Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

டைம் இதழின் செல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பிரியம்வதா நடராஜன்!

டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் ஆலியா பட் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் பெயர்களும் உள்ளன. குறிப்பாக அமெர்க்க யேல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், தமிழகத்தைச் சேர்ந்த பிரியம்வதா நடராஜன்

டைம் இதழின் செல்வாக்குமிக்க இந்தியர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பிரியம்வதா நடராஜன்!

Thursday April 18, 2024 , 3 min Read

டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் ஆலியா பட் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் பெயர்களும் உள்ளன. குறிப்பாக அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், தமிழகத்தைச் சேர்ந்த பிரியம்வதா நடராஜன் பெயரும் உள்ளது.

நடிகர் ஆலியா பட் மற்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உட்பட பல இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் கலைஞர்கள், ஆளுமைகள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள், இவர்கள் தங்கள் துறையில் செலுத்திய தாக்கத்தின் மூலம் டைம் இதழால் கவனம் பெற்றவர்களாவர்.

டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சிறு குறிப்பு:

time list influential indians

பிரியம்வதா நடராஜன்:

பிரியம்வதா நடராஜன் ஒரு இந்தியர், ஆனால் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான யேல் பல்கலைக் கழகத்தில் வானியல் மற்றும் பௌதிகத் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். இயற்பியலின் புதிரான, பிரபஞ்ச இயக்கத்தின் எதிர் பருப்பொருளான டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜியை மேப்பிங் செய்வதில் அவர் பணியாற்றியதற்காக குறிப்பிடத்தக்கவர். பிரியம்வதா நடராஜன் தமிழ்நாட்டில் பிறந்தவர். டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். அமெரிக்காவின் மாசுசெசட்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், கணிதத்தில் பட்டம் பெற்றார்.

Priyamvada

அவர் எம்ஐடியின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தில் அறிவியல் வரலாறு மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றார். பிரியம்வதா நடராஜன் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியல் படிப்பில் முனைவர் பட்டத்தை முடித்தார், அப்போது அவர் மதிப்புமிக்க ஐசக் நியூட்டன் ஸ்டூடண்ட்ஷிப்பும் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோஷிப்பும் பெற்றார்.

இவர் பிரம்மாண்டமான கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன, வளர்கின்றன மற்றும் காலப்போக்கில் அவற்றின் சுற்றுப்புறங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதில் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஏராளமான விருதுகளை வென்றவர் பிரியம்வதா நடராஜன். 2022ல், பிரியம்வதா நடராஜனுக்கு லிபர்ட்டி சயன்ஸ் சென்டரின் ஜீனியஸ் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்கன் பிசிகல் சொசைட்டி (ஏபிஎஸ்), அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ், அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயினஸ் (ஏஏஏஎஸ்), குகன்ஹெய்ம் ஃபவுண்டேஷன் விருதுகளையும் ராட்கிளிஃப் இன்ஸ்டிட்யூட் போன்ற பல நிறுவனங்களின் பெல்லோஷிப்களையும் அவர் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மேப்பிங் தி ஹெவன்ஸ்: தி ரேடிகல் சயின்டிஃபிக் ஐடியாஸ் தட் ரிவீல் தி காஸ்மோஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

ஆலியா பட்:

டைம் இதழுக்காக பிரிட்டன் திரைப்பட இயக்குநர் டாம் ஹார்ப்பர், ஆலியா பட் பற்றி எழுதிய போது 'வலுவான திறமை’ என்று குறிப்பிட்டார். ஆலியா பட்டை அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர் அழகிலும் நடிப்பிலும் மயங்கிக் கிடப்பவர்கள் கோடி கோடி. பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள பட், இந்தியாவில் தங்கியிருந்து, ஹிந்தித் திரையுலகில் முக்கியமாக பணிபுரிகிறார். அவர் தேசிய திரைப்பட விருதைப் பெற்றவர், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். குக்கியின் பிராண்ட் தூதராக உள்ளார். கடந்த ஆண்டு நெட்ஃபிக்ஸின் "ஹார்ட் ஆஃப் ஸ்டோன்" மூலம் சர்வதேச அளவில் அறிமுகமானார்.

Alia Bhat

தேவ் படேல்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல். “Slumdog Millionaire”-ன் மூலம் திரைவெளியில் தெறிக்கும் அறிமுகம் கண்டவர். 2008-ல் இதன் மூலம் இவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இந்த ஆண்டு 'Monkey Man' படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

சாக்‌ஷி மாலிக்:

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக். சமீபத்தில் உலகை உலுக்கிய மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிர்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக எழுந்த பாலியல் புகாரில் தைரியமாக எதிர்த்து எழுந்தவர் சாக்‌ஷி மாலிக்.

"இந்தப் போராட்டம் இனி இந்தியாவின் பெண் மல்யுத்த வீரர்களுக்கு மட்டும் அல்ல. இது மீண்டும் மீண்டும் பேச்சிலா, எதிர்ப்பில்லா மவுனத்திற்கும் அழுத்தப்படும், அமுக்கப்படும் இந்தியாவின் மகள்களுக்கானது," என்றார் சாக்‌ஷி மாலிக்.
Sakshi Malik clinches bronze

அஜய் பாங்கா:

இந்தியரான அஜய் பாங்கா, உழைப்பால் முன்னுக்கு வந்து இன்று உலக வங்கியின் தலைவராக உயர்ந்துள்ளார். டைம் பத்திரிகையில் அமெரிக்க நிதிக் கருவூல செயலாளர் ஜேனட் எல்லென் பாங்காவை, "ஒரு அத்தியாவசிய நிறுவனத்தை உருமாற்றம் செய்யத்தக்க மகத்தான பணியை மேற்கொள்வதற்கான திறமை மற்றும் உந்துதல்" கொண்ட தலைவர் என்று விவரித்தார். பாங்கா புனேவில் பிறந்தார் மற்றும் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

ஜிகர் ஷா:

அமெரிக்க எரிசக்தி துறையின் கடன் திட்ட அலுவலகத்தின் இயக்குனர் ஜிகர் ஷா, “உலகம் கண்டிராத மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றிற்கு ஜிகர் ஷா தலைமை வகிக்கிறார்” என்று ரிச்சர்ட் பிரான்சன் கூறுகிறார். அவர் இந்தியாவில் பிறந்தவர் என்றாலும் ஒரு வயதாக இருக்கும் போது அமெரிக்கா சென்றார்.

அஸ்மா கான்:

பிரிட்டிஷ் உணவகம் மற்றும் சமையல் புத்தக எழுத்தாளர், அஸ்மா கான் இந்தியாவில் பிறந்தவர். லண்டன் ரெஸ்டாரன்ட், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் என்ற புகழ்பெற்ற உணவகத்தின் பின்னணியில் இருப்பவர்.

“அஸ்மாவின் உணவுத் தயாரிப்பும் சுவையும் ஆச்சரியமாக இருக்கிறது. இது உணவகத்தில் சமைக்கப்படும் உணவைப் போல சுவைக்காது - அதுவே மிக உயர்ந்த பாராட்டு," என்று பத்மா லட்சுமி டைம் இதழுக்கு இவரைப்பற்றி எழுதினார்.