிக்க உதவும் டிஜிட்டல் மேடை Oyela
குருகிராமைச் சேர்ந்த ’ஒயேலா’ ஸ்டார்ட் அப் நிறுவனம், புது யுக சமூக ஊடக கடைகள், சேவை உருவாக்குனர்கள் தங்கள் வர்த்தகத்தை வலைப்பின்னல் சார்ந்த மேடை மூலம் வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
பெண்கள் ஆடைகளுக்கான ஆன்லைன் பிராண்டை இன்ஸ்டாகிராமில் உருவாக்க முயன்ற ஆரம்ப நாட்களில் 26 வயதான 'விட்ஸி விட்சிவோனோ' எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டியிருப்பதால் திக்குமுக்காடிப் போனார்.
“பேமெண்டை சேகரிப்பது, ஷிப்பிங், வாடிக்கையாளர் ஆதரவு என எல்லாவற்றையும் கவனிப்பது மிகவும் சிக்கலாக இருந்தது,” என்கிறார்.
மில்லினியல் மற்றும் ஜென் ஜி தலைமுறையில் 63 சதவீதம் பேர் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் மற்றும் நிதி சுதந்திரம் பெற வேண்டும் என விரும்புவதாக டெலாய்ட் ஆய்வு தெரிவிக்கிறது. எனினும், சமூக ஊடக மேடைகள் வர்த்தக நோக்கில் உருவாக்கப்படவில்லை என்பது ஒரு தடையாக இருக்கிறது.
இந்த பின்னணியில் தான், வலைப்பின்னல் சார்ந்த கூட்டு வர்த்தக மேடையான ’ஒயேலா’ (
) வருகிறது. இந்த மேடை சிறு வர்த்தகர்கள் சமூக ஊடகத்தில் செயல்படுவதற்கான சாதனங்கள், வளங்கள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.2021ல் ஐஐடி பாம்பே பட்டதாரிகள் ராகுல் கோபே மற்றும் அஞ்சன் குமார் பட்டேல் துவக்கிய இந்த குருகிராம் ஸ்டார்ட் அப் விட்சிவோனோ தனது மொத்த செயல்முறையையும் தானியங்கிமயமாக்கி, தன்னுடைய சேவையை தேர்வு செய்து காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்த வைத்தது. செயல்பாடுகளை சீராக்கியது, விற்பனையை, மாதம் 200 பொருட்கள் என்பதில் இருந்து 3000 பொருளுக்கு மேல் உயர்த்தியதாகக் கூறுகிறார்.
“ஒயேலா வருமானம் மூலம், நிஜ உலக ரீடைல் பரப்பிலும் நுழைந்துள்ளோம்,” என்று அவர் யுவர்ஸ்டோரியிடம் கூறினார்.
முக்கிய அம்சங்கள்
40 உறுப்பினர் கொண்ட இந்த ஸ்டார்ட் அப், வர்த்தகங்கள் தங்கள் டிஜிட்டல் கடை அமைத்து பராமரிக்க உதவுகிறது. விற்பனையாளர்களுடன் கூட்டு முயற்சி, செயல்பாடுகள் சீராக்கம், இன்ஸ்டாகிராம் தானியங்கிமயம் மூலம் சமூக ஊடக வீச்சு ஆகிய அம்சங்களை நிறுவனம் வழங்குகிறது.
ஒயேலாவின் கூட்டு தொழில்நுட்ப சாதனம், மேலும் வீச்சிற்காக ஒவ்வொருவர் கடையுடனும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு, ஆதரவு பெற உதவுகிறது. சமூக ஊடக தானியங்கி வசதி இன்ஸ்டாகிராமில் பொருட்களை பதிவுகளாக மாற்றி, இன்ஸ்டா மூலம் ஆர்டர்கள் பெறுவதை சீராக்குகிறது.
மேலும், ஒயேலாவின் ஏஐ அமைப்பு வர்த்தகங்கள் பொய்யான விற்பனையாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளை கண்டறிய வழி செய்கிறது. கடையில் தெளிவான ரேட்டிங், விமர்சன கருத்துக்களை காண்பிப்பதன் மூலம் விற்பனையாளர்களுக்கான நம்பிக்கையை உண்டாக்குகிறது. இந்த ஏஐ நுட்பம், 14 பழக்க வழக்க அம்சங்கள் மற்றும் விற்பனை காரணிகளை கணக்கில் கொள்கிறது. இதன் மூலம் மோசடி விற்பனையாளர்கள் கண்டறிந்து விலக்கப்படுகின்றனர்.
“எங்கள் மேடை தரவுகள் படி, கடந்த ஒரு லட்சம் ஆர்டர்களில் 3,000 மட்டுமே திரும்பி வந்தவை மற்றும் பணம் திரும்பி கேட்டவை. இது ஒயேலா விற்பனையாளர்களுக்கு தொடர் விற்பனையாக அமைகிறது,” என்கிறார் ராகுல் கோபே.
சிறு வர்த்தகர்களுக்கு உதவி
கோபே தான் வர்த்தகம் துவங்கிய போது எதிர்பார்த்த அம்சங்களை பிற வர்த்தகர்களுக்கு வழங்குவதற்காக பட்டேலுடன் இணைந்து ஒயேலாவை துவக்கினார். இவர்கள் ஐஐடி பாம்பேவில் படித்த போது அறைத்தோழர்கள். பட்டேல் பின்னர் ஜேபி மோர்கன் மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றினார்.
“அந்தமான் தீவுகளைச் சேர்ந்த நான், என் பெற்றோர்களுடன் இணைந்து ஆன்லைன் முத்து நிலையத்தை நடத்தினேன். எனினும் சொந்த வர்த்தகமாக உணர்ந்ததைவிட பயணியாகவே உணர்ந்தேன். எனினும், கண்டறிதல் சிக்கல் செயல்பாடுகள் வரம்பு காரணமாக வர்த்தகம் தோல்வியில் முடிந்தது,” என்கிறார் கோபே.
“இந்தியாவில் இத்தகைய படைப்பூக்கம் நிறைந்த தொழில்முனைவு எழுச்சியை உணர்ந்ததால், நான் தொழில்முனைவில் எதிர்கொண்ட சவால்கள் இந்த தலைமுறை முழுவதற்கும் இருக்கும் என நினைத்தேன்” என்கிறார்.
சமூக ஊடக மேடையை செயல்திறன் வாய்ந்த விற்பனை மேடையாக மாற்றும் நோக்கத்துடன் ஓயேலா செயல்படுகிறது. விற்பனையாளர்களுக்கான சப்ளை சைன் உருவாக்கத்தில் உதவுவதன் மூலம் விற்பனையாளர்கள் செயல்பாடு வரம்புகளை எதிர்கொள்ள வழி செய்கிறது.
எதிர்கால திட்டம்
2023 அக்டோபரில் நிறுவனம் ரூ14.4 கோடி விதை நிதியை பிரைம் வென்சர் பாட்னர்ஸ் தலைமையிலான சுற்றில் பெற்றது. இந்த நிதியை நிறுவனம் உள்கட்டமைப்பு மற்றும் சப்ளை சைனை சீராக்க புதிய விற்பனை அம்சங்களை அறிமுகம் செய்ய பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஒயேலாவில் 20 ஆயிரத்திற்கும் மேலான இண்ஸ்டாகிராம் கடைகள் இணைந்துள்ளன. இவற்றில் பல, 2.5 மடங்கு ஆர்டர் வளர்ச்சி பெற்றுள்ளன. புதிய வாடிக்கையாளர்களை செலவில்லாமல் பெற்றுள்ளன. தற்போது நிறுவனம் தனது மேடையில் 25 ஆயிரத்திற்கும் மேலான விற்பனையாளர்களைக் கொண்டுள்ளது.
“அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தகைய 2 மில்லியன் சமூக கடைகள் நிறுவப்பட உதவ வேண்டும் என்பது இலக்கு. இதன் மூலம் இந்தியாவி இ-காமர்ஸ் சந்தையில் 1.6 சதவீதம் மற்றும் சமூக வர்த்தகத்தில் 9.5 சதவீதம் பங்கு வகிக்க நோக்கம்,” என்கிறார் கோபே.
மற்ற விற்பனையாளர்களுடனான கூட்டு முயற்சி மூலம் பெரும்பாலான விற்பனையாளர்களை தனது மேடையில் ஈர்க்கிறது. விற்பனையாளர்களிடம் இருந்து கமிஷன் பெறுகிறது.
இந்நிறுவனம் 2025 நிதியாண்டில் வருவாய் விகிதமாக மொத்த விற்பனை மதிப்பில் 3 மில்லியன் டாலர் எதிர்பார்க்கிறது. மாதாந்திர வருவாய் வளர்ச்சி 20 சதவீதமாக உள்ளது. எட்ஸி மற்றும் ஸ்விக்கி மினிஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
டுக்கான் போன்ற சாஸ் சேவைகள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் நிலையில், மீஷோ, அமேசான், எட்சி போன்றவை பெரிய வர்த்தகங்களுக்கானது. இதன் காரணமாக சிறிய வர்த்தகங்கள் இன்ஸ்டாகிராம் போன்ற மேடைகளை பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் சமூக மற்றும் உள்ளடக்க வர்த்தகம் 2020ல் 70 பில்லியன் டாலராக இருக்கும் என பைன் அண்ட் கம்பெனி தெரிவிக்கிறது. சிறிய மற்றும் மீடியம் வர்த்தகங்கள் சமூக ஊடக மேடைகளை விற்பனைக்கு பயன்படுத்தும் போக்கு இதற்கு அடிப்படையாக அமைகிறது.
“தற்போது உலக அளவில் 200 மில்லியனுக்கும் மேல் வர்த்தகங்கள் இன்ஸ்டாகிராமை விற்பனைக்காக பயன்படுத்துகின்றன. அடுத்த 10 ஆண்டுகள் இ-காமர்ஸ் பிரிவில் ஜென் ஜி தலைமுறையில் முக்கிய பங்களிப்பை பெறும்,” என்கிறார் கோபே.
ஆங்கிலத்தில்: புவனா காமத் | தமிழில்: சைபர் சிம்மன்
சிறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைனில் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்யும் 'Vyaparify'
Edited by Induja Raghunathan