மார்ச் 2021 வரை Msme-களுக்கு ரூ.1,000 கோடி இணை இல்லா கடன்களை வழங்கப் போகும் பேடிஎம்!
குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சம் வரை கொலேட்டரல் இல்லா கடன்களை சிறு, குறு வணிகர்களுக்கு தரவுள்ளதாக தெரிவித்துள்ளது பேடிஎம்.
டிஜிட்டல் நிதிச் சேவை தளமான 'பேடிஎம்' எம்எஸ்எம்இ-களுக்கான இணை-இல்லா கடன்களை (collateral-free loans) கடந்த நிதியாண்டில் இருந்த ரூ.550 கோடியிலிருந்து மார்ச் 2021க்குள் ரூ.1000 கோடியாக விரிவுபடுத்துவதாகக் அறிவித்துள்ளது.
பேடிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது இணை இல்லாத கடன்களை விரிவுப்படுத்துவதாகக் கூறிய பேடிஎம், குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சம் வரை கொலேட்டரல் இல்லா கடன்களை சிறு, குறு வணிகர்களுக்கு தரவுள்ளதாக தெரிவித்துள்ளது. Paytm Lending இன் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் குப்தா கூறுகையில்,
“எங்கள் இணை இல்லாத உடனடி கடன்கள் மூலம், பாரம்பரிய வங்கித் துறையினரால் கைவிடப்பட்ட மற்றும் கடன்களை எளிதில் அணுக முடியாத கிரானா கடைகள் மற்றும் சிறு, குறு வணிக உரிமையாளர்களுக்கு உதவ முயற்சிக்கிறோம்,” என்றார்.
"முன்னோக்கிச் செல்லும்போது, நாங்கள் குறிப்பாக மின்னணு தரவு பிடிப்பு (electronic data capture- EDC) வணிகர்கள் மீது கவனம் செலுத்துவோம், மேலும் அவர்களின் ஈடிசி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அதிக கடன் தொகையை வழங்குவோம், என்று அவர் மேலும் கூறினார்.
Paytm; அதன் பேடிஎம் பிசினஸ் ஆப் வழியாக ‘வணிகக் கடன் வழங்கும் திட்டத்தின்' கீழ் இந்த இணை இல்லா கடன்களை வழங்குகிறது. ஒரு வணிகரின் தினசரி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் கடன்-தகுதியை இந்த வழிமுறை தீர்மானிக்கிறது மற்றும் முன் தகுதி வாய்ந்த கடன் வழங்கலுக்கு வந்து சேர்கிறது.
Paytm இந்த செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது; கடன் விண்ணப்பத்தில் தொடங்கி, கடன் வழங்குவதற்கான ஒப்புதல் அளிப்பது வரை, கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. NBFCகள் மற்றும் வங்கிகளுடன் கூட்டாக இக்கடன்கள் வழங்கப்படுகிறது. கடன் திருப்பிச் செலுத்துதல், Paytm உடனான வணிகரின் தினசரி செட்டில்மெண்ட்டில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும், இந்த கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் ஏதும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Paytm-ன் ‘ஆல் இன் ஒன் ஆண்ட்ராய்டு பிஓஎஸ்’ சாதனம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ-களிடம் இருந்து, பேடிஎம் வாலட், யுபிஐ கொண்ட ஆப்’கள் மூலம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட அனைத்து கட்டண முறைகளையும் ஏற்க உதவியுள்ளது என்று பேடிஎம் தெரிவித்துள்ளது.
பேடிஎம்-ன் பிசினஸ் ஆப், சிறு வணிகர்கள், தங்களின் பேமண்ட்களை உடனடியாக சரிபார்க்கவும், வங்கிக் கணக்கில் ஏற்பட்டுள்ள கடந்த செலவுகள், செட்டில்மெண்ட்களை கண்காணிக்கவும் உதவுகிறது.
இந்த ஆப் 10 பிராந்திய மொழிகளில் உள்ளதால் சிறு வணிகர்களுக்கு சுலபமாக இருக்கும். இந்த மாதம் தொடக்கத்தில், Paytm; Marg ERP உடன் கூட்டுசேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட பணத் தீர்வு Margpay பயன்படுத்திக் கட்டணச் சேவைகளை அறிமுகம் செய்தது.
அக்டோபர் 2020ல், Paytm அதன் கட்டண நுழைவாயிலில் அனைத்து வகையான நிதி பரிமாற்றங்களுக்கும் ஒரே நாள் தீர்வு வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. பேடிஎம்-ன் இந்த பல்வேறு திட்டங்கள் சிறு, குறு வணிகர்களுக்கு வர்த்தகம் புரிய சுலபமான வழிகளை அளித்துள்ளது என்று தெரிகிறது.
கட்டுரையாளர்: சஹேலி