பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கார் விபத்தில் கைதாகி விடுதலை ஆனதாக செய்தி!
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தில்லியில் கடந்த மாதம் காவல்துறை அதிகாரி கார் மீது மோதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னணி நிதி நுட்ப நிறுவனமான பேடிஎம் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஜய் சேகர் சர்மா, கடந்த மாதம் தில்லியில், டிசிபி ஒருவரது கார் மீது மோதியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. பின்னர், இந்த வழக்கும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மாதம் தாறுமாறாக கார் ஓட்டிச்சென்றதாக விஜய் சேகர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக இந்திய எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதலில் செய்தி வெளியிட்டது.
பின்னர், தில்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி, சுமன் நல்வா, இந்தத் தகவலை உறுதிப்படுத்தி விஜய் சேகர் சர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்த வழக்கும் முதல் தகவல் அறிக்கை படி,
விஜய் சேகர் சர்மா ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார், பிப்ரவரி 22 தேதி, தில்லியின் அரபிந்தோ மார்க் பகுதியில், தெற்கு காவல்துறை அதிகாரி (டிசிபி) வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.
இந்த காரை தீபக் குமார் எனும் காவலர் ஓட்டிச்சென்றார். அந்த இடத்தில் பணியில் இருந்தவர், பெட்ரோல் நிலையத்திற்கு காரை எடுத்துச்சென்றிருக்கிறார்.
போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட காரில் காத்திருந்த போது, லேண்ட் ரோவர் கார் வந்து மோதியதாக தீபர் குமார் குறிப்பிட்டுள்ளார். அந்த காரின் டிரைவர் நிற்காமல் சென்று விட்டதாகவும், ஆனால் காரில் இருந்தவரையும், கார் நம்பரையும் அவரால் பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவரை தன்னால் அடையாளம் காண முடியும் என அவர் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையில் விசாரித்த போது இந்த கார் குருகிராம் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. விஜய் சேகர் சர்மா பயன்பாட்டிற்கு காரை கொடுத்ததாக நிறுவனம் கூறியது. இதனையடுத்து,
மாளவியா நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விஜய் சேகர் சர்மா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்