Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2020 லாக்டவுனில் ஹிட் ஆன தமிழ் யூடியூப் சேனல்கள்!

தானும் வளர்ந்து தன்னை சார்ந்தோரையும் வளர செய்து அழகு பார்க்கும் யூ டியூப், 2020ல் புதிதாக அழகாக்கிய தமிழ் யூடியூப் சேனல்களின் தொகுப்பு இது.

2020 லாக்டவுனில் ஹிட் ஆன தமிழ் யூடியூப் சேனல்கள்!

Tuesday December 15, 2020 , 4 min Read

இறுதியாக புதிய ஆண்டு வந்துவிட்டது. ஒரு வழியாக 2020ம் ஆண்டும் முடியபோகிறது. 2021க்குள் நுழையும் முன், இயர் எண்டிலுள்ள நாம், இந்தாண்டின் டாப் 5 சமாச்சாரங்களை அலசி ஆராய கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில், எந்தவொரு தடையுமின்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக மாறியுள்ள யூடியூப்பில், 2020ல் சிறந்த விளங்கிய தமிழ் சேனல்களை காணுவது அவசியமாகும்.


2005ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட யூடியூப், இன்று சமூக வலைதளங்களின் ராஜாவாக திகழ்கிறது. உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் மூன்றாவது வலைத்தளமாகவும் உயர்ந்து நிற்கிறது. தானும் வளர்ந்து தன்னை சார்ந்தோரையும் வளரச் செய்து அழகு பார்க்கும் யூடியூபில் 2020ல் புதிதாக கால்பதித்து பிரபலமாகிய தமிழ் யூடியூப் சேனல்கள் தொகுப்பு இது.


குறிப்பாக பிரபலமாக இருக்கும் செலிபிரிட்டிக்கள் மற்றும் சிலர் லாக்டவுன் சமயத்தில் தொடங்கி ஹிட் அடித்த யூட்யூப் சேனல்களை தொகுத்துள்ளோம்.

youtube 2020

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியின் ஆங்கர், சிங்கர், சின்னத்திரை நாயகிகள் என சகலத்தினரும் கோவிட் காலத்தில் களத்தை மாற்றி யூடியூப்பில் கடையை திறந்து கல்லாக்கட்டத் தொடங்க, லாக்டவுன் காலத்தில் மினி விஜய் டிவியே யூடியூப்பில் உருவாகிக் கொண்டிருந்தது.


‘வாயை மட்டுமே நம்பி’ ஆங்கரிங்கின் முலம் மற்றவர்களை வாய் திறந்து சிரிக்க வைக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே யூடியூப் தளத்திலும் அதே பணியை வெகு சிறப்பாக செய்து வருகிறார்.


எண்டர்டெயின்மென்ட், ஃபுட் ரீவ்யு, டெக்னாலஜி ஆகிய கேட்டகரியில் வ்ளாகிங் தான் பிரியங்கா தேர்ந்தெடுத்த களம். கடந்த மே மாதம் அவரது பெயரிலே தொடங்கப்பட்ட சேனல் சரசரவென சப்ஸ்கிரைப்பர்களை அள்ளிக் குவித்தது.


தீபாவளி ஷாப்பிங், தம்பி கல்யாணம், ஷூட்டிங் ஸ்பாட், ரெசிப்பிக்கள் என வழக்கமான அவரது அன்றாட வாழ்நாள் சமாச்சாரங்களை வ்லாகிங் செய்கிறார்.

அப்லோடிய 30 வீடியோக்களில் 20 வீடியோக்கள் டாப் ஹிட். ஒவ்வொரு வீடியோவையும் 1.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். வீடியோக்களின் இடை இடையே ஒலிக்கும் கவுண்டர்களே வீடியோக்களின் ஸ்பெஷல். இதுநாள் வரை சேனலை 8 லட்சம் மக்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

ஹூசைன்-மணிமேகலை

விஜய் டிவியின் மற்றொரு செலிபிரிட்டியான மணிமேகலை அவரது கணவருடன் இணைந்து ஆரம்பித்த ‘ஹூசைன் மணிமேகலை’ சேனல் ஆறே மாதத்தில் அரை மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.


அக்சுவல்லா, லாக்டவுன் காலத்தில் கிராமத்து பக்கம் சென்றவர்கள், அங்கேயே சிக்கிக் கொண்டனர். சென்னைக்கு திரும்ப முடியாமல், ஒரு மாதத்திற்கும் மேலாக கிராமத்திலே தங்கியவர்கள், அங்கு புதிதாக எக்ஸ்பீரியன்ஸ் செய்த விஷயங்களை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அப்லோடி வந்தனர்.


ஃபேஸ்புக்வாசிகள் இடமிருந்து அவ்வீடியோக்களுக்கு நல்ல ரீச் கிடைக்கவே, யூடியூப் பக்கம் திரும்பினர். நடிப்பு வேலையைவிட யூடியூப்பில் வீடியோ பதிவேற்றுவதை முழுநேர வேலையாக்கிக் கொண்ட இருவரும், மண்டையை கசக்கி கன்டென்ட்களை யோசித்து வாரம் நாலு வீடியோக்களை அப்லோடி வருகின்றனர். ஒவ்வொரு வீடியோவிற்கும் வியூஸ் எகிறி கிடக்கிறது.

அரசு துவங்கிய ‘கல்விடிவி' சேனல்

கோவிட் தொற்றால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிய சமயத்தில், ஆன்லைன் வகுப்புகள் கைகொடுத்தன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பை எடுக்கத் துவங்கிய சமயத்தில், அரசும் யூடியூப் வழி ஆன்லைன் கல்விச் சேவையை தொடங்கியது.


கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேனலில் 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாட வீடியோக்களும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இதுநாள் வரை 2,600 வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. சேனலை 59 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள நிலையில் 1லட்சத்து 53 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

யூடியூப் சேனலை தொடர்ந்து சேனலுக்கு சேட்டிலைட் ஒளிபரப்புக்கான அனுமதி வழங்கப்பட்டதால், கேபிள் தொலைக்காட்சி மற்றும் டி.டி.எச் தொழில்நுட்பம் மூலமும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஷா பூ த்ரீ

வீக்கெண்ட் மோடில் இருந்து வெளியேவர கஷ்டப்படுபவர்களுக்கு இந்த சேனலில் உள்ள ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தால் போதும், ‘சாதிக்கபிறந்தவன்டா நீ’, ‘வாடா வாடா உன்னால முடியும்டா’ போன்ற டைலாக்குகள் மண்டையில் எழுந்து புது சக்தியை எழுப்பும்.


யெஸ், சேனலில் பல துறைகளில் சாதித்தவர்களின் வெற்றிக் கதைகளும், அவர்கள் அடைந்த அவமானங்கள் மற்றும் தோல்விகளைப் பற்றி பேசும் மோட்டீவேஷ்னல் வீடியோக்கள் நிறைந்து கிடக்கின்றன.

சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, விளையாட்டு வீரர்கள் முதல் தொழில்முனைவோர் வரை, அறிஞர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை என உலகெங்கிலும் உள்ள வெற்றிகரமான மக்களின் வாழ்க்கைக் கதைகளை அழகாக பேசுகிறார் ஷா.

மூச்சுவிடக் கூட கேப் விடாமல் பேசும் ஆர்.ஜே பணி செய்கிறார் ஷா. கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சேனலை 4லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ஒவ்வொரு வீடியோவின் கன்டென்ட்டும், அதை ஷா கன்வே செய்யும் முறையே சேனலில் வெற்றிக்கான சீக்ரெட்.

தியேட்டர் டி – கதை சொல்லி கனி

காக்கா கதை தொடங்கி பக்கத்துவீட்டு கதை வரை பலருக்கும் கதை கேட்பது என்றால் அதிகமாகவே பிடிக்கும். ஆனால், இங்கு கதை சொல்லிகள் தான் குறைவு. அந்த வெற்றிடத்தை உணர்ந்த இயக்குனர் அகத்தியனின் மகளான கனி, கதை சொல்லியாக மாறி யூடியூப்பில், தியேட்டர் டி (Theatre D) என்ற சேனலை தொடங்கியுள்ளார்.


அதுவும், பாண்டியர், பல்லவர், அக்பர் என்ற ராஜாக்களின் கதைகள். 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' நிகழ்ச்சியின் கீழ் வெவ்வேறு காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களின் சுவாரஸ்யக் கதைகளை வெகு அழகாக எடுத்துரைக்கிறார் கனி. அவரது கணவரும், இயக்குனருமான திரு, இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு செய்து தயாரிக்கிறார்.

கனியின் கதை சொல்லும் அழகே தனி. அதற்காகவே ரசிகர் கூட்டமும் உண்டு. அவரது தமிழ் உச்சரிப்பிற்காக எகிறிய கதை கேட்பாளர்களின் எண்ணிக்கையால், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’வை தொடர்ந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘பொன்னியின் செல்வன்’ கதையை கையில் எடுத்துள்ளார். அதிலும் 24 எபிசோடுகளை முடித்து அவருக்கென்று ஒரு கூட்டத்தையும் சேர்த்துள்ளார்.

லாக்டவுனில் தொடங்கிய இச்சேனலை இதுவரை 28 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அக்காவின் சேனலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கனியின் தங்கையான நடிகை விஜயலெட்சுமியும் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.

குக் வித் வனிதா

குக் வித் கோமாளியின் டைட்டிலை வென்ற கையோடு நேராக யூடியூப்பில் ‘வனிதா விஜயகுமார்’ என்ற பெயரிலே குக்கிங் சேனலை தொடங்கினார் நடிகை வனிதா விஜயகுமார். ஆல்ரெடி சமையற்கைலையை முறைப்படி கற்றவர், அவர் கத்துக் கொண்ட மொத்தத்தையும் ஒவ்வொரு வீடியோவிலும் இறக்கினார்.

குக்கிங்கில் தொடங்கிய பயணம் மேக்கப் டுடோரியல் மற்றும் கல்யாண அப்டேட்கள் வரை பயணித்து, சேனலுக்கும் நல்ல ரீச்சை சேர்த்தது. சேனலை 6 லட்சத்து 42 ஆயிரம் சப்ஸ்கிரைப் செய்துநிலையில், 10 மாதங்களில் 136 வீடியோக்களை அப்லோடு செய்துள்ளார்.