'சொர்க்கத்தில் உள்ள சாலைகளும் இப்படித்தான் இருக்கும்' - Pepperfry இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி லடாக்கில் மரணம்!
பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 51 வயதான அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் காலமானார். பெப்பர் ஃப்ரையின் மற்றொரு இணை நிறுவனரான ஆஷிஷ் ஷா இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 51 வயதான அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் காலமானார். பெப்பர் ஃப்ரையின் மற்றொரு இணை நிறுவனரான ஆஷிஷ் ஷா இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
“எனது நண்பரும், ஆலோசகரும், சகோதரரும், ஆத்ம தோழருமான அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் இன்று இரவு (ஆகஸ்ட் 07) மறைந்தார் என்பதை தெரிவித்துக் கொள்வதில் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அம்பரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்,,," எனப் பதிவிட்டுள்ளார்.
அம்பரீஷ் மறைவு செய்திக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடைய சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த அம்பரீஷ் மூர்த்தி?
1994 இல் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் முடித்த அம்பரீஷ் மூர்த்தி, 1994-1996 இல் IIM கல்கத்தாவில் MBA பட்டம் பெற்றார். பின்னர், பிரபல சாக்லைட்ஸ் தயாரிப்பு நிறுவனமான கேட்பரியில் மேலாண்மைப் பயிற்சியாளராகச் சேர்ந்தார். கேரளாவில் அந்த நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேலாளராக பணியாற்றி வந்தார்.
படிக்கிற காலத்தில் கூட வீட்டுக்கு அருகிலேயே டியூஷன் சென்டரில் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து பணம் சம்பாதித்தவர். 'டியூட்டர்ஸ் பீரோ' என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பாடம் நடத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2001ல் கேட்பரியில் இருந்து வெளியேறினார். பின்னர், ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சியில் மியூச்சுவல் ஃபண்டில் சேர்ந்தார். அவர் 2003ல் நிதி பயிற்சி முயற்சியான ஆரிஜின் ரிசோர்சஸைத் தொடங்கினார், ஆனால், அது பெரிய வெற்றியைக் காணவில்லை.
இதனால் மீண்டும் 2005ல் பிரிட்டானியாவில் சந்தைப்படுத்தல் மேலாளராக பணிக்குச் சேர்ந்தார். ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல், பிரிட்டானியா மற்றும் லெவிஸில் சிறிது காலம் பணியாற்றினார். இ-பேயில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்
ஈபே இந்தியாவில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இ-காமர்ஸ் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருவதை உணர்ந்த மூர்த்தி, சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்க முடிவு செய்தார்.
பெப்பர் ஃப்ரை தொடக்கம்:
2011 ஆம் ஆண்டில், ஆஷிஷ் ஷாவுடன் சேர்ந்து, பெப்பர்ஃப்ரை, வீட்டு அலங்காரம் மற்றும் தளவாடங்களுக்கான மின் வணிக தளத்தை தொடங்கினார்.
2013ல் பர்னிச்சர்-வீட்டு அலங்காரத்திற்கு கிராக்கி இருப்பதை உணர்ந்து, அந்தத் தொழிலில் கவனம் செலுத்தினார். பெப்பர்ஃப்ரை நிறுவப்பட்டபோது நார்வெஸ்ட் வென்ச்சர் $5 மில்லியன்களை முதலீடு செய்தது. அதன் பிறகு, Pidlite Ventures, Fevicol மற்றும் Goldman Sachs உள்ளிட்ட பிற முதலீட்டாளர்களிடமிருந்து 240 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.
இறுதியாக, 2021ல், ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் முகேஷ் சர்மா ஃபேமிலி அறக்கட்டளை 10 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. TraxN தரவுகளின்படி, நிறுவனத்தின் மதிப்பு $460 மில்லியன் ஆகும். தற்போது, பெப்பர் ஃப்ரை, ஹோம் சென்டர், அர்பன் லேடர், ஃபுர்லென்கோ, வேக் ஃபிட் போன்ற நாட்டின் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது.
அம்பரீஷ் மூர்த்திக்கு மலையேற்றம் பிடிக்கும். முடிந்த போதெல்லாம் மும்பையில் இருந்து தனக்குப் பிடித்தமான லடாக்கிற்கு பைக்கில் செல்வது வழக்கம். ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் உள்ள சதர் மலையேற்றத்தில் மலையேற்ற அனுபவம் தனது சிறந்த அனுபவங்களில் ஒன்று என பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு:
திங்களன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக அவரது ரோடு ட்ரிப் குறித்து பதிவிட்டது வைரலாகி வருகிறது.
“பைக் ஓட்டுபவர்களுக்கு சொர்க்கத்தை உருவாக்க கடவுள் எப்போதாவது வந்திருந்தால், சொர்க்கத்தில் உள்ள அனைத்து சாலைகளும் இப்படித்தான் இருக்கும் - தட்டையான, கருப்பு தாருக்கு, நடுவில் என் விமானம் உருண்டு ஓடுகிறது. இது மணாலி-லே நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள விமானம்,” எனப் பதிவிட்டிருந்தார்.
“மேலும், சமவெளிகளின் நடுவில், தேவதூதர்களுக்கு விருந்து வைப்பதற்கான விருப்பங்களை கடவுள் கொடுப்பார். ஏஞ்சலிக் பைக்கர்ஸ் பார்ட்டி, பிக்னிக்”
"நான் இன்று ஒரு தேவதையாக இருக்க முயற்சித்தேன், ஆனால் கடவுள் எனக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார். அவர் அடிப்படையில் என்னை ஒரு தேவதையாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பயணம் செய்வதால் தான் நான் இருப்பதை உணர்கிறேன்," மற்றும் "மோட்டார் சைக்கிள் டைரிஸ்” என தனது சாகச பயணம் குறித்து பதிவிட்டிருந்தார்.