Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

UPI போலவே ULI - சிக்கல் இல்லாது கடன் பெற ஆர்பிஐ அறிமுகம் செய்யும் தளம்!

கடன் பெற விண்ணப்பிப்பவர் குறித்த தகவல்கள், நில ஆவணங்கள் உட்பட முழுமையான விபரங்கள், தகவல் சேவை அளிப்பவர்கள் வாயிலாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் Unified Lending Interface மூலம் இனி பெறமுடியும்.

UPI போலவே ULI - சிக்கல் இல்லாது கடன் பெற ஆர்பிஐ அறிமுகம் செய்யும் தளம்!

Wednesday August 28, 2024 , 2 min Read

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பணம் செலுத்தும் செயலிகள் இருப்பது போல் எளிதாகக் கடன் பெறவும், வழங்கவும் யு.எல்.ஐ., எனும் புதிய வசதி விரைவில் அமலாகும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டை முன்னிட்டு, பெங்களூரில் டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ரா மாநாடு தொடங்கியது. இதைத் தொடக்கி வைத்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது,

"கடன் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாத தொழில்நுட்பத் தளம் கடந்த ஆண்டே சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதை இனி, 'யுனிபைட் லெண்டிங் இன்டர்பேஸ்' (Unified Lending Interface) அதாவது, யு.எல்.ஐ., என அழைக்கவுள்ளோம்," என்றார்.

கடன் பெற விண்ணப்பிப்பவர் குறித்த தகவல்கள், நில ஆவணங்கள் உட்பட முழுமையான விபரங்கள், தகவல் சேவை அளிப்பவர்கள் வாயிலாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் பெற முடியும்.

RBI Governor

முறைப்படுத்தப்பட்ட நிரலாக்கம் (programming) வாயிலாக, கடன் விண்ணப்பதாரரின் விபரங்களை விரைவாக சரிபார்க்க இது வழிவகை செய்கிறது. மேலும், விண்ணப்பதாரரின் ஒப்புதலுடன் தகவல்கள், சுய விவரங்கள் சரிபார்க்கப்படும் என்பதால் இதில் தனிப்பட்ட தகவல் உரிமை மீறுவதற்கான பேச்சுக்கே இடமில்லை.

தொழில்நுட்ப சேவைகளின் சிக்கலான பரிசீலனைகளை யு.எல்.ஐ., குறைத்து, விரைவான கடன் சேவையை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்க முடியும். குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுகடன் பெறுவோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நேரம் பெருமளவு குறையும், என்றார்.

யூனிபைடு லெண்டிங் இண்ட்ர்ஃபேஸ் என்றால் என்ன?

டிஜிட்டல் கிரெடிட் டெலிவரிக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள், கணக்கு ஒருங்கிணைப்பாளர்கள், வங்கிகள், கடன் தகவல் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அடையாள அதிகாரிகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் கடன் மதிப்பீட்டிற்குத் தேவையான தரவு கிடைக்கிறது. இருப்பினும், இந்த தரவுத் தொகுப்புகள் தனித்தனி அமைப்புகளில் உள்ளன, விதிமுறையின் கீழ் கடனை வழங்குவதற்கு தடைகளாக உள்ளன.

இந்த தளமானது பல தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளின் சிக்கலைக் குறைக்கும், மேலும் கடன் வாங்குபவர்கள் தடையில்லாமல் கடன் வழங்குவதன் பலனைப் பெறவும், பல ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் தேவையையும் குறைத்து கடன் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தும்.